இருகந்தகப் பதின்புளோரைடு(Disulfur decafluoride) என்பது 1934 ஆம் ஆண்டில் டென்பிக் மற்றும் வொயிட்லா-கிரே என்பவர்களால் கண்டறியப்பட்ட ஒரு வாயு ஆகும்[4]. இவ்வாயுவின் மூலக்கூற்று வாய்ப்பாடு S2F10 ஆகும். கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு கந்தகமும் ஒரு எண்முக வடிவம் கொண்டு ஐந்து புளோரின் அணுக்களால் சூழப்பட்டுள்ளன[5]. இருகந்தகப் பதின்புளோரைடு பாசுகீன் வாயுவைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான நச்சுத்தன்மை கொண்டதாகும். இரண்டாம் உலகப் போரின்போது, இரசாயன போர் முறையில் நுரையீரலைத் தாக்கும் முகவராகக் கருதப்பட்டது. ஏனெனில் கண்ணீர் வழிதல், தோல் எரிச்சல் உண்டாக்குதல் போன்ற எச்சரிக்கை வழங்கும் செயல்கள் எதையும் வெளிப்படுத்தாமல் இவ்வாயு நேரடியாக நுரையீரலைத் தாக்குகிறது.
உயர் மின்னழுத்தத அமைப்புகளில் பயன்படுத்தப்படும் மந்த மின்காப்பான்கள், செலுத்துக்கம்பிகள், துணை மின்நிலையங்கள் மற்றும் மின்பிரியிணைப்பி போன்றவற்றில் அத்தியாவசியமாகப் பயன்படும் கந்தக அறுபுளோரைடை மின் சிதைவுக்கு உட்படுத்தி இருகந்தகப் பதின்புளோரைடு தயாரிக்கப்படுகிறது. கந்தக அறுபுளோரைடைத் தயாரிக்கும் போதும் இருகந்தகப் பதின்புளோரைடு உருவாகிறது, ஆனால் காய்ச்சி வடித்தல் முறையில் இவ்வாயு நீக்கப்பட்டு விடுகிறது.
தயாரிப்பு
கந்தக அறுபுளோரைடை சிதைவுக்கு உட்படுத்தி இருகந்தகப் பதின்புளோரைடு தயாரிப்பது முதன்மையான தயாரிப்பு முறையாகும்.
2 SF6 → S2F10 + F2
N2F4 உடன் S2F10 வினைபுரிந்து SF5NF2 சேர்மத்தைக் கொடுக்கிறது. புறஊதா கதிர்வீச்சு முன்னிலையில் S2F10கந்தக டை ஆக்சைடுடன் வினைபுரிந்து SF5OSO2F உருவாகிறது. அதிக அளவு குளோரின் வாயுவுடன் வினைபுரிந்து கந்தக குளோரைடு ஐம்புளோரைடைத் தருகிறது.
S2F10 + Cl2 → 2 SF5Cl
மேற்கண்ட வினையை ஒத்த புரோமின் வினையில் மாறாக SF5Br உருவாகிறது.[6] இவ்வெதிர் வினை இருகந்தகப் பதின்புளோரைடை SF5Br இல் இருந்து தொகுப்பு முறையில் தயாரிக்கப் பயன்படுகிறது[7].
அமோனியா இருகந்தகப் பதின்புளோரைடால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு [[தையசைல் முப்புளோரைடு NSF3 உருவாகிறது.[8]
நச்சுத்தன்மை
நிறமற்ற ஒரு வாயுவாக அல்லது கந்தக டை ஆக்சைடின் நெடியைக் கொண்ட ஒரு திரவமாக இருகந்தகப் பதின்புளோரைடு காணப்படுகிறது[9]. பாசிகீனை விட நான்கு மடங்கு அதிகமான நச்சுத்தன்மை கொண்ட இவ்வாயுவின் நச்சுத்தன்மையானது நுரையீரலில் விகிதச்சமமாதலின்றி SF6 மற்றும் SF4 ஆகச் சிதைவதால் ஏற்படுகிறது. SF6 வாயு மந்தமானது ஆனால் SF4 ஈரப்பதத்துடன் வினைபுரிந்து கந்தச அமிலம் மற்றும் ஐதரோ குளோரிக் அமிலம் ஆகியனவற்றை உருவாக்குகிறது.[10]தண்ணீர் மற்றும் நீர்க்கரைசல்களால் கடுமையான நீராற்பகுப்பிற்கு உட்படுவதால், மாற்றமேதும் ஆகாமல் இவ்வாயு இருகந்தகப் பதின்புளோரைடாக இருக்கும்போது நச்சுத்தன்மையற்றுக் காணப்படுகிறது.
↑Harvey, R. B.; Bauer, S. H. (June 1953). "An Electron Diffraction Study of Disulfur Decafluoride". Journal of the American Chemical Society75 (12): 2840–2846. doi:10.1021/ja01108a015.
↑Cohen, B.; MacDiarmid, A. G. (December 1965). "Chemical Properties of Disulfur Decafluoride". Inorganic Chemistry4 (12): 1782–1785. doi:10.1021/ic50034a025.
↑Winter, R.; Nixon, P.; Gard, G. (January 1998). "A new preparation of disulfur decafluoride". Journal of Fluorine Chemistry87 (1): 85–86. doi:10.1016/S0022-1139(97)00096-1.
↑Mitchell, S. (1996). Biological Interactions of Sulfur Compounds. CRC Press. p. 14. ISBN0-7484-0245-4.
Christophorou, L. G.; Sauers, I. (1991). Gaseous Dielectrics VI. Plenum Press. ISBN0-306-43894-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)