இரண்டாம் பெரோஸ் குசான்ஷா ( Peroz II Kushanshah ) [2] சுமார் பொ.ச 303 முதல் 330 வரையிலான குசான-சாசானிய இராச்சியத்தின் இறுதி குசான்ஷா ஆவார். [3] இவர் இரண்டாம் ஹோர்மிஸ்ட் குசான்ஷாவின் வாரிசு ஆவார் .
இவரது முந்தைய இரண்டு முன்னோடிகளான முதலாம் ஹோர்மிஸ்ட் குசான்ஷா மற்றும் இரண்டாம் ஹோர்மிஸ்ட் குசான்ஷா ஆகியோரைப் போலவே இவர் தனது ஆட்சியின் போது அதே நாணயங்களின் குழுவை வைத்திருந்தார். துகாரிஸ்தானின் முக்கிய குசான-சாசானியர்களின் முக்கிய தளமான பாக்திரியாவிலிருந்து தங்கம் மற்றும் செப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. [4] இருப்பினும், இவரது நாணயங்களில் "பெரிய குசான மன்னன் " என்று அழைக்கப்படுகிறார். எனவே சாசானியப் பேரரசின் மீதான அவர்களின் உரிமைக் கோரிக்கையை கைவிடுகிறார். [4] முதலாம் ஹோர்மிஸ்ட் குசான்ஷாவின் ஆட்சியில் இருந்து, செப்பு நாணயங்கள் இரண்டு உள்ளூர் ஆளுநர்களான மியாஸ் மற்றும் காவித் ஆகியோரின் பெயர்களுடன் அச்சிடப்பட்டன. [4] இது இவரது கீழும் தொடரப்பட்டது. [4]
காந்தாரத்தில் வெளியிடப்பட்ட இவரது செப்பு நாணயங்களில் தனித்துவமான "காளைக் கொம்புகளுடன் கூடிய கிரீடம்" அணிந்திருப்பதை போலவெளியிட்டார். [5] இவ்வாறு , காந்தாரத்தில் இத்தகைய நாணயங்களை வெளியிட்ட குசான-சாசானிய ஆட்சியாளர்களில் கடைசியாக இவர் இருதார். [5] அதன் பிறகு, காபூலில் இருந்து தனது சொந்த நாணயங்களை வெளியிட்ட இரண்டாம் சாபூரால் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. [4][6][5]
இவர், வராஹ்ரான் குஷன்ஷாவிற்குப் பின்னர் பதவிக்கு வந்தார். அந்த நேரத்தில் சாசானிய மன்னர் இரண்டாம் சாபூர் ( ஆட்சி. 309–379 ) காந்தாரத்தையும் காபூலையும் தனது பகுதிகளில் இணைத்து கொண்டார். [4][6][5]
Daryaee, Touraj; Rezakhani, Khodadad (2017). "The Sasanian Empire". In Daryaee, Touraj (ed.). King of the Seven Climes: A History of the Ancient Iranian World (3000 BCE - 651 CE). UCI Jordan Center for Persian Studies. pp. 1–236. ISBN978-0-692-86440-1.