இலங்கைத் தமிழர் பற்றிய மரபியற் கற்கை![]() இலங்கைத் தமிழரின் கலாச்சாரத்தினதும் மொழியியலினதும் தனித்தன்மை, மரபியற் கற்கை என்பன தென்னிந்தியாவிலுள்ள இந்தியத் தமிழருடன் தொடர்பு கொண்டுள்ள அதேவேளை இலங்கை தீவிலுள்ள ஏனைய இனக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பதை தெரிவிக்கின்றது. வேறுபட்ட கற்கைகள் இலங்கைத் தமிழர், சிங்களவர், இந்திய இனக்குழுக்களுக்கு இடையிலான தொடர்பின் பல்வகைக் கோணங்களை காட்டுகின்றன. 1995இல் கலாநிதி. கெளதம் கே. சாட்ரியாவின் மரபியல் கூட்டுக்கலவை கற்கையின்படி, இலங்கைத் தமிழர் சிங்களவர்களுடன் நெருங்கிய தொடர்பும் குறைந்தளவு தொடர்பை வங்காளி மக்களுடனும் இந்தியத் தமிழர்களுடனும் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றது. அவரின் கற்கை இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர்களுடனான தொடர்பைவிட (16.63% +/- 8.73) சிங்களவர்களுடன் பாரிய தொடர்பை (55.20% +/- 9.47) கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், சிங்களவர் தென்னிந்திய தமிழர்களுடன் பாரிய தொடர்பையும் (69.86% +/- 0.61), அதற்கடுத்து வட இந்திய வங்காளியினருடன் தொடர்பு (25.41% +/- 0.51). கொண்டிருப்பதாக கண்டார். இலங்கைத் தமிழரும் சிங்களவரும் 55% பொது மரபணுத்தொகுப்பை பகிர்கின்றனர். அவர்களுக்கும் சுதேசிகளான வேடுவர்களுக்குமான தொடர்பு தொலைவில் காணப்படுகின்றது.[1] இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்குமான இந்த நெருங்கிய தொடர்பானது, இரு சனத்தொகைக்குமான வரலாற்று, மொழியியல், கலாச்சார நெருங்கிய தொடர்பானது 2000 வருடங்களுக்கு மேலானது.[1] ![]() குறிப்புகள்
இவற்றையும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia