இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு
இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு (Lithium hexafluorophosphate ) என்பது LiPF6. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் படிகத்தூளாக இது காணப்படுகிறது. முனைவுக் கரைப்பான் மற்றும் நீர் தவிர்த்த ஏனைய கனிம வேதியியல் கரைப்பான்கள் ஆகியவற்றில் இதன் கரைதிறன் காரணமாக, வணிக முறையிலான இரண்டாம் நிலை மின்கலன்களில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[1]. குறிப்பாக புரோப்பைலீன் கார்பனேட்டு மற்றும் டைமெத்தாக்சியீத்தேனில் உள்ள இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு இலித்தியம் வகை மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இலித்தியம் உலோகம் போன்ற வலிமையான ஒடுக்கும் முகவர்களுடன் எக்சாபுளோரோ பாசுப்பேட்டு எதிர்மின் அயனி மந்தத்தன்மையுடன் இருப்பதும் இம்முறையில் வெளிப்படுகிறது. வெப்பச்சூழலில் இவ்வுப்பு நிலைத்தன்மையுடன் காணப்படுகிறது. ஆனால் 200° செல்சியசு வெப்பநிலையில் 50% எடையை இழக்கிறது. 70° செல்சியசு வெப்பநிலையில் பின்வருமாறு நீராற்பகுப்பு அடைகிறது.
Li+ அயனிகளின் இலூயிசு அமிலத்தன்மையால் LiPF6 சேர்மமும் மூவிணைய ஆல்ககால்களின் டெட்ராயைதரோபைரனேற்ற வினையில் வினையூக்கியாகச் செயல்படுகிறது[2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia