கு. ஞானசம்பந்தன்
கு. ஞானசம்பந்தன் (G. Gnanasambandam) என்பவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர் ஆவார்.[1] இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான்[2][3] எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரை மாநகரில் வசித்து வருகிறார்.[4] மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது இக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார். நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராகவும் உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி இதன் நிறுவனராக இருந்து வருகிறார். தமிழ்த்துறை வழிகாட்டுநர்
எழுதியுள்ள நூல்கள்பல்வேறு அச்சிதழ்களில் பல முக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் கீழ்க்காணும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.
இவற்றோடு, இவர் எழுதிய "கலகல கடைசிப் பக்கம்", "கேள்வி - பதில்" எனும் இரண்டு புத்தகங்களும் விரைவில் வெளிவரவிருக்கிறது. ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகள்இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் ஒலிநாடாக்களாகவும் குறுந்தகடுகளாகவும் கீழ்காணும் தலைப்புகளில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்வுகள்
தமிழ்ச் சொற்பொழிவுகள்தமிழ்நாடு தவிர தில்லி, மும்பை, கல்கத்தா, திருவனந்தபுரம், ஹைதராபாத், அந்தமான் என இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்களில் சிறப்புச்சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காக சிங்கப்பூர், மலேசியாத் தலைநகர் கோலாலம்பூர், அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் அரபு நாடுகளில் சவூதி அரேபியா, குவைத், ஜெத்தா என அயல்நாட்டுத் தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்று வந்துள்ளார். நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்
விருது மற்றும் சிறப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia