இலட்மண் மாணிக்கியா (Lakshman Manikya) 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த மகாராஜாவாக இருந்தார், இருப்பினும் இவர் சிறிய அதிகாரத்தையே தக்க வைத்துக் கொண்டார், சம்சேர் காசியின் கீழ் ஒரு பொம்மை-மன்னராக மட்டுமே செயல்பட்டார்.
1748 ஆம் ஆண்டில், திரிபுராவின் கட்டுப்பாட்டை வங்காள முஸ்லிம் ஜமீந்தாரான சம்சேர் காசி கைப்பற்றினார்.[4] இராச்சியத்தின் குடிமக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்ட காசி, வனமாலியை இலட்மண் மாணிக்கியா என்ற பெயரில் அரியணையில் அமர்த்தினார். இருப்பினும் உண்மையான அதிகாரம் அவரே வைத்திருந்தார். இலட்மண் மக்களின் ஆதரவைப் பெறத் தவறிய போதிலும், இது மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது. இறுதியில், காசியால் வெளியேற்றப்பட்டார். அவர் தானே அரியணையை எடுத்துக் கொண்டார். இருப்பினும் அவரது ஆட்சி குறுகியதாக இருந்தபோதிலும், அசல் மாணிக்கிய வம்சம் 1760 இல் அதிகாரத்தை மீட்டெடுத்தது.[5][6] இவரது மகன் துர்கா மாணிக்கியாவும் பின்னர் திரிபுராவின் ஆட்சியாளரானார், 1809 முதல் 1813 வரை ஆட்சி செய்தார்.[7]
↑Durlabhendra; Sukheshwar; Baneshwar (1999). Sri Rajmala. Translated by Kailāsa Candra Siṃha; N.C. Nath. Agartala: Tribal Research Institute, Govt. of Tripura. p. 176.