இலட்சுமிபுரம் அரண்மனை
இலட்சுமிபுரம் அரண்மனை (Lakshmipuram Palace) ( மலையாளம்: ലക്ഷ്മീപുരം കൊട്ടാരം) என்பது சங்கனாச்சேரியிலிருந்த பரப்பநாடு அரசக் குடும்பத்து அரண்மனையாகும். அரண்மனையானது கவில் பகவதி கோயிலுக்கு அருகிலுள்ள புழவத்தில் அமைந்துள்ளது. [1] அரண்மனையானது பொ.ச. 1811இல் திருவிதாங்கூரின் ஆட்சியாளர் மகாராணி ஆயில்யம் திருநாள் கௌரி லட்சுமி பாய் (1791–1815) தனது கணவர் இராஜா இராஜவர்மா வல்லிய கோயி தம்புரானின் குடும்பத்தின் சார்பாக கட்டினார்.[2] பின்னர், சங்கனாச்சேரி நீராழி அரண்மனையிலிருந்த அரச குடும்பத்தினர் புதிதாக கட்டப்பட்ட இலட்சுமிபுரம் அரண்மனைக்கு மாறினர். [3] பின்னணி![]() 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஐதர் அலி மலபார் பிரதேசத்தின் மீது படையெடுத்த பிறகு, அலியக்கோடு சுவரூபம் ( பரப்பநாடு சுவரூபம் ) கிளையின் குஞ்சிகுட்டி தம்புராட்டி கார்த்திகைத் திருநாள் இராம வர்மனின் காலத்தில் தனது ஐந்து மகள்களுடன் திருவிதாங்கூரில் தஞ்சம் புகுந்தார். திருவிதாங்கூர் மகாராஜா தெக்கும்கூர் வம்சத்தைச் சேர்ந்த நீராழி அரண்மனையை இவர்களுக்கு வழங்கினார். பின்னர், குஞ்சிகுட்டி தம்புராட்டியின் மூத்த மகள்கள் திருவல்லாவிலும், பல்லத்திலும் தங்கள் சொந்த அரண்மனைகளைக் கட்டினர். இளைய மகள், இஞ்சானியம்மா சங்கனாசேரியில் கட்டப்பட்ட நீராழி அரண்மனையில் குடியேறினார். கோயி தம்புரான் திருவிதாங்கூரின் இராணிகளையும். இளவரசிகளையும் திருமணம் செய்து கொள்பவர்களின் பட்டமாகும். பரப்பநாடு வம்சத்திலிருந்து நீராழி அரண்மனையில் குடியேறியவர்கள் கோயி தம்புரான்களின் பண்டைய குலங்களைச் சேர்ந்தவர்களாவர்.[4] திருவிதாங்கூரைச் சேர்ந்த மகாராணி கௌரி இலட்சுமி பாயியை மணந்த இராஜா இராஜவர்மா வல்லிய கோயி தம்புரான் இஞ்சனியம்மாவின் பேரனாவார். 1811 ஆம் ஆண்டில், மகாராணி இலட்சுமி பாயி, தனது கணவரின் குடும்பத்திற்காக சங்கனாச்சேரியில் ஒரு புதிய அரண்மனையைக் கட்டினார். இது பின்னர் இலட்சுமிபுரம் அரண்மனை என்று அழைக்கப்பட்டது. இவர்களின் மகனும், பிரபல இசைக்கலைஞரும், பாடலாசிரியருமான சுவாதித் திருநாள் ராம வர்மா 1828 முதல் 1846 வரை திருவிதாங்கூரை ஆண்டார்.[5] கூடுதல் படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia