இராயதுர்கம்
'இராயதுர்கம் (Rayadurgam) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது ஒரு நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இராயதுர்கம் துணிப் பொருட்கள் மற்றும் உற்பத்தி தொழிலுக்கு பெயர் பெற்றது. ஐதராபாத்திலிருந்து சுமார் 451.6 கிமீ (280.6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இப்போது முறையான போக்குவரத்து, நவீன வசதிகளுடன் மெல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை 544DD மூலம் நகரம் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் பிற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள பல்லாரி விமான நிலையம் இதன் அருகிலுள்ளது. அதைத் தொடர்ந்து கர்னூல், புட்டபர்த்தி மற்றும் பெங்களூரு நகரங்களும் அருகில் உள்ளது. பெல்லாரி, குண்டக்கல், கூட்டி மற்றும் அனந்தபூர் போன்ற முக்கிய நிலையங்களுடன் இராயதுர்கம் ஒரு தொடர்வண்டி நிலையத்தையும் கொண்டுள்ளது.[3] மக்கள்தொகை2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 61,749 பேர். மொத்த மக்கள் தொகையில், 0–6 வயதுக்குட்பட்ட 30,911 ஆண்கள், 30,838 பெண்கள் மற்றும் 7,462 குழந்தைகள் என உள்ளனர். சராசரி கல்வியறிவு விகிதம் 69.60% ஆக உள்ளது. 37,781 கல்வியறிவு பெற்றவர்கள், தேசிய சராசரியான 73.00% ஐ விட கணிசமாகக் குறைவு.[4] நகரில் தெலுங்கு ஆட்சி மொழியாகும். கன்னடம் மற்றும் உருது மொழிகளும் இங்கு பரவலாக பேசப்படுகின்றன சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia