இராமேசுவர் நீக்ரா
இராமேசுவர் நீக்ரா (Rameshwar Neekhra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராமேசுவர் நிக்ரா என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இந்தி மொழி திரைப்படத்துறையின் மூத்த நடிகர் அசுதோசு ராணாவின் உறவினராகவும் அறியப்படுகிறார். சட்டம் படித்து பட்டதாரியான இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக செயற்பட்டார். இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரத்தில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை மக்களவை 7 மற்றும் 8 ஆவது மக்களவைக்கு பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மத்திய பிரதேச மாநில வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை சேவா தளத்தின் தேசிய துணைத் தலைவர், மத்தியப் பிரதேச இளைஞர் காங்கிரசின் தலைவர் 1985-1987, டாக்டர் அரி சிங் கூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழகத் தலைவர், 1968-1970 சிக்சக்கு காங்கிரசின் நிறுவனர் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து தற்போது மத்தியப் பிரதேச காங்கிரசு கட்சியின் மூத்த துணைத் தலைவராகவும் உள்ளார். [1] [2] [3] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia