இரங்கிலா ரசூல்
இரங்கிலா ரசூல் (Rangila Rasul) ( வண்ணமயமான தீர்க்கதரிசி என்று பொருள்) என்பது 1920களில் பஞ்சாப்பில் ஆர்ய சமாஜத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதலின் போது வெளியிடப்பட்ட ஒரு புத்தகம் ஆகும்.[1] சர்ச்சைக்குரிய இந்தப் புத்தகம் இசுலாமிய தீர்க்கதரிசி முகம்மதுவின் திருமணங்களைப் பற்றியும், பாலியல் வாழ்க்கைப் பற்றியும் சம்பந்தப்பட்டது.[2] உள்ளடக்கம்இது 1927 ஆம் ஆண்டில் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த பண்டிதர் எம். ஏ. சாமுபதி அல்லது கிருஷண் பிரசாத் பிரதாப் என்பவரால் எழுதப்பட்டது. இருப்பினும் இலாகூரின் மகாசே ராஜ்பால்[3] என்ற அவரது வெளியீட்டாளரால் வெளியிடப்படவில்லை. இது இந்து தெய்வமான சீதையை இழிவுபடுத்தும் ஒரு முஸ்லிம் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்திற்கு எதிராக இந்து சமயத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.[2][4] முஸ்லிம்களின் புகார்களின் அடிப்படையில், ராஜ்பால் கைது செய்யப்பட்டார். ஆனால் ஐந்து வருட விசாரணைக்குப் பிறகு ஏப்ரல் 1929 இல் விடுவிக்கப்பட்டார். ஏனெனில் அப்போது மதத்தை அவமதிப்பதற்கு எதிராக சட்டம் இல்லை. இருப்பினும், முஸ்லிம்கள் அவரது உயிரைப் பறிக்க முயன்றனர். பல தோல்வியுற்ற படுகொலை முயற்சிகளுக்குப் பிறகு, அவர் 6 ஏப்ரல் 1929 இல் இல்ம்-உத்-தின் என்ற இளம் தச்சரால் குத்திக் கொல்லப்பட்டார் (கொலை செய்யப்பட்டார்/கொல்லப்பட்டார்).[5] இல்ம்-உத்-தின்னுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை 31 அக்டோபர் 1929 அன்று நிறைவேற்றப்பட்டது.[6][7] முகம்மது அலி ஜின்னா பிரதிவாதி வழக்கறிஞராக இல்ம்-உத்-தின் சார்பில் ஆஜரானார்.[8] முஸ்லிம் கவிஞர் முகமது இக்பால் கொலையாளியின் இறுதி ஊர்வலத்தில் பேசியபோது இந்த கொடூரமான செயல் சட்டபூர்வமானது.[9] என்று நியாயப் படுத்தினார். இந்தப் புத்தகம் முதலில் உருது மொழியில் எழுதப்பட்டது. அது இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியா, பாக்கித்தான் , வங்காளதேசம் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. பதில்இப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, முஸ்லிம் சட்ட நீதிபதி மௌலானா சனாவுல்லா அமிர்தசரியின் முகத்தாஸ் ரசூல் (புனித நபி) என்ற புத்தகத்தில் பதிலுரையாற்றப்பட்டது.[10] 1927 ஆம் ஆண்டில், முஸ்லிம் சமூகத்தின் அழுத்தத்தின் கீழ், பிரித்தானிய அரசு வெறுப்பு பேச்சுச் சட்டம் பிரிவு 295 (A),[11] குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம் XXV இன் ஒரு பகுதியை இயற்றியது. இதன்படி எந்த மத சமூகத்தின் நிறுவனர்களையும் தலைவர்களையும் அவமதிப்பது குற்றமாகும்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia