உசிலம்பட்டி தொடருந்து நிலையம்
உசிலம்பட்டி தொடருந்து நிலையம் (Usilampatti railway station, நிலையக் குறியீடு:USLP) இந்தியாவின் தமிழ்நாட்டின், மதுரை மாவட்டத்திலுள்ள, உசிலம்பட்டி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளது.[1] இருப்பிடம்உசிலம்பட்டி தொடருந்து நிலையம், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி நகரத்திற்கு சேவை செய்கிறது. இது இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்குகிறது. வரலாறுஉசிலம்பட்டி தொடருந்து நிலையம் 1928 நவம்பர் 20இல் நிறுவப்பட்டது. 90 கி.மீ தொலைவில் உள்ள மதுரை - போடிநாயக்கனூர் மீட்டர் கேஜ் பாதையை, மதராசு மாகாண வருவாய் உறுப்பினர் நார்மன் மார்ஜோரிபங்க்ஸ் திறந்து வைக்கும் போது, இந்த தொடருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.[2] பின்னர் 1942 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் போது, பாதை மூடப்பட்டு தடங்கள் அகற்றப்பட்டன. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, 1953–1954க்கு இடையில், பாதை மீட்டெடுக்கப்பட்டது.[3] பின்னர் சனவரி 1, 2011 அன்று மூடப்பட்டது, 2012க்குள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நிதிபற்றாக்குறை காரணமாக, திட்டம் மிக மெதுவான வேகத்தில் நடைபெற்றது. இறுதியாக, 2020 சனவரி 23 அன்று, இரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் சோதனை ஓட்டத்திற்கு பின்னர், மதுரை சந்திப்புக்கும் - உசிலம்பட்டிக்கும் இடையில் (37 கி.மீ) முதல் பாதை திறக்கப்பட்டது.[4] சேவைகள்சனவரி 2020 நிலவரப்படி, தொடருந்து சேவைகள் இல்லை.[5] மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறுகையில், தொடருந்து சேவையானது 2020 பிப்ரவரி இறுதிக்குள் உசிலம்பட்டிக்கும், ஏப்ரல் மாதத்திற்குள் போடிநாயக்கனூர் வரையிலும், பாதை மாற்றும் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.[6][7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia