சிங்களவர் பற்றிய மரபியற் கற்கை![]() சிங்களவர் பற்றிய மரபியற் கற்கை என்பது இன்றுள்ள சிங்களவர் மக்கள் சனத்தொகையின் ஆரம்பம் பற்றிய விசாரணையின் சனத்தொகை மரபியல் பகுதியாகும். இக்கற்கை சிங்களவர் மூலம் பற்றிய வேற்றுமைகளைப் பார்க்கின்றது. பழைய கற்கை பெருமளவு தமிழ் மூல தொடர்பும், வடமேற்கு இந்தியத் தொடர்பற்று குறிப்பிட்டளவு வங்காளியினருடன் தொடர்பும் உள்ளதாகக் குறிப்பிடுகின்றது.[1] அதேவேளை தற்காலக் கற்கைகள் பெருமளவு வங்காளத் தொடர்பும் சிறியளவு தமிழ் மற்றும் வடமேற்கு இந்தியத் தொடர்பும் உள்ளதாகக் குறிப்பிடுகின்றது.[2][3][4] எவ்வாறாயினும், எல்லாக் கற்கைகளும் சிங்களவர், தமிழர், வங்காளியினர் இடையே குறிப்பிடத்தக்களவு தொடர்பு இருப்பதை ஏற்றுக் கொள்கின்றன. இந்த மரபியல் தொலை கற்கை சிங்களவர், தமிழர், கேரளர் ஆகிய தொண்டர்களுக்கிடையில் பாரிய வேறுபாட்டு மரபியல் நெருக்கம் இல்லாது இருப்பதை வெளிப்படுத்தியது.[2] இவற்றையும் பார்க்ககுறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia