†The State of Bombay was split into two States i.e. Maharashtra and Gujarat by the Bombay Reorganisation Act 1960[9] †† Common high court
மகாராட்டிரம் (மராத்தி: महाराष्ट्रMahārāṣṭra, ஒலிப்பு: [மகாராஷ்ட்ரா]ⓘ) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல், வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகியதாத்ரா மற்றும் நகர் அவேலி, வடகிழக்கில் மத்தியப் பிரதேசம், கிழக்கில் சத்தீசுக்கர், தெற்கில் கருநாடகம், தென்கிழக்கில் தெலுங்கானா மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ. / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். புணே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.
முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960-இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06-ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15%- உம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.2%-உம் பங்களிக்கிறது.[10][11][12][13]
3,07,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தை நிர்வாக வசதிக்காக அமராவதி கோட்டம், கொங்கண் கோட்டம், அவுரங்காபாத் கோட்டம், நாக்பூர் கோட்டம், புணே கோட்டம் மற்றும் நாசிக் கோட்டம் என ஆறு கோட்டங்களாகவும்; 36 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 112,374,333 ஆக உள்ளது. நகரங்களில் 45.22% மக்களும், கிராமப்புறங்களில் 54.78% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.99% உயர்ந்துள்ளது. மக்கள்தொகையில் 58,243,056 ஆண்களும் மற்றும் 54,131,277 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 929 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 365 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 88.38% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.87% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13,326,517 ஆக உள்ளது. நகர்புறங்களில் மக்களும், கிராமப்புறங்களில் மக்களும் வாழ்கின்றனர்.[21] இம்மாநில மக்கள் தொகையில் பில் பழங்குடி மக்கள் தொகை 18,18,792 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 89,703,057 (79.83 %) ஆகவும், இசுலாமியர் மக்கள் தொகை 12,971,152 (11.54 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,080,073 (0.96 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 223,247 (0.20 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,400,349 (1.25 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 6,531,200 (5.81 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 178,965 (0.16%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 286,290 (0.25%) ஆகவும் உள்ளது.
↑"Economic Survey of Maharashtra 2017–18"(PDF). Directorate of Economics and Statistics, Planning Department, Government of Maharashtra, India. p. 20. Retrieved 16 June 2018.