இயற்கை எல்லைஇயற்கை எல்லை (natural border) என்பது இறைமையுள்ள நாடுகளுக்கிடையே அல்லது அவற்றின் மாநிலங்களுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு ஆகும். மேற்கத்திய பண்பாட்டில் உரூசோவின் இயற்கை கருத்துருக்களாலும் தேசியவாதக் கருத்துருக்களாலும் 17வது நூற்றாண்டில் "இயற்கையான எல்லைக்கோடுகளின் கோட்பாடு" உருவானது.[1] சீனாவில் இயற்கையோடிணைந்த கட்டுப்பாட்டு வலயங்கள் இதற்கு முன்னமேயே கடைபிடிக்கப்பட்டுள்ளன.[2] இயற்கையோடிணைந்த எல்லைகள் போர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன; இத்தகைய இயற்கை வரம்புகளை தாண்டுவது படையெடுக்கும் எதிரிகளின் காலாட்படைகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்துவதால் எல்லைகளைக் காப்பது படைத்துறைக்கு எளிதாகின்றது. இயற்கையான எல்லைகளை எட்டும்வரை இராச்சியத்தை விரிவாக்கிக் கொண்டு செல்வது முந்தைய அரசர்களின் முதன்மை இலக்காக இருந்தது. காட்டாக உரோமைக் குடியரசும் பின்னர் உரோமைப் பேரரசும் தங்கள் ஆட்பகுதியை சில இயற்கை அரண்களை எட்டும் வரை தொடர்ந்தனர்: முதலாவதாக ஆல்ப்ஸ், பின்னர் ரைன் ஆறு, தன்யூப் ஆறு மற்றும் சகாரா பாலைவனம். ஐரோப்பாவின் நடுக்காலத்திலிருந்து 19வது நூற்றாண்டு வரை, பிரான்சு தனது எல்லைகளை ஆல்ப்சு, பிரனீசு, மற்றும் ரைன் ஆறு வரை விரிவாக்கி வந்தது.[3] இத்தகைய இயற்கை எல்லைகள் மாறும்போது நாடுகளுக்கிடையே ஆட்சிப்பகுதிக் குறித்த பிணக்குகள் ஏற்படுவதுண்டு. இதற்கு காட்டாக அமெரிக்காவிற்கும் மெக்சிக்கோவிற்கும் ரியோ கிராண்டே ஆற்றையொட்டிய எல்லைக்கோடு வரையறுக்கும் ஆட்பகுதி குறித்த பன்முறைச் சண்டைகளைக் குறிப்பிடலாம். மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia