இலாடம்![]() ![]() ![]() ![]() இலாடம் (ⓘ) அல்லது லாடம் (Horseshoe) [1] பொதி சுமக்கும் அல்லது வண்டி இழுக்கும் மாடு, குதிரை போன்ற விலங்குகளின் குளம்புகள் தேய்ந்து புண் ஏற்படாமல் இருக்க, குளம்பின் அடியில் ஆணிகள் அடித்துப் பொருத்தப்படும் வளைந்த கனத்த இரும்புத் தகடு ஆகும். இந்தியாவில் குதிரைகளுக்கு இலாடம் அடிக்கும் முறையை பாரசீகர்கள் அறிமுகப்படுத்தினர். இந்தியாவில் குதிரை மற்றும் மாடுகளுக்கு லாடம் அடிப்பவர்களை கொல்லர் என்பர். லாடம் அடித்தல்குளம்புகளின் அடிப்புறத்தில் லாடம் அடிப்பதன் மூலம் போர்க் குதிரைகள், வண்டி இழுக்கும் குதிரைகள் மற்றும் மாடுகளின் குளம்புகள் உராய்வுகளால் தேய்ந்து புண் அல்லது காயம் ஏற்படாமல் இருக்க லாடம் அடிக்கப்படுகிறது. இதனால் இது போன்ற விலங்களின் குளம்புகள் பாதுகாக்கப்படுகின்றன. லாடம் குறித்தான நம்பிக்கைகள்![]() மேற்கத்திய நாடுகளில் தேய்ந்து போன பழைய குதிரை லாடம் அதிர்ஷ்டமும், தீய ஆவிகளை விரட்டியடிக்கும் தாயத்து [2] போன்று வல்லமை பொருந்தியது என்ற நம்பிக்கையால், குதிரை லாடத்தை வீட்டின் முன்புற வாயிற் கதவில் பொருத்திவிடும் வழக்கம் உள்ளது. [3] இந்நம்பிக்கை பத்தாம் நூற்றாண்டில் காண்டர்பரி ஆர்ச் பிஷப் டங்ஸ்டன் காலத்தில் இங்கிலாந்தில் துவங்கியது. [4] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia