இயான் நிப்போம்னிசி
இயான் அலெக்சாந்திரவிச் நிப்போம்னிசி (Ian Alexandrovich Nepomniachtchi, உருசியம்: Ян Алекса́ндрович Непо́мнящий, ஒ.பெ யான் அலெக்சாந்திரவிச் நிப்போம்னிஷி, பஒஅ: [ˈjan ɐlʲɪkˈsandrəvʲɪtɕ nʲɪˈpomnʲɪɕːɪj]( நிப்போம்னிசி 'டோட்டா' என்ற இணைய விளையாட்டின் ஒரு முன்னாள் ஆட்டக்காரரும் ஆவார்.[1] [2] சதுரங்க வாழ்க்கைஆரம்ப கால வாழ்க்கையில்நிப்போம்னிசி நான்கு வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார். இவரது பயிற்சியாளர் வாலண்டின் எவ்டோகிமென்கோவின் வழிகாட்டுதலின் கீழ், உலக மற்றும் ஐரோப்பிய வாகையாளர் போட்டிகளில் பங்கேற்றார். [3] இவர் மூன்று முறை ஐரோப்பிய இளையோர் சதுரங்க வாகையாளர் போட்டியை வென்றுள்ளார். 2000 ஆம் ஆண்டில், அவர் 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வென்றார். 2001 மற்றும் 2002 இல், அவர் 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வென்றார். [4] 2002 இல், நெபோம்னியாச்சி 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் உலக இளைஞர் சதுரங்க வாகையாளர் போட்டியை தனது போட்டியாளரான மேக்னஸ் கார்ல்சனை இறுதிச் சுற்றில் முந்தி வென்றார். [5] உலக சதுரங்க வாகையாளர் போட்டிஏப்ரல் 2021 இல், நிப்போம்னிசி 2020/2021 கேண்டிடேட்ஸ் போட்டியை 8.5/14 புள்ளிகளுடன் (+5-2=7) வென்றார். [6]இப்போட்டியை வென்றதன் மூலம் 2021 உலக சதுரங்க வாகையாளர் போட்டிக்கு நெப்போ தகுதி பெற்றார். இப்போட்டியில் மேக்னசு கார்ல்சனுடன் மோதிய நெப்போ, 3½-7½ என்ற கணக்கில் ஆட்டத்தை இழந்தார். மேக்னசு தனது உலக வாகையாளர் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். தனிப்பட்ட வாழ்க்கைநிப்போம்னிசி ஒரு யூதர் ஆவர்.[7][8] இவர் "நெப்போ" என்ற புனைப்பெயரால் குறிப்பிடப்படுகிறார். [9] இவர் உருசிய சமூகப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[10] இவர் 2006 இல் டோட்டா என்ற இணைய விளையாட்டிற்கு அறிமுகமானார். பல டோட்டா போட்டிகளில் பங்குபெற்று அப்போட்டிகளில் பல வெற்றிகளையம் குவித்துள்ளார்.[11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia