நியூ செர்சி நெடுஞ்சாலை 33ஐ ஒட்டிய இராபின்சுவில் நகர மையம்
மெர்சர் கவுன்ட்டியில் இராபின்சுவில்லின் அமைவிடம் காட்டப்பட்டுள்ளது. உள்படம்: நியூ செர்சி மாநிலத்தில் மெர்சர் கவுன்ட்டியின் அமைவிடம் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
வாசிங்டன் நகரியம், மெர்சர் கவுன்ட்டி, நியூ செர்சியின் கணக்கெடுப்பு வாரிய நிலப்படம் (தற்போது இராபின்சுவில் நகரியமாக அறியப்படுகின்றது)
இராபின்சுவில் நகரியம் (Robbinsville Township) ஐக்கிய அமெரிக்காவில்நியூ செர்சி மாநிலத்தில் மெர்சர் கவுன்ட்டியில் உள்ள நகரியமாகும். 2010ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரியத்தின் மக்கள்தொகை 13,642 ஆகும்.[7][8][9] 2000ஆம் ஆண்டில் 10,275 ஆக இருந்த மக்கள்தொகை +32.8% வளர்ந்துள்ளது. 1990இலிருந்து (5815) 2000 வரை +76.7% உயர்ந்துள்ளது.[19] இந்த நகரியம் இப்பகுதியில் வாழ்ந்திருந்த ஜார்ஜ் ஆர். ராபின்சு நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[20]
தற்போது இராபின்சுவில் நகரியமாக உள்ளப் பகுதி துவக்கத்தில் கிழக்கு விண்ட்சர் நகரியத்திலிருந்து சிலபகுதிகளைப் பிரித்தெடுத்து வாசிங்டன் நகரியம் (சியார்ச் வாசிங்டன் நினைவாக[20]) என மார்ச் 15, 1859 அன்று நியூ செர்சி சட்டப்பேரவையால் சட்டவாணை மூலமாக உருவாக்கப்பட்டிருந்தது.[21] நியூ செர்சி மாநிலத்தில் இதே பெயரில் ஐந்து நகராட்சிகள் இருந்தமையால் நகரியத்தின் பெயர் வாசிங்டன் நகரியத்திலிருந்து தற்போதைய பெயருக்கு மாற்ற நவம்பர் 6, 2007இல் 1,816 ஆதரவு 693 எதிர்ப்பு வாக்குகளுடன்[22] நிறைவேற்றப்பட்டது. அலுவல்முறையான பெயர் மாற்றம் சனவரி 1, 2008இல் நிகழ்ந்தது.[23]
மேற்சான்றுகள்
↑2015 New Jersey Mayors Directory, New Jersey Department of Community Affairs, as of October 20, 2015. Accessed November 14, 2015. As of date accessed, Fried is listed with an incorrect term-end date of June 30, 2017.