தமிழ்ச் சங்கம்
தமிழ்ச்சங்கம் (Tamil Sangams) என்னும் பெயரில் பல்வேறு கால-கட்டங்களில் பல்வேறு சங்கங்கள் நிலவிவந்தன. சங்கம் என்பது தமிழை வளர்க்கும் பொருட்டு புலவர்கள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பு. பழங்காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும் கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இந்தச் சங்க அமைப்பு அமைப்பு கூடல் என்றும் குறிப்பிடப்படுகிறது.[1][2][3] பண்டைய காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்துள்ளதாக இறையனார் களவியல் நக்கீரர் உரை கூறுகிறது. மூன்றாவது தமிழ்ச்சங்கம் இருந்த இடம் தற்போதுள்ள மதுரையாகும். தேவாரம், திருவிளையாடல், பெரியபுராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் போன்ற பல்வேறு இலக்கியங்கள் 'சங்கம்' என்ற சொல்லால் இதனைக் குறிப்பிடுகின்றன.[4] இவை அனைத்தும் சங்ககாலத்தில் இருந்த சங்கங்களையே குறிப்பிடுகின்றன. இதன் காலம் ஏறத்தாழ பொ.ஊ.மு. 400 முதல் பொ.ஊ. 200 வரை இருந்துள்ளது.[5] இருப்பினும் சங்கத் தோற்றத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே சங்கம் என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளது. புணர்கூட்டு என்னும் சொல் சங்கத்தை உணர்த்தும் சொல்லாகப் பயின்றுவந்துள்ளது.[6] தென்னிந்திய வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி, மதுரையில் ஒரு காலத்தில் தமிழ் புலவர்கள் சங்கம் வளர்த்தது உண்மையாக இருக்கக் கூடும் என்று கூறுகிறார். ஆனால், சங்கத்தைப் பற்றிய உண்மைகள் பல கற்பனைகளுடன் கலந்து போனதால், அவற்றிலிருந்து நம்பகமான முடிவுகளை பெறுவது கடினமாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.[7] பல்வேறு கால-கட்டங்களில் தமிழ்ச்சங்கம்
அடிக்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia