இலா காந்தி
இலா காந்தி (Ela Gandhi) (பிறப்பு: ஜூலை 1, 1940), தென்னாப்பிரிக்காவின் அமைதி ஆர்வலரும் மற்றும் முன்னாள் அரசியல்வாதியும் ஆவார்.[1] இவர் 1994 முதல் 2004 வரை தென்னாப்பிரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அங்கு இவர் குவாசுலு-நதால் மாகாணத்திலுள்ள இனாண்டாவின் பீனிக்ஸ் குடியிருப்புப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார். இவர் நீதிக் குழுவின் மாற்று உறுப்பினராக இருந்தார். மேலும், நீதித்துறை மற்றும் சட்ட அமைப்புகள் பற்றிய குழு 5 இல் பணியாற்றினார். இவர் மகாத்மா காந்தியின் பேத்தி ஆவார். இளமை வாழ்க்கைஇலா காந்தி தென்னாப்பிரிக்காவின் டர்பனில் பிறந்தார். இவரது தந்தை மணிலால் காந்தி “இந்தியன் ஒபினியன்” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். இது இவரது தாத்தா காந்தி இனாண்டாவின் புறநகரில் இடம் ஒன்றை வாங்கி பீனிக்ஸ் குடியிருப்பை உருவாக்கினார். அங்குதான் இவர் வளர்ந்தார்.[2] முன்னாள் நதால் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை பட்டத்தைப் பெற்றார். பின்னர் தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவங்களுடன் சமூக அறிவியலில் பட்டம் பெற்றார்.[3] பட்டம் பெற்ற பிறகு, 15 ஆண்டுகள் வெருளம் குழந்தைகள் மற்றும் குடும்ப நலச் சங்கத்திலும், ஐந்து ஆண்டுகள் டர்பன் இந்திய குழந்தைகள் மற்றும் குடும்பநலச் சங்கத்திலும் சமூக சேவகராக பணியாற்றினார்.[4] திருமணம்இலா மேவா ராம்கோபின் என்பவரை மணந்தார். இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். 1993 ஆம் ஆண்டில் இவர்களது ஒரு மகன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்களின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின் மோசடி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு 2021 இல் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். தொழில் வாழ்க்கைஇலா காந்தி, அதன் தொடக்கத்திலிருந்து 1991 வரை நதால் மகளிர் அமைப்பின் நிர்வாக உறுப்பினராக பணியாற்றினார். இவரது அரசியல் தொடர்புகளில் இவர் துணைத் தலைவராக பணியாற்றிய நதால் இந்திய காங்கிரசு, ஐக்கிய ஜனநாயக முன்னணி, டெஸ்காம் கிரைசிஸ் வலையமைப்பு மற்றும் இனாண்டா ஆதரவுக் குழு ஆகியவை அடங்கும்.[5] இனவொதுக்கலின் போது, இலா காந்தி 1975 இல் அரசியல் செயல்பாட்டில் இருந்து தடை செய்யப்பட்டார் . மொத்தம் ஒன்பது ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1990 பிப்ரவரி 11 அன்று போல்ஸ்மூர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு நெல்சன் மண்டேலாவைச் சந்தித்த ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களில் இவரும் ஒருவர். 1994 தேர்தலுக்கு முன்பு, இவர் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார்.[5] நாடாளுமன்றத்திற்குப் பிறகுநாடாளுமன்றத்தில் பணியாற்றிய பிறகு, இலா காந்தி குடும்ப வன்முறைக்கு எதிரான 24 மணி நேர திட்டத்தை உருவாக்கி, காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையை நிறுவினார். மத விவகாரக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். மாதாந்திர செய்தித்தாளை மேற்பார்வையிட்டார். மகாத்மா காந்தி உப்பு அணிவகுப்புக் குழு மற்றும் மகாத்மா காந்தி மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவராகவும் உள்ளார்.[6] விருதுகளும் அங்கீகாரங்களும்![]() 2002 ஆம் ஆண்டில், காந்தி கிறிஸ்துவின் சமூக சர்வதேச அமைதி விருதைப் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கியது.[7] 2014 ஆம் ஆண்டில், உம்கொன்ரோ வெய் சிசுவே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[8] வாசிங்டன், டி. சியிலுள்ள இந்திய மாணவர் மையத்தின் தூதரகம், 2020 ஆம் ஆண்டின் வகுப்பில் 15,000 க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்களுடன் ஒரு மெய்நிகர் பட்டமளிப்பு விழாவின் போது பேச இலா காந்தியை அழைத்தது.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia