இரத்தினகிரிஇரத்தினகிரி (Ratnagiri) என்பது ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள துறைமுக நகர் ஆகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் கொங்கண் மண்டலம் பகுதியின் கீழ் வருகிறது. இக்கடலோரப்பகுதியில் அதிக அளவு மழைப் பொழிவு இருக்கும். இங்கு அரிசி, தேங்காய், முந்திரி, ஆகியனவும் பழவகைகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மீன் பிடித்தல் இங்கு முக்கியத் தொழிலாகும். பால கங்காதர திலகர் இப்பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 1876-ல் இது நகராட்சியாக மாற்றப்பட்டது.[1] அமைவிடம்இதன் அமைவிடம் 16°59′N 73°18′E / 16.98°N 73.3°E.[2] ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 11 மீட்டர்கள் (36 அடிகள்) உயரத்தில் அமைந்துள்ளது. மக்கட்தொகைஇந்தியாவின் 2008 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி [3]இங்கு 1,00,000 மக்கள் வசிக்கின்றனர். ஆண்கள் 55% பேரும், பெண்கள் 45% பேரும் வசிக்கின்றனர். ஆண்களின் கல்வியறிவு 86% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 87% ஆகவும் உள்ளது. இந்நகரின் மொத்த மக்கட்தொகையில் 6 வயதிற்குக் கீழான குழந்தைகள் 6% ஆகும். இந்நகரின் மக்கட்தொகையில் 70% மக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாகவும், இஸ்லாமியர் 20% ஆகவும் பிற மதத்தினர் 10% ஆகவும் உள்ளனர். பொருளாதாரம்
முக்கிய இடங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia