ஈரமான ரோஜாவே என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் 9 ஜுலை 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி 14 ஆகத்து 2021 ஆம் ஆண்டு அன்று 807 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1]
இந்த தொடரில் மலராக 'பவித்ரா' நடிக்கிறார். புதுமுக நடிகர் திரவியம் வெற்றியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சியாம், சாய் காயத்ரி போன்ற பலர் நடிக்கிறார்கள். இந்தத் தொடரை பிரான்சிஸ் கதிரவன், ரிஷி, மற்றும் ரவி பிரியன் ஆகியோர் இயக்கியுள்ளனர். ஒளிப்பதிவு ரமேஷ் துரை, இசை எம்ஆர்.[2] மலரின் வாழ்க்கையில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள்தான் இந்தத் தொடரின் முக்கிய கரு.
கதைச்சுருக்கம்
பிரிந்திருக்கும் இரு குடும்பங்களைச் சேர்ந்த இளம் தலைமுறையினரான மலரும் மாறனும் காதல் வலையில் விழுகின்றனர். தங்களது திருமணத்தின் வழியாக இரண்டு குடும்பங்களும் ஒன்று சேரும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், வாழ்க்கை வேறு திருப்பங்களுடன் காத்துக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு முதல் நாள், மாறன் ஒரு விபத்தில் இறக்கிறான். மேலும், சூழ்நிலை காரணமாக மாறனின் தம்பி வெற்றியை திருமணம் செய்து கொள்கிறார் மலர். வெற்றிதான் மாறனின் இறப்பிற்கு காரணம் என்று எண்ணுகிறார் மலர்.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
பவித்ரா - மலர் வெற்றி
மாறனின் முன்னாள் காதலி, தற்பொழுது வெற்றியின் மனைவி.