இராசகிருகம்
இராசகிருகம் (Rajgruha) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் மும்பையின் தாதர் பகுதியின் இந்து காலனியில் அமைந்துள்ள அம்பேத்கரின் நினைவில்லமாகும். பண்டைய பௌத்த இராச்சியமான இராசகிரகத்தைக் குறிக்கும் வகையில் இதற்கு "இராசகிருகம்" என்று பெயரிடப்பட்டது. மூன்று மாடி கட்டிடத்தின் தரை தளம் இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளரான இந்திய தலைவரின் நினைவாக ஒரு பாரம்பரிய அருங்காட்சியகத்தை வழங்குகிறது. இந்த இடம் இந்தியர்களுக்கு, குறிப்பாக அம்பேத்கரை பின்பற்றும் பௌத்தர்கள் மற்றும் தலித்துகளுக்கு ஒரு புனிதத் தலமாகும். அம்பேத்கர் 15-20 ஆண்டுகள் இங்கு வசித்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 6 ஆம் தேதி சிவாஜி பூங்காவில் உள்ள சைத்ய பூமிக்கு முன்பு இலட்சக்கணக்கான மக்கள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். அம்பேத்கர் இங்கு தங்கியிருந்த காலத்தில் 50,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்தார். இது அவரது மரணத்தின் போது உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட நூலகங்களில் ஒன்றாகும்.[1][2] ஆரம்பத்தில் சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களால் கட்டிடத்தை ஒரு தேசிய நினைவுச்சின்னமாக நியமிக்கும் திட்டங்கள் வீழ்ச்சியடைந்தன. ஆனால் 2013 இல் இந்த மாளிகை ஒரு பாரம்பரிய நினைவுச்சின்னமாக மாறியது. வரலாறு![]() பாபாசாகேப் அம்பேத்கர் மிகக் கொடுமையான வறுமையில் பிறந்தார். ஆயினும், 1930 வாக்கில், அவர் நன்கு அறியப்பட்ட சட்டத்தரணியாக மாறியதால் அவரது நிதி நிலைமை மேம்பட்டது. அம்பேத்கரின் சட்ட அலுவலகம் பரேலில் உள்ள தாமோதர் மாளிகை அருகே இருந்தது. இறுதியில் பேபாதேவியில் உள்ள அம்பேத்கரின் வீடு அவரது வளர்ந்து வரும் புத்தக சேகரிப்புக்கு இடமளிக்க முடியாது என்பதால் அவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஒரு புதிய வீட்டைக் கட்ட முடிவு செய்தார். அம்பேத்கர் தனது புதிய வீட்டினுள் ஒரு நூலகம் வைக்க திட்டமிட்டார். புதிய கட்டமைப்பில், இராசகிருகத்தின் தரை தளத்தில் மூன்று அறைகளின் இரண்டு தொகுதிகள் கட்டப்பட்டன. அந்த இரண்டு தொகுதிகளிலும், அவரது குடும்பம் வாழ்ந்தது. வீட்டின் முதல் தளத்தில், அவர் தனது நூலகத்தையும் அலுவலகத்தையும் ஏற்பாடு செய்தார்.[3][4] 1930 ஆம் ஆண்டில், 99 மற்றும் 129 வது தெருக்களில் தலா இரண்டு அடுக்குகளையும், மும்பையின் தாதரில் இந்து காலனியில் 55 சதுர யார்டு பகுதியையும் வைத்திருந்தார். ஐந்தாவது பாதையில் 129 வது தெருவில், தனது குடும்பத்திற்கு ஒரு வீடு கட்ட முடிவு செய்தார். அதே நேரத்தில் மூன்றாவது பாதையில் 99 வது மனையில் வாடகைக் கட்டிடம் கட்டினார். அவர் இந்திய மத்திய வங்கியிடமிருந்து கடன் பெற்றார். திரு. ஆய்கர் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டார். சனவரி 1931 இல், மனை எண் 129 இல் கட்டிடத்தின் கட்டுமானம் தொடங்கி 1933 இல் நிறைவடைந்தது. மனை 99 இல் மற்றொரு கட்டிடத்தின் கட்டுமானம் 1932 இல் தொடங்கியது. கட்டுமானப் பணிகளை முடித்த பின்னர், அவர்கள் கட்டிடத்திற்கு "சார் மினார்" என்று பெயரிட்டனர். "இராசகிருகம்" என்ற பெயர் பௌத்த கலாச்சாரம் மற்றும் இந்து கலாச்சாரத்துடன் தொடர்புடையது. அதே நேரத்தில் "சார் மினார்" என்ற பெயர் முஸ்லிம் கலாச்சாரத்துடன் தொடர்புடையது . 1933 ஆம் ஆண்டில், அம்பேத்கர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து இங்கு குடியேறினார். பி.ஆர்.அம்பேத்கர், அவரது மனைவி இரமாபாய், மகன் யசுவந்த், இலட்சுமிமிபாய் (அவரது சகோதரரின் மனைவி), முகுந்த் (அவரது மருமகன்) போன்றவர்கள் இங்கு வசித்து வந்தனர். 9 மே 1941 இல், அவர் புத்தகங்களை வாங்குவதற்கும் நிலுவையில் உள்ள கடன்களை திருப்புவதற்கும் சார் மினார் கட்டிடத்தை விற்றார். இருப்பினும், அவர் இராசகிருக வீட்டை நிரந்தர உடைமையாக வைத்திருந்தார்.[5] காழ்ப்புணர்ச்சி7 சூலை 2020 மாலை, இராசகிருகம் வீட்டை ஒரு நபரால் தாக்கபட்டது. அந்த நபர் வீட்டுனுள் நுழைந்து பூ பானைகள், தாவரத் தொட்டிகள், கண்காணிப்பு கேமரா மற்றும் ஒரு ஜன்னலில் கற்களை வீசினார். சம்பவ இடத்தைப் பற்றி மும்பை காவலர்கள் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் அம்பேத்கர் குடும்பத்தினரால் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.[6][7] அதே நாளில், இராசகிருகத்தை தாக்கியதாக தெரியாத நபர்கள் மீது மாதுங்கா காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.[8][9] இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடந்து வருகிறது. அடுத்த நாள், 2020 சூலை 8 ஆம் தேதி, இந்த வீட்டை நிரந்தர காவலர் பாதுகாப்பில் வைக்க மகாராட்டிரா அரசு முடிவு செய்துள்ளது.[10] 22 சூலை 2020 அன்று, தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான விஷால் அசோக் மோர் அல்லது விட்டல் கன்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.[11] மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia