பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு
பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு (Potassium hexafluorophosphate) என்பது KPF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இவ்வுப்பில் பொட்டாசியம் நேர்மின் அயனிகளும் எக்சாபுளோரோபாசுப்பேட்டு எதிர் மின்னயனிகளும் சேர்ந்துள்ளன :[2]. PCl5 + KCl + 6 HF → KPF6 + 6 HCl என்ற வினை பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு உருவாதலை விளக்குகிறது. நீர்ம ஐதரசன் புளோரைடில் இவ்வெப்ப உமிழ்வினை நடைபெறுகிறது. சூடான நீர்த்த காரக் கரைசலில் இவ்வுப்பு நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இதிலிருந்து பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு மீள்படிகமாக்கப்படுகிறது. சோடியம் மற்றும் அமோனியம் உப்புகள் நீரில் அதிகம் கரைகின்றன. ஆனால் ருபீடியம் உப்புகள் குறைந்த அளவிலேயே கரைகின்றன. எக்சாபுளோரோபாசுப்பேட்டு எதிர் மின்னயனிக்கு KPF6 என்பது ஒரு பொதுவான ஆதார மூலமாகும். ஒருங்கிணைவு அடையாத எதிர்மின் அயனியான இது அதன் உப்புகளுக்கு கொழுப்பின் மீதான நாட்டத்தை அளிக்கிறது. இவ்வுப்புகள் நெருங்கிய தொடர்புடைய டெட்ராபுளொரோ போரேட்டுகளை விட குறைந்த அளவிலேயே கரைகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia