உகாய்க்குடி கிழார்உகாய்க்குடி கிழார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். உகாய்க்குடி எனும் ஊரினர் என்று இவர் பெயரின் மூலம் அறியமுடிகிறது. இவர் பாடியப் பாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் 63ஆவதாக உள்ளது.[1] ஊர்ப்பெயர் விளக்கம்உகாய் என்பது ஒரு செடி. இக்காலத்தில் அதனை அம்மாம் பச்சரிசிச் செடி என்பர். அச்செடி மிகுதியாக இருந்த ஊர் உகாய்க்குடி. குறுந்தொகை 63 - பாடல் தரும் செய்திஇது பாலைத்திணைப் பாடல். பொருள் தேடிவரச் செல்ல நினைத்த ஒருவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான். அதாவது அவனது மற்றொரு நெஞ்சு அவனது காதலியை நினைக்கிறது. ஒரு நெஞ்சு சொல்கிறது; பொருள் இல்லாதவர்களுக்கு ஈதலும், துய்த்தலும் இல்லை. எனவே பொருள் செய். மற்றொரு நெஞ்சு சொல்கிறது; செய்யும் பொருளால் அம்மா அரிவையை வாங்கமுடியுமா? எந்த நினைவு என்னை உய்விக்கும்? அம்மா அரிவை = அழகிய மாமைநிறம் கொண்ட அரிவை பாடல் மூலம்ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia