இலியாசு அலிஇலியாசு அலி (Ilias Ali)(பிறப்பு 1955) என்பவர் இந்தியாவின் அசாமைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். 2019ஆம் ஆண்டில், அசாமின் பின்தங்கிய பகுதிகளில் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டார்.[1] தொழில்அலி கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[1] இவர் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவசர மருத்துவப் பிரிவை நிறுவினார்.[2] சமூக பணி1993ஆம் ஆண்டு முதல், அசாமின் பின்தங்கிய பகுதிகளில், குறிப்பாக பெங்காலி முஸ்லீம் குடியிருப்புகளுக்குள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை முறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அலி முன்னிறுத்தி வருகிறார். நோ ஸ்கால்பெல் வாசெக்டமிக்கு உட்படுத்த மக்களை இவர் ஊக்குவிக்கிறார். மேலும் பலத்த எதிர்ப்பையும் மீறி, 2008 மற்றும் 2018க்கு இடையில் சுமார் 55,000 பேரை என். எஸ். வி. செயல்முறைக்கு உட்படுத்த ஊக்குவித்துள்ளார். குழந்தை திருமணம் மற்றும் பலதார மணத்திற்கு எதிராகவும் அலி குரல் கொடுத்துள்ளார்.[3] புத்தகங்கள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia