ஈரயோடின் நான்காக்சைடு
ஈரயோடின் நான்காக்சைடு (Diiodine tetroxide) என்பது I2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டை அயோடின் டெட்ராக்சைடு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. அயோடினும் ஆக்சிசனும் சேர்ந்து அயோடின் ஆக்சைடு சேர்மமாக உருவாகும் இச்சேர்மம் ஒரு கலப்பு ஆக்சைடாகும். இச்சேர்மத்தில் அயோடின்(III) மற்றும் அயோடின்(V) ஆகிய இரண்டு ஆக்சிசனேற்ற நிலைகளிலும் காணப்படுகிறது. தயாரிப்புஅயோடிக் அமிலத்தின் மீது சூடான செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்தைச் சேர்த்து பலநாட்களுக்கு வினைபுரியச் செய்தால் ஈரயோடின் நான்காக்சைடு உருவாகிறது.[1]
ஈரயோடின் ஐந்தாக்சைடுடன் கந்தக அமிலத்தில் உள்ள அயோடின் அல்லது நீரில் கரைக்கப்பட்ட அயோடோசில் சல்பேட்டு ((IO)2SO4) ஆகியவை வினைபுரிந்தாலும் ஈரயோடின் நான்காக்சைடு உருவாகும்.:[2]
இயற்பியல் பண்புகள்ஈரயோடின் நான்காக்சைடு மஞ்சள் நிறத்தில் சிறுமணிகளாலான தூளாகக் காணப்படுகிறது. 85 °செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலையில் இது ஈரயோடின் ஐந்தாக்சைடு மற்றும் அயோடினாக சிதைகிறது:
இந்த செயல்முறை 135 ° செல்சியசு வெப்பநிலையில் இன்னும் வேகமாக இருக்கும். இது சூடான நீரில் கரைந்து அயோடேட்டு மற்றும் அயோடைடை உருவாக்குகிறது.[1] கட்டமைப்பு ரீதியாக, இச்சேர்மமானது அயோடைல் அயோடைட்டு O2I-OIO (அயோடின்(V,III) ஆக்சைடு) ஆகும்.[1] வளைந்த IVO2 அலகுகள் (I-O தூரங்கள் 1.80 மற்றும் 1.85 Å; ∠OIO கோணம் 97°) மற்றும் வளைந்த IIIIO2 அலகுகள் (IOIO2 தூரம்) 1.93 Å, OIO கோணம் 95.8°). இரண்டு அலகுகளும் I—O—I பாலங்கள் வழியாக இணைக்கப்பட்டு பல்லுருவ கோணல் மாணல் சங்கிலிகளை (I2O4)x உருவாக்குகின்றன.[1] a = 8.483 b = 6.696 c = 8.333 Å மற்றும் β = 124.69°. அலகு செல் தொகுதி = 389.15 Å3. Z = 4. அடர்த்தி 2.57 மில்லிகிராம்/மீ3 என்ற அலகு செல் பரிமாண அளவுகளுடன் ஈரயோடின் நான்காக்சைடு இடக்குழு P21/c (குழு எண் 14) உடன் ஓர் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[2][3] வினைகள்ஐதரோகுளோரிக் அமிலத்தை ஈரயோடின் நான்காக்சைடு ஆக்சிசனேற்றம் செய்கிறது:[4]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia