இராம் விலாசு பாசுவான்
இராம் விலாசு பாசுவான் (Ram Vilas Paswan) (5 சூலை 1946 - 8 அக்டோபர் 2020[3]) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சரும் ஆவார். எட்டு முறை மக்களவை (இந்தியா) உறுப்பினராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். சம்யுக்த சோசலிசக் கட்சியில் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1969ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974இல் லோகதளம் கட்சி உருவானபோது அதில் இணைந்தார். நெருக்கடி நிலை ஆட்சியை எதிர்த்துக் கைதானார்.1977இல் ஹாஜீபூரிலிருந்து ஜனதா கட்சியின் சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியிலிருந்து 1980, 1984, 1989, 1996 மற்றும் 1998 ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000இல் லோக் ஜனசக்தி கட்சியை (LJP) நிறுவி அதன் தலைவராக விளங்கினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கூட்டுச் சேர்ந்து வேதிப்பொருள் மற்றும் உரத்துறை அமைச்சராகவும் உருக்கு அமைச்சராகவும் பணி புரிந்தார். 2004இல் மக்களவைத் தேர்தல்களில் வென்ற பாசுவான் 2009இல் தோல்வியைத் தழுவினார். 2010 முதல் 2014 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த பாசுவான் 2014ஆம் ஆண்டு தமது ஹாஜீபூர் தொகுதியிலிருந்து தேசிய சனநாயகக் கூட்டணி வேட்பாளராக பதினாறாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia