உசேன் சாகர்
பால்காபூர் நதியின் குறுக்காக கரை எழுப்பி இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நதி முசி ஆற்றின் ஒரு துணை ஆறு ஆகும். முன்நாளில் இந்த ஏரி, செகந்திராபாத் நகருக்கு குடிநீர் வழங்குவதற்காகவே கட்டப்பட்டது. ஆனால் இன்று இவ்வேரி பொழுதுபோக்கிடமாகவும் நீர்விளையாட்டிற்காகவும் பயனாகிறது. இதன் கிழக்குப் பக்கமுள்ள ஏரிக்கரை சாலை செகந்திராபாத் நகரையும் ஐதராபாத் நகரையும் இணைக்கிறது. புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புடைய பெருமக்களின் கருங்கற் சிலைகள் சாலைநெடுகிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்தச் சாலையின் முதலிலும் முடிவிலும் விசயநகர மற்றும் காகத்திய பாணியில் அமைந்த எழிலார்ந்த சலவைக்கல் தோரணவாயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஏரியின் நடுப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை 17.5 மீட்டர் உயரமும் 350 டண் நிறையும் கொண்ட ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சிலையாகும். ஏரியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லும்பினி பூங்காவிலிருந்து படகில் சென்று வரலாம். படத்தொகுப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia