குளம்பு![]() ![]() ![]() குளம்பு அல்லது குளம்பி அல்லது குளம்புகள்[1] (hoof) (/ˈhuːf/ பாலூட்டி விலங்குகளில் குறிப்பாக குதிரை, கழுதை, ஆடு, மாடு, பன்றி, மான், வரிக்குதிரை, ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி, நீர்யானை போன்ற விலங்கினங்களின் கால்களின் அடிப்பகுதியை பாதுகாக்கும் கனமான நகத்தால் மூடப்பட்டிருக்கும். சில குளம்பிகளின் மேல் அடர்ந்த மயிர்களால் சூழப்பெற்றிருக்கும்.[2] இவ்விலங்குகள் ஓடும் போது, இவற்றின் அடிப் பாதங்கள் கற்களாலும், முற்களாலும் பாதிக்காமல் இருக்க கனமான நகம் போன்ற இக்குளம்புகள் காக்கிறது. இக்குளம்பிகள் நகம் போன்று கனத்த பகுதியாகும். தொடர்ந்து வளரக்கூடிய குளம்பிகளை அவ்வப்போது உரிய இயந்திரங்களால் சீர்செய்து இலாடம் அடிப்பர். குளம்பிகளின் வகைகள்ஒரு காலில் எத்தனை குளம்புகள் உள்ளது என்பதைக் கொண்டு விலங்கினங்களின் குளம்புகள் வகைப்படுத்தப்படுகிறது. குதிரை, கழுதை போன்ற ஒற்றைக் குளம்புகள் கொண்ட விலங்கினங்களை ஒற்றைப்படைக் குளம்பிகள் என்றும், மாடு, பன்றி, மான், வரிக்குதிரை, ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி, நீர்யானை போன்ற இரட்டை குளம்புகள் கொண்ட விலங்கினங்களை இரட்டைப்படைக் குளம்பிகள் என்பர். ஒற்றைப்படை குளம்பிகள் கொண்ட விலங்குகளை விட, இரட்டைப்படை குளம்பிகளைக் கொண்ட ஆடு, மாடு, மான் போன்ற விலங்கினங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. [3]ஆடுகள் நான்கு குளம்புகள் கொண்டுள்ளது. குளம்புகளில் இலாடம் அடித்தல்பொதி சுமக்கும், வண்டி இழுக்கும் குதிரை மற்றும் மாடுகளின் கால் குளம்புப் பகுதிகளை உராய்விலிருந்து பாதுகாக்க இலாடம் அடிக்கப்படுகிறது. [4] படக்காட்சிகள்
இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia