இராபர்ட்டு புரூசு
![]() முதலாம் இராபர்ட்டு (Robert I, 11 சூலை 1274 – 7 சூன் 1329), பரவலாக இராபர்ட்டு புரூசு (Robert the Bruce, பண்டைய கேலிக்: Roibert a Briuis; தற்கால இசுக்காத்திய கேலிக்: Raibeart Bruis; நார்மன் பிரான்சியம்: Robert de Brus அல்லது Robert de Bruys) 1306இலிருந்து 1329இல் தனது மரணம் வரை இசுகாத்திய அரசராக இருந்தவர். அவரது தலைமுறையில் மிகச் சிறந்த போர்வீரராகத் திகழ்ந்த இராபர்ட்டு இங்கிலாந்திற்கு எதிரான முதல் விடுதலைப் போரை நடத்தியவர். இசுக்கொட்லாந்து ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக மீட்பதற்கு போராடி வெற்றி கண்டார்; இன்றும் இவர் இசுக்கொட்லாந்தின் தேசிய நாயகராக கருதப்படுகின்றார். இளமை வாழ்க்கைஇராபர்ட்டு புரூசு டர்ன்பெரி கோட்டையில் சூலை 11, 1274இல் பிறந்தார்.[2] ஆறாம் இராபர்ட் புரூசிற்கும் கார்ரிக் கோமகள் மர்ஜோரிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.[2] இராபர்ட்டின் குடும்பம் பிரான்சிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். பிரான்சின் வடபகுதியில் உள்ள நார்மாண்டியில் புரூசு என்றவிடத்திலிருந்து வந்தவர்கள்.[3] 1066இல் இதே பெயருடைய இவரது மூதாதை ஒருவர் முதலாம் வில்லியமுடன் இங்கிலாந்து வந்துள்ளார்.[3] மற்றுமொரு இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்தின் முதலாம் டேவிடுடன் வந்துள்ளார்.[3] 1286இல் இசுக்கொட்லாந்தின் மூன்றாம் அலெக்சாண்டர் மரணமடைந்தார்.[4] அடுத்த அரசியாக பதவியேற்கவிருந்த அவரது பேத்தியும் மரணமடைந்தார்.[4] 1292இல் புரூசு குடும்பமும் பேலியோல் குடும்பமும் தங்களில் ஒருவரை இசுக்கொட்லாந்து அரசராக நியமிக்கும்படி இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு அரசரை வேண்டினர். எட்வர்டு அரசர் பேலியோல் குடும்பத்தின் ஜானை தேர்ந்தெடுத்தார்.[5] 1292இல் இசுக்கொட்லாந்திலுள்ள அனைத்து புரூசு வம்சத்தினருக்கும் தலைவராக இராபர்ட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] 1297இல், இங்கிலாந்து அரசர் இசுக்கொட்லாந்தை பிரான்சிற்கு எதிராக போர்புரியக் கட்டளையிட்டார். இதற்கு இசுக்கொட்லாந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கிலாந்து மன்னருக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியில் இராபர்ட்டும் பங்கேற்றார். இந்த இசுக்கொட்லாந்திய போராளிகளுடன் நடந்த பல சண்டைகளில் எட்வர்டு வெற்றி பெற்று வந்தார். இறுதியில் எட்வர்டு விரும்பியதை இராபர்ட்டுக்குச் செய்ய வேண்டியதாயிற்று.[7] இசுக்கொத்திய அரசர்1306இல் ஜான் கோமின் என்பவரை தேவாலயமொன்றில் இராபர்ட்டு சந்தித்தார். இவரும் இசுக்கொட்லாந்திய அரசராக விரும்பியவர். இவர்களுக்கு இடையே எழுந்த சண்டையில் இராபர்ட்டு ஜானைக் கொன்றார்.[8] இதனையடுத்து இராபர்ட்டு இசுக்கூன் என்றவிடத்திற்குச் சென்றார். இங்கு இங்கிலாந்து அரசருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த இசுகொத்திய அரச அங்கிகளை இசுக்கொத்திய பிரபுக்கள் கொண்டுவந்தனர். இவர்கள் இராபர்ட்டை இசுகொட்லாந்தின் அரசராக முடிசூட்டினர்.[9] இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து இசுக்கொட்லாந்தை விடுவிக்க இராபர்ட்டு பல போர்களை நடத்தினார். முதலாம் எட்வர்டு அரசருடனும் பின்னர் அவரது மகன் இரண்டாம் எட்வர்டு அரசருடனும் சண்டைகள் புரிந்தார். 1314இல் பன்னோக்பர்ன் சண்டையில் இராபர்ட்டின் படைகள் இரண்டாம் எட்வர்டின் படைகளை வெற்றி கண்டனர்.[10] 1315இல் இராபர்ட்டு புரூசு தனது படைகளை அயர்லாந்திற்கு அனுப்பினார்.[11] இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்த அயர்லாந்தை வென்று தமது சகோதரர் எட்வர்டு புரூசை 1316இல் அயர்லாந்தின் அரசராக்கினார்.[11] இசுக்கொட்லாந்து படையினருக்கும் அயர்லாந்து மக்களுக்கும் சண்டைகள் எழுந்தவண்ணம் இருந்தன. 1318இல் எட்வர்டு புரூசு கொல்லப்பட்டதுடன் இசுகொட்லாந்து அயர்லாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது. மரபுடைமைசூன் 7, 1329இல் இராபர்ட்டு புரூசு இறந்தார்.[12] போரிடுவதிலேயே கழிந்த தமது வாழ்நாளுக்கு மீட்பாக சிலுவைப் போர்களில் கலந்துகொள்ள விரும்பினார். தன்னால் இதனை நிறைவேற்ற முடியவில்லை என்ற நிலையில் தமது நம்பிக்கைக்குரிய நண்பர் சேர் ஜேம்ஸ் டக்ளசிடம் தனது இதயத்தை ஓர் சிறிய வெள்ளிப் பெட்டகத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டினார்.[13] ஜேம்ஸ் டக்ளசு இராபர்ட்டின் இறுதி விருப்பதை நிறைவேற்றும் பொருட்டு இதயத்தை எடுத்துக்கொண்டு பல போர்வீரர்களுடன் புறப்பட்டார்.[14] ஆனால் எசுப்பானியாவில் நடந்த சண்டையில் சர் ஜேம்ஸ் கொல்லப்பட்டார். இராபர்ட்டின் இதயம் இசுக்கொட்லாந்திற்கே திரும்பியது. இராபர்ட்டு புரூசின் உடல் டன்பெர்ம்லைன் மடத்தில் புதைக்கப்பட்டது; அவரது இதயம் மெர்லோசு மடத்தில் புதைக்கப்பட்டது.[14] மேற்சான்றுகள்
வெளி யிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia