இராதிகா சௌத்ரி
ராதிகா சவுத்ரி என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். முக்கியமாக 2000 களின் முற்பகுதியில் இவர் இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பணியாற்றியுள்ளார். 2010 இல், லாஸ் வேகாஸ் திரைப்பட விழாவில் விருதை வென்ற அமெரிக்காவில் திரைப்பட இயக்குநராக மீண்டும் வந்தார்.[1] தொழில்இராதிகா இந்தியாவின் புனே பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு மக்கள் செய்தித் தொடர்பியலில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் சுமார் 30 இந்திய திரைப்படங்களில் பல மொழிகளில் நடித்துள்ளார். இதில் தேரே நாம் மற்றும் குஷி போன்ற படங்களில் நடித்த பல்வேறு பாத்திரங்கள், பாடல்களுக்கு விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். 2010 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட இயக்குநராக இவர் மீண்டும் வந்தார். லாஸ் வேகாஸ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான சில்வர் ஏஸ் விருதை வென்றார், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட குறும்படமான ஆரஞ்சு ப்ளாசம் . என்ற அந்தப் படம் நான்கு நாட்களில் லாஸ் ஏஞ்சல்சில் படமாக்கப்பட்டது, 17 நிமிட படம் ஒரு தாயானவள் தன் கணவனிடமிருந்து பிரிந்த வேதனையை கடந்து செல்லும் கதையைக் கொண்டது அப்படம். அப்படத்தில் உஷா கோகோடே கதாநாயகியாக நடித்தார், ஜெஃப் டூசெட், ஜான் பால் ஓவியர் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்தனர்.[2] திரைப்படவியல்
தொலைக்காட்சி
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia