இராதிகா திலக்
இராதிகா திலக் (Radhika Thilak) (1969 - 20 செப்டம்பர் 2015) இந்தியவைச் சேர்ந்த மலையாள மொழிப் பின்னணிப் பாடகியாவார்.[1] மலையாளத் திரைப்ப படங்களில் 70 பாடல்களைப் பாடியுள்ளார்.[2][3][4][5][6][7] சொந்த வாழ்க்கைஇவர், எர்ணாகுளம் சின்மயா வித்யாலயாவிலும், புனித தெரசா கல்லூரியிலும் தனது கல்வியைப் பெற்றார். இவருக்கு சுரேஷ் என்பவருடன் 1992இல் திருமணம் நடந்தது. தம்பதியருக்கு தேவிகா என்ற மகள் இருக்கிறார். பிரபல பாடகர்கள் சுஜாதா மோகன் & ஜி.வேணுகோபால் இவரது உறவினர்கள். தொழில்"அருணகிரண தீபம்", "தேவ சங்கீதம்", "மாய மஞ்சளில்", "கைதாபூ மனம்", "திருவாதிரா தீரா நோக்கியா", "என்டே உல்லுதுக்கம் கோட்டி", "நின்டே கண்ணில்" ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க பாடல்களில் சில.[8] திரைப்படப் பாடல்களைத் தவிர, பக்தி பாடல்களையும் இவர் பாடியிருந்தார்.[9] இவர் ஒரு பிரபலமானத் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் இருந்தார்.[10][11] இறப்புகிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்த இவர்.[12] 20 செப்டம்பர் 2015 அன்று, கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனது 46 வயதில் இறந்தார். குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia