ஈரெத்தில் செலீனைடு (Diethyl selenide) C4H10Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமசெலீனியம் வகைச் சேர்மமாகும். 1836 ஆம் ஆண்டு முதன் முதலில் ஈரெத்தில் செலீனைடு கண்டறியப்பட்டது. முதலாவதாக கண்டறியப்பட்ட கரிம செலீனியம் சேர்மமும் இதுவேயாகும்.[1][2]ஈரெத்தில் ஈதரின் செலீனியம் ஒப்புமை சேர்மமாகக் கருதப்படும் இது கடும் விரும்பத்தகாத மணத்தைக் கொண்டிருக்கும்.
தோற்றம்
வாழைப்பழத்தோலில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளில் ஈரெத்தில் செலீனைடு கண்டறியப்பட்டுள்ளது.[3] சில பகுதிகளில் இது ஒரு சிறிய காற்று மாசுபாடும் ஆகும்.
தயாரிப்பு
வில்லியாம்சன் ஈதர் தொகுப்பு வினை போன்ற ஒரு பதிலீட்டு வினை மூலம் இது தயாரிக்கப்படுகிறது. சோடியம் செலீனைடு போன்ற உலோக செலீனைடுகள் இருசம எத்தில் அயோடைடு அல்லது அதற்கு சமமான எத்தில் குழுக்களை கொடுக்கக்கூடிய வினையாக்கிகள் இவ்வினையில் பங்கேற்கின்றன.