கிமு 225-இல் சாசானியர்களின் ஒரு பிரிவினர், குசான் பேரரரசின் வீழ்ச்சியின் போது, சோக்தியானா, பாக்திரியா மற்றும் காந்தாரப் பகுதிகளைகுசானர்களிடமிருந்து கைப்பற்றி அப்பகுதிகளுக்கு ஆளுநர்களை நியமித்தனர். பின்னர் இந்த ஆளுநர்கள், சாசானியப் பேரரசுக்கு அடங்கிய சிற்றரசர்களாக, தங்களை குசானர்களின் மன்னர்கள் ("Kings of the Kushans")[2] என அழைத்துக் கொண்டதுடனர். இவர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் குசான-சாசானிய இராச்சிய மன்னர்களின் வரலாறு ஓரளவு அறிய கிடைக்கிறது.
மூன்றாம் பெரோஸ் குஷான்ஷா ஆட்சியின் போது, கிபி 370-இல் குசான-சாசானிய இராச்சியத்தின் மீது நடு ஆசியாவில் வாழ்ந்த நாடோடி மக்களான கிடாரைட்டுகள் தொடுத்தப் போரில், குசான-சாசானிய இராச்சியத்தின் பெரும்பகுதிகளை கிடாரைட்டுகள் கைப்பற்றினர். எஞ்சிய குசான-சாசானிய இராச்சியத்தின் பகுதிகள் சாசானியப் பேரரசில் இணைக்கப்பட்டது.[3] பின்னர் கிடாரைட்டு மக்களை ஹெப்தலைட்டுகள் வென்றனர்.[4]கிபி 565-இல் சாசானியர்கள், நடு ஆட்சியாவின் துருக்கியகளுடன் இணைந்து ஹெப்தலைட்டு மக்களை விரட்டியடித்தனர். கிபி ஏழாம் நூற்றான்டின் நடுவில் பாரசீகத்தில் இசுலாமின் எழுச்சிக்குப் பின்னர் சாசானிய பேரரசு வீழ்ந்தது.
↑ALRAM, MICHAEL (2014). "From the Sasanians to the Huns New Numismatic Evidence from the Hindu Kush". The Numismatic Chronicle (1966-)174: 266. பன்னாட்டுத் தர தொடர் எண்:0078-2696.
↑The Cambridge Companion to the Age of Attila, Michael Maas, Cambridge University Press, 2014 p.284 ff
Daryaee, Touraj; Rezakhani, Khodadad (2017). "The Sasanian Empire". In Daryaee, Touraj (ed.). King of the Seven Climes: A History of the Ancient Iranian World (3000 BCE - 651 CE). UCI Jordan Center for Persian Studies. pp. 1–236. ISBN978-0-692-86440-1. {{cite book}}: Invalid |ref=harv (help)