ஈரானிய பெண்கள் உரிமைகள் இயக்கம்![]() ஈரானிய பெண்கள் உரிமைகள் இயக்கம் (பாரசீகம்: جنبش زنان ایران), ஈரான் நாட்டில் இசுலாமியப் பெண்களின் உரிமைகளுக்கான சமூக இயக்கமாகும். 1910ம் ஆண்டில் ஈரானிய அரசியலமைப்புப் புரட்சிக்குப் பிறகு இந்த இயக்கம் முதன்முதலில் தோன்றியது. அந்த ஆண்டு முதல் பெண்களால் பெண்களுக்கான இதழ்கள் வெளியிடப்பட்டது. பெண்கள் உரிமை இயக்கம் 1933ஆம் ஆண்டு வரை நீடித்தது. இறுதியாக மகளிர் உரிமை இயக்கம் பேரரசர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது. 1979ல் நடைபெற்ற ஈரானியப் புரட்சிக்குப்[1][2] பிறகு பெண்கள் உரிமை இயக்கம் மீண்டும் வளர்ந்தது. 1962 மற்றும் 1978ம் ஆண்டுகளுக்கு இடையில், ஈரானிய பெண்கள் இயக்கம் 1963ல் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை போன்ற வெற்றிகளைப் பெற்றது. இது ஈராணியப் பேரரசர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவியின் வெள்ளைப் புரட்சியின் ஒரு பகுதியாகும். பெண்கள் பொது அலுவலகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் 1975ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடும்பப் பாதுகாப்பு சட்டம் பெண்களுக்கு புதிய உரிமைகளை வழங்கியது. விரிவாக்கப்பட்ட விவாகரத்து மற்றும் பலதார மணம் குறைக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் பல சட்டங்கள் இயற்றப்பட்டு, அதாவது பெண்களுக்கு கட்டாய முக்காடு மற்றும் பெண்களுக்கான பொது ஆடைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.[3] 2016 இல் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6% மட்டுமே பெண்கள்.[4]ஈரானில் உள்ள பெண்கள் உரிமைகள் இயக்கம் சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர ஒரு மில்லியன் கையெழுத்து பிரச்சாரம் துவக்கப்பட்டது.[5] அரசியலமைப்பு புரட்சிக்குப் பிறகுஈரானிய அரசியலமைப்புப் புரட்சி 1905 மற்றும் 1911க்கு இடையில் நடந்தது. பெண்களின் உரிமைகள் (அல்லது அதற்குப் பதிலாக உரிமைகள் இல்லாமை) பற்றிய நனவின் ஆரம்ப கருக்கள் சமூகங்கள் மற்றும் பத்திரிகைகளை நிறுவுவதற்கு வழிவகுத்தன. பெண்களின் குறைந்த நிலை மற்றும் அவர்களின் பல அமைப்புகள் மற்றும் சமூகங்களின் இரகசிய செயல்பாடு, இந்த விஷயத்தைப் பற்றிய தகவல்களின் அளவை மட்டுப்படுத்தியுள்ளது. அந்தக் காலத்தில் பெண்களின் எழுத்துகள், முக்கியமாக நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவருவது, இயக்கம் பற்றிய தகவல்களின் மதிப்புமிக்க ஆதாரங்களில் ஒன்றாகும். கூடுதலாக, ஈரானியப் பெண்களின் நிலைமைகள் மற்றும் பிற இடங்களில் உள்ள கல்வி வாய்ப்புகள் பற்றி அறிந்திருந்தனர் மற்றும் அவர்களால் ஈர்க்கப்பட்டது.[6] கல்விபெண் ஆர்வலர்கள் கல்வியே தங்களின் நோக்கத்தில் மையமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அவர்கள் முன்வைத்த வாதம் பெண்களுக்கு கல்வியை வழங்குவது ஈரானுக்கு ஒட்டுமொத்த நல்லது எனக்கருதினர். இதனால் தாய்மார்கள் தங்கள் நாட்டிற்கு சிறந்த குழந்தைகளை வளர்ப்பார்கள். 1918ஆம் ஆண்டில் தனியார் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத பள்ளிகளுக்குப் பிறகு, பெண்களுக்கான பத்து தொடக்கப் பள்ளிகளையும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியையும் நிறுவ அரசாங்கம் நிதி வழங்கியது. 1914 முதல் 1925 வரை, பெண்களுக்கான வெளியீடுகள், கல்வி பற்றிய விவாதங்களுக்கு அப்பால் விரிவடைந்து, குழந்தை திருமணம், பொருளாதாரம் மற்றும் சமூக அதிகாரமளித்தல் மற்றும் பெண்களின் உரிமைகள் மற்றும் சட்ட நிலை போன்ற பாடங்களை எடுத்துரைத்தன. சங்கங்கள் மற்றும் அமைப்புகள்1906ஆம் ஆண்டில், ஈரானிய பாராளுமன்றம் பெண்கள் உரிமை இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்த போதிலும், "பெண்கள் சுதந்திரத்திற்கான சமூகம்" உட்பட பல அமைப்புகளை நிறுவப்பட்டது. இது கண்டுபிடிக்கப்பட்டு தாக்கப்படும் வரை இரகசியமாக இயங்கியது. தேசபக்தி பெண்கள் லீக் 1918இல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு நோஸ்வான் வதன்கா இதழை வெளியிட்டது. 1922இல், மொஹ்தரம் எஸ்கந்தாரி "தேசபக்தி பெண்கள் அமைப்பை" உருவாக்கினார். அவர் கைது செய்யப்பட்டதுடன், வீடு எரிக்கப்பட்டது. சான்தோக்த் சிராசி எனும் பெண் ஆர்வலர், "பெண்கள் புரட்சிகர சங்கம்" நிறுவினா. பெண்கள் இயக்கத்தின் இந்த ஆரம்ப கட்டத்தில், சம்பந்தப்பட்ட பெண்கள் பொதுவாக நன்கு அறியப்பட்ட அரசியலமைப்புவாதிகளின் மகள்கள், சகோதரிகள் மற்றும் மனைவிகளாக இருந்தனர். பொதுவாக அவர்கள் படித்த, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெண்களின் குறைந்த நிலை மற்றும் அவர்களின் பல அமைப்புகள் மற்றும் சமூகங்களின் இரகசிய செயல்பாடு ஆகியவை இந்த விஷயத்தைப் பற்றிய தகவல்களின் அளவை ஓரளவு மட்டுப்படுத்தியது. பகலவி வம்ச மன்னர்கள் ஆட்சியில்ரேசா ஷா பகலவி சகாப்தம் (1925-1941)![]() ஈரானில் பெண்களின் முதல் உரிமை கல்வியில் துவங்கியது. 1928இல் பெண்கள் வெளிநாட்டில் படிக்க நிதியுதவி வழங்கப்பட்டது. 1935ல் பெண்கள் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.[9] மேலும் 1944ல் பெண்களுக்கு கல்வி கட்டாயமாக்கப்பட்டது. 1932ல், கிழக்கத்திய நாடுகளின் பெண்கள் இரண்டாவது பேராயம் தெஹ்ரான் மாநகரத்தில் நடைபெற்றது. மேலும் ஈரானியப் பெண் ஆர்வலர்கள் லெபனான், எகிப்து, இந்தியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் ஆர்வலர்களை சந்தித்தனர்.[8] 1936ம் ஆண்டில் பெண்கள் ஹிஜாப் எனப்படும் கட்டாய முக்காடு அணிமாறு மன்னர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி கட்டளையிட்டார். காவல்துறையினரின் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருக்க பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வழிவகுத்தது. கட்டாய ஹிஜாப்பிற்கு பல முன்னணி பெண்கள் உரிமை ஆர்வலர்கள் ஆதரவு அளித்தனர். முகம்மத் ரிசா ஷா பஹ்லவி சகாப்தம் (1941-1979)1940களில் சமூகத்தில் பெண்களின் பங்கு பற்றிய ஒரு உயர்ந்த உணர்வு இருந்தது. ராஹ்-இ நவ் (புதிய பாதை) 1955ல் மெஹ்ராங்கிஸ் டௌலட்ஷாஹியால் நிறுவப்பட்டது.[7]மேலும் மனித உரிமைகள் பிரகடனத்தின் ஆதரவாளர்களின் மகளிர் லீக் 1956ல் சஃபிஹ் ஃபிரோஸால் நிறுவப்பட்டது.[8] 1959ல் அந்த அமைப்புகளில் பதினைந்து பேர் ஈரானில் பெண்கள் அமைப்புகளின் உயர் குழு என்ற கூட்டமைப்பை உருவாக்கினர். உயர்குழுவில் பெண்களின் வாக்குரிமையில் அதன் முயற்சிகளை ஒருமுகப்படுத்த முடிவு செய்தது. இசுலாமிய மதகுருமார்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும், 1963ல் ஒரு தேசிய வாக்கெடுப்பு வெள்ளைப் புரட்சி எனப்படும் 6 அம்ச சீர்திருத்தத் திட்டத்திற்கு பொதுவான ஆதரவைப் பிரதிபலிக்கும் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். இதில் பெண்களின் வாக்களிக்கும் உரிமை மற்றும் பொது பதவிக்கு போட்டியிடுவதும் அடங்கும். ஈரான் பாராளுமன்றத்திற்கு (மஜ்லிஸ்) ஆறு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1960களின் பிற்பகுதியில், பெண்கள் இராஜதந்திரப் படைகள், நீதித்துறை மற்றும் காவல்துறை மற்றும் புரட்சிகர சேவைப் படைகளில் (கல்வி, சுகாதாரம் மற்றும் மேம்பாடு) நுழைந்தனர்.[9] 1968ல், ஃபரோக்ரூ பார்சா எனும் பெண் கல்வி அமைச்சரானார். அமைச்சரவை பதவியை வகித்த முதல் பெண்மணி இவர்தான். 1969ல் நீதித்துறை பெண்களுக்கு திறக்கப்பட்டது மற்றும் நோபல் பரிசு வென்ற ஷிரின் எபாடி உட்பட ஐந்து பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். பெண்கள் நகரம் மற்றும் மாவட்ட சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெண்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் சாத்தியமான அமைப்புக் கட்டமைப்பை அடைவதற்கான வழியைத் தேடும் வகையில், 1966 இல் பெண்கள் குழுக்கள் இணைந்து ஈரானின் பெண்கள் அமைப்பை உருவாக்கியது.[10] ஈரானில் பெண்ணியம்ஈரானின் பெண்கள் அமைப்பு, இளவரசி அஷ்ரஃப் ஷாவால் ஆதரிக்கப்பட்டாலும், ஈரானிய பெண்களும், ஈரானின் பெண்கள் அமைப்பும் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு முன்னேற்றத்திற்காகவும் போராட வேண்டியிருந்தது.[11] ஈரானின் பெண்கள் அமைப்பு ஒரு இலாப நோக்கற்ற அடிமட்ட அமைப்பாகும். முக்கியமாக தன்னார்வலர்கள் மூலம் செயல்படுகிறது. மாற்றத்திற்கான பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதும், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதில் வேலை செய்வதும், அதே நேரத்தில் இஸ்லாத்தின் மூலக்கூறு மற்றும் தேசத்தின் கலாச்சார மரபுகளுக்குள் இருப்பதும் இதன் இலக்குகளாகும். இது உள்ளூர் கிளைகள் மற்றும் மகளிர் மையங்கள் மூலம் செயல்பட்டது. இது பெண்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கியது - கல்வியறிவு வகுப்புகள், தொழில் பயிற்சி, ஆலோசனை, விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு.[12] ஈரானின் பெண்கள் அமைப்பின் முக்கிய வெற்றிகளில் ஒன்று 1975ல் குடும்பப் பாதுகாப்புச் சட்டம் இயற்றியது ஆகும். இது பெண்களுக்கு திருமணம் மற்றும் விவாகரத்தில் சம உரிமைகளை வழங்கியது. குழந்தை பாதுகாப்பில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தியது. பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆகவும் ஆண்களுக்கு 20 ஆகவும் அதிகரித்தது. பலதார மணம் நீக்கப்பட்டது. கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததற்கான தண்டனையை நீக்கியது. பாலின பாகுபாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க அனைத்து தொழிலாளர் சட்டங்களும் விதிமுறைகளும் திருத்தப்பட்டன. பெண்கள் அரசியல் பதவிக்கு போட்டியிட ஊக்குவிக்கப்பட்டனர். 1978ல் ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட 40% பேர் கல்வியறிவு பெற்றவர்கள். 12,000க்கும் மேற்பட்ட எழுத்தறிவுப் படைப் பெண்கள் கிராமங்களில் கற்பித்துக் கொண்டிருந்தனர். பல்கலைக்கழக மாணவர்களில் 33% பெண்கள் மற்றும் ஆண்களை விட அதிகமான பெண்கள் மருத்துவப் பள்ளிக்கான நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர். 333 பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கும், 22 பெண்கள் பாராளுமன்றத்துக்கும், 2 பேர் செனட் சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு கேபினட் அமைச்சர் (பெண்கள் விவகாரங்களுக்கான), 3 துணை-அமைச்சரவை துணைச் செயலாளர்கள், ஒரு ஆளுநர், ஒரு தூதர் மற்றும் ஐந்து பெண் மேயர்கள் இருந்தனர். வளரும் நாடுகளில் பெண்களின் உரிமைகளுக்கான முன்னணிப் பாத்திரமாக ஈரான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் பிராந்திய மையம் மற்றும் பெண்கள் குறித்தான ஆராய்ச்சிக்கான சர்வதேச மையம் ஆகியவற்றிற்கான ஆலோசனைகள் மற்றும் நிதிகளை அறிமுகப்படுத்துகிறது. 1979 ஈரானியப் புரட்சிக்குப் பிறகுபிப்ரவரி 1979 இல் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, பெண்களின் நிலை கணிசமாக மாறியது. 1978-79 புரட்சியில் பெண்களின் பங்கேற்பு மகத்தானது. பகலவி ஷாவின் கீழ் பெண்கள் பெற்ற சில உரிமைகள் பறிக்கப்பட்டது. பெண்கள் முகத்தை மறைக்கும் ஹிஜாப் கட்டயாமானது. ஒரு புதிய குடும்பச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஈரானிய அமைச்சரவையில் பணியாற்றிய முதல் பெண்மணியான ஃபரோக்ரூ பர்சா தூக்கிலிடப்பட்டார். ஈரானில் கட்டாய முக்காடு சட்டம் பலவகையான பெண்களை உள்ளடக்கிய எதிர்ப்புகளை சந்தித்தது. மகசா அமினியின் மரணம்ஷிரியத் சட்டப்படி, முக்காடு சரியாக அணிய என்ற காரணத்திற்காக, மகசா அமினி என்ற இளம் பெண் இசுலாமிய சமயக் காவலர்களால் கைது செய்து நடத்திய சித்ரவதைகளால் 16 செப்டம்பர் 2022 அன்று மகசா அமினி மரணமடைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.[13] மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia