இரா. வை. கனகரத்தினம்
இரா. வை. கனகரத்தினம் (23 ஆகத்து 1946 – 24 மே 2016) இலங்கைத் தமிழ் பேராசிரியரும், ஆய்வாளரும், எழுத்தாளரும் ஆவார். சைவ சமயம், நாட்டுப்புற இலக்கியம் ஆகிய துறைகளில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளார்.[1][2] ஆரம்பகால வாழ்க்கையாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவில் இராமநாதர் வைத்திலிங்கம், சிவகாமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்த கனகரத்தினம் நெடுந்தீவு கோட்டைக்காடு மகேசுவரி வித்தியாசாலை, நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை, யாழ்ப்பாணம் முத்துத்தம்பி வித்தியாசாலை, செங்குந்த இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். 1968 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[1] பணி1975 முதல் 1980 வரை களனிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1980 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து, 1999 இல் தமிழ்த் துறைப் பேராசிரியரானார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.[1] வெளியிட்ட நூல்கள்
விருதுகள்
மறைவுபேராசிரியர் இரா. வை. கனகரத்தினம் யாழ்ப்பாணத்தில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2016 மே 24 செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.[1][3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia