இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைஇலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு தமது அறிக்கையை பான் கி மூனிடம் 2011 ஏப்ரல் மாதம் கையளித்தது. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் போர் குற்றங்களும் மனித இனத்துக்கெதிரான குற்றங்களும் இழைத்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டி உள்ளது.[1] இலங்கை போர்க்குற்றம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை ஐநா சபை ஏப்ரல் 26, 2011 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மொத்தம் 216 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டும் புகைப்படங்களும், விளக்கப் படங்களும் இடம்பெற்றுள்ளன.[2] அறிக்கையின் முழு உரைஅறிக்கையின் முழு வடிவம் ஏப்ரல் 25, 2011 அன்று ஐ.நா வலைத்தளத்தில் www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf முகவரியில் வெளியிடப்பட்டது. அறிக்கை மார்ச் 31, 2011 அன்று ஐ.நா செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை அரசிற்கு இது பின்னர் கையளிக்கப்பட்டது. பொதுவில் வெளியிடப்பட முன்பு இலங்கை அரச சார்புப் பத்திரிகையான ஐலண்டில் இதன் கசிவுகள் வெளியாகின. அரச தரப்பு மீதான குற்றச்சாட்டுக்கள்
விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கள்
பரிந்துரைகள்சுதந்திர, அனைத்துலக விசாரணைஐ.நா ஒரு சுதந்திரமான, அனைத்துலக விசாணை (independent international mechanism) முறைமையை அமைக்கப் பரிந்துரை செய்துள்ளது.[3] பிற உடனடிப் பொறுப்பாண்மை செயற்பாடுகள்பல்வேறு பரிந்துரைகள் இதன் கீழ் வருகின்றன. அரச வன்முறை, அரச கருவிகள், அரச துணைக் குழுக்கள் வன்முறையை நிறுத்துவது[4], அவசரகால சட்டத்தை நீக்குவது, மற்றும் அனைத்து அடிப்படை மனித உரிமைகளையும் மதித்துச் செயற்படுவது ஆகியவை இதில் அடங்கும். நீண்டகால பொறுப்பாண்மை செயற்பாடுகள்ஐ.நாவுக்கான பரிந்துரைகள்இலங்கை அரசின் மறுப்புகள்இலங்கை அரசு அதன் குற்றச்சாட்டுக்களை முற்றிலும் மறுத்துள்ளது. ஐ.நா வுக்கு எதிராக மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.[5] பொதுவில் வெளியிடுவதில் தாமதங்கள்இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று இலங்கை ஐ.நாவை எச்சரித்தது. அறிக்கையை வெளியிடுவது இலங்கையில் நடக்கும் இணக்கப்பாட்டு வேலைக்கும், ஐ.நாவின் மதிப்புக்கும் பங்கம் விளைவிக்கும் என்று அரசு தெரிவித்தது. ஐ.நா இலங்கை அரசின் கருத்துக்களையும் சேர்த்து வெளியிட இசைந்துள்ளது.[6] எனினும் வெளிடுவதற்கான ஒரு உறுதியான திகதியை ஐ.நா தரவில்லை. இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia