சோடியம் செலீனைடு
சோடியம் செலீனைடு (Sodium selenide) என்பது Na2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் மற்றும் செலீனியம் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தயாரிப்பு-40 பாகை செல்சியசு வெப்பநிலையில், திரவ அமோனியா கரைசலில் உள்ள சோடியத்துடன் செலீனியம் சேர்த்து வினைபுரியச் செய்வதனால் நிறமற்ற திண்மமான சோடியம் செலீனைடைத் தயாரிக்கலாம்.[2] வாயுநிலையில் உள்ள ஐதரசன் செலீனைடுடன் சோடியம் உலோகத்தைச் சேர்த்து 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் சூடுபடுத்துவதன் மூலமாகவும் மாற்றுவழியில் சோடியம் செலீனைடு தயாரிக்க முடியும். வினைகள்மற்ற கார உலோக சால்கோசென்கள் போலவே இச்சேர்மமும் தண்ணீரால் எளிதில் தூண்டப்படக்கூடியச் சேர்மமாக, எளிதில் நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு சோடியம் இருசெலீனைடு (NaSeH) மற்றும் ஐதாக்சைடு கலவைகளைத் தருகிறது. Se2− அயனியின் உச்சமான காரத்தன்மையே இந்நீராற்பகுப்பு வினைக்கு காரணமாகிறது. Na2Se + H2O → NaHSe + NaOH இதேபோல, சோடியம் செலீனைடு உடனடியாக ஆக்சிசனேற்றம் அடைந்து பல்செலீனைடுகளாக மாறுகிறது. அரையளவு வெண்மை மாதிரிகள் இம்மாற்றத்தை அடையாளப்படுத்துகின்றன. சோடியம் செலீனைடு அமிலங்களுடன் வினைபுரிந்து நச்சு மிகுந்த ஐதரசன் செலீனைட்டு வாயுவை உற்பத்தி செய்கிறது.
மின்னணு கவரிகளுடன் இது வினைபுரிந்து செலீனியம் சேர்மங்களைக் கொடுக்கிறது. ஆல்க்கைல் ஆலைடுகளுடன் வினைபுரிந்து பல்வேறு வகையான கரிம செலீனியம் சேர்மங்களைக் கொடுக்கிறது.
கரிம வெள்ளீயம் மற்றும் கரிம சிலிக்கன் ஆலைடுகளும் இதேபோல வினைபுரிந்து தேவையான பொருட்களைக் கொடுக்கின்றன.
பாதுகாப்புஈரம் மற்றும் காற்றினால் சோடியம் செலீனைடு பாதிப்படையும் என்பதால் இச்சேர்மத்தை அவற்றிடமிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia