இரண்டாம் உபதிச்சன்

இரண்டாம் உபதிச்சன் (பொ.பி. 525 - 526) என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் ஏழாம் மன்னனாவான். இவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் மூன்றாமானவனான முதலாம் மொக்கல்லானன் என்பவனின் தங்கையை மணந்தவன். மொக்கல்லானனின் பேரனான கீத்திசேனன் என்பவனைக் கொன்று சிவ மௌரியன் என்ற கீத்திசேனனின் தாய்மாமன் அரசகட்டிலில் இவனுக்கு முன்பு ஏறியிருந்தான். தன் பேரனைக் கொன்று அரசேறிய சிவ மௌரியன் என்பவனைக் கொன்றே இந்த உபதிச்சன் அரசக்கட்டிலில் ஏறினான்.[1]

இந்த உபதிச்சனின் மகளை மணந்த சிலாகாலன் என்பவன் இவனுடைய ஆட்சியில் இவனுக்கு எதிராக போர் தொடுத்தான். உபதிச்சன் வயது முதிர்ந்தவன் என்பதால் உபதிச்சனின் மகனான காசியபன் சிலாகாலனை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தான். இதை அறிந்து துயருற்றே மூன்றாம் உபதிச்சனும் இறந்து விட்டான். அதன் பிறகு சிலாகாலனே இலங்கையை அரசாண்டான்.[2]

மேற்கோள்கள்

  1. சூல வம்சம், 41ஆம் பரிச்சேதம், 5-6
  2. சூல வம்சம், 41ஆம் பரிச்சேதம், 7-26

மூலநூல்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya