இரவுக்கு ஆயிரம் கண்கள்
இரவுக்கு ஆயிரம் கண்கள் (பொருள். The Night has a Thousand Eyes) என்பது 2018 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும்.[1] இதனை மு. மாறன் இயக்கியுள்ளார். அருள்நிதி, அஜ்மல் அமீர், மகிமா நம்பியார், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணீ போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனந்த் ராஜ் (நடிகர்), ஜான் விஜய், லட்சுமி ராமகிருஷ்ணன், மற்றும் ஆடுகளம் நரேன் போன்றோரும் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். நடிகர்கள்
குலமகள் ராதை (1963) என்ற திரைப்படத்தில் வருகின்ற இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற பாடல் வரியை தலைப்பாக வைத்தனர். இப்படத்தின் இயக்குநர் மு. மாறன் ராகவா லாரன்ஸ் மற்றும் கே. வி. ஆனந்த் அவர்களுடன் துணை இயக்குனராகப் பணியாற்றினார்.[2][3] குற்றம் 23 (2017) திரைப்படத்தில் நடித்தால் மகிமாவை செவிலியர் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார்.[4] கதைமாந்தர் பெயர்ச் சிறப்புஇப்படத்தின் முக்கிய கதைமாந்தர்கள் அனைவருக்கும் பிரபல தமிழ் மர்மக்கதை எழுத்தாளர்களின் துப்பறியும் ஆஸ்தான கதாபாத்திரங்களின் பெயர் வைத்து பாத்திரப் படைப்பை படைத்திருப்பது சிறப்பாகும். பரத்&சுசீலா பட்டுக்கோட்டை பிரபாகர், நரேந்திரன்&வைஜெயந்தி- அனிதா முருகேசன் சுபா, கணேஷ்&வசந்த் சுஜாதா, விவேக்&ரூபலா ராஜேஷ்குமார் ஆகியோரின் பிரதான கதாபாத்திரங்களாகும் [5] . வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia