இரீது கரித்தல்
முனைவர். இரீது கரித்தல் சிறீவத்சவா (Ritu Karidhal Srivastava) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) பணிபுரியும் ஒரு இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் துணை செயல்பாட்டு இயக்குநராக இருந்தார்.[1] இவர் இந்தியாவின் "இராக்கெட் பெண்" என்று குறிப்பிடப்படுகிறார்.[2][3] இவர், இலக்னோவில் பிறந்து வளர்ந்த ஓர் வான்வெளிப் பொறியியல் ஆவார்.[4] ஆரம்பகால வாழ்க்கையும், குடும்பமும்கரித்தல், உத்தரபிரதேசத்தில் இலக்னோவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.[5] இவரது குடும்பம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இவருக்கு இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.[5] இவர் தான் வாழ்வில் வெற்றிபெற வளங்களின் பற்றாக்குறையாலும், பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிகள் கிடைக்காததும் சுய உந்துதலை மட்டுமே நம்பியிருந்தார்.[5] ஒரு குழந்தையாக, இவருடைய ஆர்வம் விண்வெளி அறிவியலில் இருப்பதாக அறிந்து கொண்டார். இரவு வானத்தை மணிக்கணக்கில் பார்த்து, விண்வெளியைப் பற்றி யோசித்தவர், சந்திரனைப் பற்றி ஆச்சரியப்பட்டு, அது எப்படி அதன் வடிவத்தையும் அளவையும் மாற்றுகிறது என வியந்து நட்சத்திரங்களைப் பற்றி படித்தார். மேலும், இருண்ட இடத்தின் பின்னால் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்பினார். தனது பதின்ம வயதில், விண்வெளி தொடர்பாக வெளியான எந்த ஒரு செய்தி வந்தாலும் அந்தச் செய்தித்தாள் துண்டுகளை சேகரிக்கத் தொடங்கினார். மேலும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தையும், நாசாவின் செயல்பாடுகளையும் கண்காணித்தார்.[6] இவர், இலக்னோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டத்தையும்,[7] முதுநிலை அறிவியல் பட்டத்தையும் பெற்றார். மேலும், இலக்னோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்ந்தார். பின்னர் அதே துறையில் கற்பித்தார். இலக்னோ பல்கலைக்கழகத்தில் ஆறு மாதங்கள் ஆராய்ச்சி அறிஞராக இருந்தார். வான்வெளிப் பொறியியலில் முதுநிலைப் படிப்புக்காக பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்தார்.[8][9] 2019 ஆம் ஆண்டு வருடாந்திர மாநாட்டின் போது இலக்னோ பல்கலைக்கழகத்தால் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[10] தொழில்1997 முதல் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்,[5] செவ்வாய் சுற்றுகலன் திட்ட வளர்ச்சியில் இவர் முக்கியப் பங்காற்றினார்.[7] இந்தப் பணியின் துணை செயல்பாட்டு இயக்குநராகவும் இருந்தார்.[11] செவ்வாய் சுற்றுகலன் திட்டமானது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தி மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.[5] செவ்வாய் கிரகத்தை அடைந்த உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்தது.[5] இது 18 மாத காலத்தில் செய்யப்பட்டது. மேலும், மிகக் குறைந்த செலவில்- 450 கோடி ரூபாய் மட்டுமே- செலவளிக்கப்பட்டது.[5] இவர் சந்திரயான்-2 திட்டப் பணியின் இயக்குநராக மேற்பார்வையிட்டார். ஐக்கிய இராச்சியம் 2021இல் ஜி7 நாடுகளின் தலைமைப் பொறுப்பேற்றபோது, அந்நாட்டின் பெண்கள் மற்றும் சமத்துவ அமைச்சரான இலிஸ் திரசால் என்பவரால் புதிதாக உருவாக்கப்பட்ட பாலின சமத்துவ ஆலோசனை அமைப்புக்கு சாரா சாண்ட்ஸ் என்பவர் தலைமையில் நியமிக்கப்பட்டார்.[12] அங்கீகாரம்கரித்தல், 2007 இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து இந்திய விண்வெளி ஆய்வு மைய இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றார்.[13] செவ்வாய் கிரக சுற்றுப்பயணத்தின் வெற்றியை விவரிக்கும் TED மற்றும் TEDx நிகழ்வுகளையும் கரித்தல் வழங்கியுள்ளார்.[11][14] இவருக்கு இலக்னோ பல்கலைக் கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. ஆளுநர் ஆனந்திபென் படேல் இதனை வழங்கினார்.[15] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia