இ. முத்துராமலிங்கம்

இ. முத்துராமலிங்கம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்ஒய். எஸ். எம். யூசுப்
பின்னவர்குமரி அனந்தன்
தொகுதிஇராதாபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1951-02-13)13 பெப்ரவரி 1951
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிகாந்தி காமராஜ் தேசிய காங்கிரசு
தொழில்வணிகர்

இ. முத்துராமலிங்கம் (E. Muthuramalingam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திசையன்விளையில் பிறந்தவர். திசையன்விளை, உலக இரட்சகர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். சென்னை, லயோலாக் கல்லூரியிலும் பயின்றுள்ள முத்துராமலிங்கம், காந்தி காமராஜ் தேசிய காங்கிரசினைச் சார்ந்தவர். இவர் 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 416-417.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya