மகிமா நம்பியார்
மகிமா நம்பியார் என்பவர் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்விகேரள மாநிலம் காசர்கோடு பகுதியிருந்து வந்தவர் இவர்.[2] 2014 இல் இளங்கலை ஆங்கில பட்டம் பெற்றார். [2] நடனம் பாடலை கற்றுள்ளார்.[3] 15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். அதில் நடிகர் திலீப்பிற்கு சகோதரியாக நடித்தார். [2][3] இயக்குநர் சாமியின் சிந்து சமவெளி (திரைப்படம்) என்பதில் நடிக்க ஒப்பந்தமாகி விளம்பரங்கள் வெளிவந்தன. பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகினார். சாட்டை (திரைப்படம்) (2012),[4] திரைப்படத்தில் நடிக்க தயாரிப்பு வியப்பு வலியுறுத்தியது. அறிவழகி என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்தார்.[2] சாட்டை திரைப்படத்திற்கு பிறகு பள்ளி படிப்பை ஒரு ஆண்டு படித்து நிறைவு செய்தார்.[5] பிறகு நான்கு திரைப்படங்களில் நடித்தார்.[6] என்னமோ நடக்குது (2014) படத்தில் மது என்ற செவிலியராக நடித்துள்ளார்.[4] மொசக்குட்டி, என்ற இயக்குநர் ஜீவன் திரைப்படத்திலும்,[7] புறவி 150சிசி, என்ற வேங்கடேஸ் இயக்கும் திரைப்படத்திலும்,[4] மருது இயக்கத்தில் ஆனந்தி படத்திலும் நடித்துள்ளார்.[2] திரைப்படங்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia