கன்னடம்
![]() கன்னடம் (ಕನ್ನಡ , க1ந்நட3, Kannada) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 36 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும்.[6] பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ள திராவிடமொழி கன்னடமே.[7] இந்தியாவின் 22 தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று. 2008ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.[8] இம்மொழியின் எழுத்து வடிவம் தெலுங்கு மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்து இருந்தாலும் இலக்கணம்,சொற்கள் அடிப்படையில் தமிழ்தான் மிகவும் நெருங்கியதாகும். மொழி வரலாறு![]() கன்னட மொழியானது தமிழ் மொழியிலிருந்து பிரிந்ததாக எண்ணுகின்றனர். பேச்சு மொழியாக 2000 ஆண்டுகளேனும் இருந்திருக்க வேண்டும். பிராகிருத, சமசுகிருத மொழிகளின் தாக்கத்தை இம்மொழியில் காணலாம். மொழியின், அகரவரிசை நெடுங்கணக்கில் வல்லின மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் சமசுகிருதம் போல நான்கு வேறுபாடுகள் உள்ளனவாக அமைத்துக்கொண்டனர். இவ்வமைப்பு எப்பொழுதிலிருந்து நிலவி வருகின்றதெனத் தெரியவில்லை. கல்வெட்டுக்களில் மிகவும் தொன்மையானது பொ.ஊ. 450 ஐச் சார்ந்த ஹல்மிதி கல்வெட்டாகும். இது ஹளே கன்னடம் (= பழைய கன்னடம்) மொழியில் உள்ளது. பதாமி மலையில் பொ.ஊ. 543 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் ஹளே கன்னட மொழி எழுத்துகளில் சமசுகிருத மொழி கல்வெட்டு ஒன்று உள்ளது. பழைய கன்னடத்தில் தமிழ் ழகரமும், தமிழ் வல்லின றகரமும், இரண்டுசுழி னகரமும் இருந்தன. தென்கன்னடப் பகுதியில் (தக்ஷின் கன்னடாவில்) 1980ல் தான் னகரத்தை விலக்கினார்கள். மேற்கு கங்கர் ஆட்சிக் காலத்தில் (பொ.ஊ. 444) எழுதப்பட்டதாகக் கருதப்படும் தும்புலா செப்பேடுகளில் சமசுகிருத-கன்னட இருமொழி பொறிப்புகள் உள்ளது. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் கன்னடப் பகுதியில் பெல்மன்னு என்னும் இடத்தில், ஆலுவரச-2 என்னும் அரசன் ஆண்ட காலத்தில் ஹளே கன்னட மொழி எழுத்துகளில் முழு கன்னட மொழி செப்பேடு ஒன்று அறியப்படுகின்றது. இலக்கிய வகையில், பொ.ஊ. 700 ஆம் ஆண்டளவில் திரிபாதி சந்தத்தில் கப்பெ அரபட்டா எழுதிய பாடல்கள் பழமையானவை. ஆனால் இன்று கிடைத்துள்ளவற்றுள் நிருபதுங்க அமோகவர்ஷா என்னும் அரசனால் பொ.ஊ. 850 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட கவிராஜமார்கம் என்னும் நூலே பழமையானது. பொ.ஊ. 900ல் சிரவணபலகுலாவைச் சேர்ந்த பத்திரபாஃகுவின் வாழ்க்கையை விளக்கும், சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே (?) என்னும் நூல் அடுத்ததாக உள்ள பழமையான நூல் ஆகும். தற்கால இலக்கியம்20 ஆம் நூற்றாண்டு இலக்கியத்தில் கன்னடம் முன்னணி வகிக்கும் ஓர் இந்திய மொழி ஆகும். இந்தியாவில் எம்மொழியினும் அதிக எண்ணிக்கையில் ஞானபீடப் பரிசுப் பெற்ற மொழி கன்னடம் ஆகும். இதுவரை 7 இலக்கிய எழுத்தாளர்கள் ஞானபீடப் பரிசுகள் பெற்றுள்ளனர். இது தவிர 48 சாகித்திய அகாதமிப் பரிசகளும் பெற்றுள்ளது. ஞானபீட பரிசு பெற்றவர்கள்:
மொழிஉயிர் எழுத்துக்கள்கன்னடத்தில் 13 உயிர் எழுத்துக்கள் உள்ளன. உயிரெழுத்துக்களை ஸ்வர என்று அழைக்கின்றனர். அவையாவன: ![]() ಅ (அ), ಆ (ஆ), ಇ (இ), ಈ (ஈ), ಉ (உ), ಊ (ஊ), ಋ (ரு), ಎ (எ), ಏ (ஏ), ಐ (ஐ), ಒ (ஒ), ಓ (ஓ), ಔ (ஔ) யோகவாஹாஉயிர் எழுத்துக்கள் தவிர, பாதி உயிரெழுத்து ஒலியாகவும், பாதி மெய்யெழுத்து ஒலியாகவும் இருப்பதாகக் கருதப்படும் யோகவாஹா என்னும் இரு எழுத்துக்கள் உண்டு. அவையாவன:
மெய் எழுத்துக்கள்கன்னட மொழியில் தமிழில் உள்ள க,ச,ட,த,ப ஆகிய ஐந்து வல்லின எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் நான்கு விதமாக வேறுபடுத்திக் காட்டுவர்.
மேலுள்ளனவன்றி, தமிழில் உள்ளது போன்ற இடையின மெய்யெழுத்துக்கள் வரிசையும் உண்டு. அவையாவன: ಯ (ய, ya), ರ (ர, ra), ಲ (ல, la), ವ (வ, va), ಶ (ஶ, sha), ಷ ( ஷ, shha), ಸ (ஸ, sa), ಹ (ஹ, ha), ಳ (ள, lla), மற்றும்,ಱ (ற, Ra),ೞ (ழ, zha) (ழ&றகரங்கள் 12ஆம் & 18ஆம் நூற்றாண்டுகளில் உபயோகத்திலிருந்து மறைந்துவிட்டன) பேச்சுக் கன்னடம்கன்னடத்தின் எழுத்துருவம் தெலுங்கை ஒத்துள்ளபோதிலும் பேச்சுக் கன்னடம் தமிழை ஓரளவு ஒத்தாகும். எண்கள்
பொதுவானவை
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் கன்னடம்ப் பதிப்பு
|
Portal di Ensiklopedia Dunia