கௌதம புத்தர்
சித்தார்த்த கௌதமர்[e] (ஆங்கிலம்: Siddhartha Gautama) என்பவர் தெற்காசியாவில்[f] பொ. ஊ. மு. ஆறாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில்[4][5][6][c] வாழ்ந்த ஓர் அலைந்து திரிந்த துறவி மற்றும் சமய ஆசிரியர் ஆவார். இவர் மிகப் பொதுவாக புத்தர் (ஆங்கிலம்: the Buddha) (மொ. 'விழிப்படைந்த ஒருவர்'),[7][g][h] என்று குறிப்பிடப்படுகிறார். இவர் பௌத்தத்தைத் தோற்றுவித்தார். பௌத்த புராணங்களின் படி இவர் லும்பினியில் பிறந்தார். இது தற்போதைய நேபாளத்தில் உள்ளது.[b] சாக்கியர் இனத்தைச் சேர்ந்த அரச குடும்பப் பெற்றோருக்கு இவர் பிறந்தார். ஆனால், ஓர் அலைந்து திரியும் துறவியாக வாழ்வதற்காக தன்னுடைய இல்லற வாழ்வைத் துறந்தார்.[8][i] யாசகம், துறவு மற்றும் தியானம் ஆகியவற்றையுடைய ஒரு வாழ்வை வாழ்ந்ததற்குப் பிறகு தற்போதைய இந்தியாவின் போதி கயாவில் நிர்வாணத்தை அடைந்தார். புத்தர் கீழ் சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதி முழுவதும் அலைந்து திரிந்தார். இவர் போதித்ததிலிருந்து ஒரு துறவற ஒழுங்கு உருவாகியது. பௌத்தப் பாரம்பரியமானது இவர் குசி நகரில் இறந்து பரிநிர்வாணத்தை ("கட்டுப்படுத்தப்பட்ட வாழ்விலிருந்து கடைசி விடுதலை") அடைந்தார் என்பதைக் குறிப்பிடுகிறது.[9][j] புத்தர் ஒரு நடு வழியைப் பயிற்றுவித்தார் என பௌத்த மரபானது குறிப்பிடுகிறது. கட்டற்ற புலன் இன்ப நுகர்வு மற்றும் கடுமையான துறவறம் ஆகியவற்றுக்கு இடையிலான வழி இதுவாகும்.[10] அறியாமை, ஆசை, மறுபிறப்பு மற்றும் துன்பத்திலிருந்து இது விடுதலைக்கு வழி வகுக்கும் என்று போதித்தார். இவரது போதனையின் மையக் கருத்துகளானவை நான்கு உயர்ந்த உண்மைகள் மற்றும் உன்னதமான எண்வகை மார்க்கங்கள் என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகின்றன. நன்னெறிப் பயிற்சி, பிறரிடம் இரக்கம் கொள்ளுதல் மற்றும் ஆசையைக் குறைப்பது, விழிப்படைந்து இருப்பது, தியானம் போன்ற தியானப் பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட மனதிற்கான ஒரு பயிற்சி இவையாகும். ஐந்து கந்தாக்கள் (ஒருங்கிணைப்புகள்) மற்றும் சார்புத் தோற்றம் கருத்துருக்கள் ஆகியவை இவரது போதனைகளின் பிற முக்கியமான ஆக்கக்கூறு ஆகும். இதில் எவ்வாறு அனைத்து தர்மங்களும் (மன நிலைகள் மற்றும் புலனாகும் 'பொருட்கள்') உருவாகின்றன, மறைகின்றன, பிற தர்மங்களைச் சார்ந்துள்ளன, பிற தர்மங்களைச் சாராததாக தங்களது சொந்த இருப்பை அவை கொண்டிருப்பதில்லை ஆகியவற்றை இவை விளக்குகின்றன. நிகயங்களில் தன்னை இவர் அடிக்கடி ததாகதர் என்று குறிப்பிடும் அதே நேரத்தில் புத்தர் என்ற பட்டத்தின் தொடக்க கால ஆதாரமானது பொ. ஊ. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கப் பெறுகிறது.[11][12] புத்தர் என்ற சொல்லுக்கு 'விழிப்படைந்த ஒருவர்' என்று பொருள்.[13] துறவறப் பழக்க வழக்கங்களுக்கான இவரது ஒழுங்கு முறைகளான வினயம், மற்றும் இவரது சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்ட போதனைகளின் ஒரு தொகுப்பான சுத்தபிடகம் ஆகியவற்றில் இவரது போதனைகள் பௌத்த சமூகத்தால் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு வாய்வழிப் பாரம்பரியம் மூலமாக நடு இந்திய-ஆரிய பேச்சு வழக்கு மொழிகளில் இந்தத் தொகுப்புகளானவை கடத்தப்பட்டன.[14][15] அபிதர்மம் என்று அறியப்பட்ட அமைப்பு ரீதியிலான நூல்கள், புத்தரின் சுயசரிதைகள், ஜாதக கதைகள் என்று அறியப்பட்ட இவரது முந்தைய வாழ்க்கைகள் குறித்த கதைகளின் தொகுப்புகள், மற்றும் மகாயன சூத்திரங்கள் போன்ற மேற்கொண்ட சொற்பொழிவுகள் போன்ற மேற்கொண்ட நூல்களானவை பிந்தைய தலைமுறைகளால் உருவாக்கப்பட்டன.[16][17] தேரவாத பௌத்தம், மகாயான பௌத்தம் மற்றும் வச்சிரயான பௌத்தம் ஆகியவற்றால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பல்வேறு பாரம்பரியங்கள் மற்றும் பழக்க வழக்கங்களாக பௌத்தமானது பரிணாமம் அடைந்து, இந்திய துணைக் கண்டத்தைத் தாண்டிப் பரவியது. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சியடைந்தது. பொதுவான மற்றும் பொருளாதார ஆதரவு இல்லாததன் காரணமாக பொ. ஊ. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு பெரும்பாலும் மறைந்து விட்டது. அதே நேரத்தில், பௌத்தமானது தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் மிக முக்கியமான சமயமாகத் திகழ்கிறது. பெயர்க் காரணமும், பெயர்களும், பட்டங்களும்![]() சித்தார்த்த கௌதமா மற்றும் புத்தா சாக்யமுனிஇளைய டொனால்டு லோபேசின் கூற்றுப்படி, "சீனா, கொரியா, சப்பான் மற்றும் திபெத்தில் இவர் புத்தா அல்லது சாக்யமுனி என்று வழக்கமாக அறியப்பட்டு வந்துள்ளார். இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கோதம புத்தா அல்லது சமண கோதமா ('துறவி கோதமா') என்று அறியப்பட்டு வந்துள்ளார்."[18] புத்தா, "விழிப்படைந்த ஒருவர்" அல்லது "ஒளி கண்ட ஒருவர்"[13][19][g] என்பது புத் என்ற சொல்லின் ஆண்பால் வடிவமாகும். புத் என்ற சொல்லானது "உறக்கம் கலை, விழிப்படை, உன்னிப்பாகக் கவனி, கருத்தில் கொள், கவனம் செலுத்து, அறிந்துகொள், உணர்வுத் தெளிவு கொள், மீண்டும் விழிப்புணர்வுக்கு வா",[20] "விழி",[21][22] "'திற' (மலரைப் போல்)",[22] "அறியாமையின் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிப்படைந்த ஒருவன் மற்றும் தன்னுடைய விழிப்புணர்வை அனைத்து அறிவையும் கொண்டுள்ளதற்காக திறந்தவன்" ஆகிய பொருட்களை உடையதாக உள்ளது.[22] இது ஒரு தனி நபர் பெயர் கிடையாது. ஆனால், போதியை (விழிப்படை, ஒளி காண்) அடைந்தவர்களுக்காகக் கொடுக்கப்படும் ஒரு பட்டம் ஆகும்.[21] "கருத்துருக்களை உருவாக்கி தக்க வைத்துக் கொள், பகுத்தறிவைப் பயன்படுத்து, கூர்ந்து நோக்கு, மதிப்பீடு செய், ஒன்றை முழுமையாகப் புரிந்துகொள், ஒன்றின் பொருளை அறிந்துகொள்"[20] ஆகியவற்றுக்கான சக்தியான புத்தி என்பது பொய்யிலிருந்து உண்மையை (சத்தியம்) கூர்ந்து நோக்கி அறிந்து கொள்ளும் சக்தியாகும். இவரது இனத்தின் பெயர் கௌதமா (பாளி: கோதமா) ஆகும். இவரது இயற்பெயர் "சித்தார்த்தா" ( இது சமசுகிருத வடிவம்; சமமான பாளி வடிவம் "சித்தாத்தா"; திபெத்தில் "தோன் குருப்"; சீனத்தில் "சிதாதுவோ"; சப்பானியத்தில் "சித்தாத்தா"; கொரிய மொழியில் "சில்தால்தா") ஆகும். இதன் பொருள் "தன்னுடைய இலக்கைச் சாதிக்கும் ஒருவர்" (சித்தி) என்பதாகும்.[23] கெளதமா என்ற இனப் பெயரின் பொருள் "கோதமரின் வழித்தோன்றல்" ஆகும். "கோதமா" என்ற சொல்லின் பொருள் "அதிக ஒளியையுடைய ஒருவர்" என்பதாகும்.[24][25][26] புத்தா என்ற சொல்லானது ஆகமங்கள் மற்றும் பாளி திருமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே நேரத்தில், புத்தா என்ற சொல்லின் மிகப் பழமையான, எஞ்சியுள்ள எழுதப்பட்ட பதிவுகளானவை பொ .ஊ. மு. 3 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன. அந்த நேரத்தில் அசோகரின் பல கல்வெட்டுக்கள் (ஆட்சிக் காலம் அண். 269–232 பொ. ஊ. மு.) புத்தர் மற்றும் புத்த சமயத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.[11][12] அசோகரின் லும்பினி தூண் கல்வெட்டானது லும்பினிக்கு பேரரசரின் புனிதப் பயணத்தை புத்தரின் பிறந்த இடமாக நினைவுப்படுத்துகிறது. புத்தரை புத்தா சாக்யமுனி[k] (பிராமி எழுத்துமுறை: 𑀩𑀼𑀥 𑀲𑀓𑁆𑀬𑀫𑀼𑀦𑀻 பு-தா சா-க்ய-மு-னி, "புத்தா, சாக்கியர்களின் முனிவர்") என்று அழைக்கிறது.[27] சாக்யமுனி என்பதன் பொருள் "சாக்கியர்களின் முனிவர்" என்பதாகும்.[28] ததாகதாபாளி திருமுறையில் தன்னையோ அல்லது பிற புத்தர்களையோ குறிப்பிடும் போது புத்தர் பொதுவாகப் பயன்படுத்திய ஒரு சொல் ததாகதா ஆகும்.[29] இச்சொல்லின் சரியான பொருள் தெரியவில்லை. "இவ்வாறு சென்றவர்", "இவ்வாறு வந்தவர்" அல்லது சில நேரங்களில் "இவ்வாறு சென்று விடாமல் இருப்பவர்" ஆகிய ஏதேனும் ஒரு பொருளை இது கொண்டுள்ளதாக பொதுவாக எண்ணப்படுகிறது. அதாவது வரும் மற்றும் செல்லும் அனைத்தையும் தாண்டியவர் - அனைத்து நிலையற்ற மெய்ம்மைகளையும் கடந்தவர் என்பதை முக்கியத்துவப்படுத்துவதாக இது எடுத்துக் கொள்ளப்படுகிறது.[30] ஒரு ததாகதா என்பவர் "அளவிட முடியாதவர்", "புரிந்து கொள்ள இயலாதவர்", "அளவிடப்பட முடியாதவர்", மற்றும் "பிடிக்க இயலாதவர்" ஆவார்.[31] பிற அடைமொழிகள்திருமுறை நூல்களில் பொதுவாக ஒன்றாகக் காணப்படும் மற்றும் இவரது குறைபாடற்ற பண்புகளில் சிலவற்றைச் சித்தரிக்கும் பிற அடைமொழிகளின் ஒரு பட்டியல்:[32]
புத்தருக்கான ஏராளமான பிற பட்டங்கள் மற்றும் அடைமொழிகளை பாளி திருமுறையும் கூட கொண்டுள்ளது. அவை அனைத்தையும் காண்பவர், அனைத்தையும் கடந்த துறவி, மனிதர்களுக்கு மத்தியில் ஒரு காளை, கவிகை வண்டியின் தலைவர், இருளை ஒழிப்பவர், கண் போன்றவர், தேரோட்டிகளிலேயே முதன்மையானவர், துன்ப ஆற்றைக் கடந்து செல்பவர்களுக்கு தலைமை வகிப்பவர், தர்மத்தின் மன்னன் (தர்மராஜன்), சூரியனின் உறவினர், உலகுக்கு உதவுபவர் (லோகநாதன்), சிங்கம் (சிகா), தர்மத்தின் தலைவன், சிறந்த ஞானத்தை உடையவர் (வரபண்ணா), ஒளிரும் ஒருவர், மனித குலத்தின் விளக்கை ஏந்திச் செல்பவர், மிகச் சிறந்த மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சையாளர், யுத்தத்தில் வெல்பவர், சக்தியை உடையவர் ஆகியவை ஆகும்.[34] தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட மற்றொரு அடைமொழியானது மகா சிராமணா ("பெரும் சமணர்", துறவி) என்பதாகும். ஆதாரங்கள்வரலாற்று ஆதாரங்கள்பாளி சுத்தாக்கள்மொழிசார் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியவியலாளரும், பாளி மொழி நிபுணருமான ஒசுகார் வான் இனுபர் பாளி சுத்தாக்களில் சில மிகத் தொல்வழக்கான இடப்பெயர்கள், வாக்கிய அமைப்பு, மற்றும் புத்தரின் வாழ்க்கைக்கு நெருக்கமான வரலாற்றுத் தரவுகளை தக்க வைத்துக் கொண்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். இதில் புத்தரின் கடைசி நாட்கள் குறித்து ஒரு விரிவான குறிப்புகளைக் கொண்டுள்ள மகாபரிநிப்பண்ண சுத்தாவும் அடங்கும். இந்நூலுக்கு தொகுக்கப்பட்ட காலமாக 350 - பொ. ஊ. மு. 320 க்கு முந்தைய ஆண்டுகளை இனுபர் முன் வைக்கிறார். புத்தரின் வாழ்நாளுக்கான குறுகிய காலவரிசையானது ஏற்றுக் கொள்ளப்பட்டால் தோராயமாக 60 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளின் ஓர் "உண்மையான வரலாற்று நினைவுக்கு" இந்நூல் அனுமதியளிக்கும் என்று குறிப்பிடுகிறார் (ஆனால், நிகழ்வுகளின் ஒரு சரியான வரலாற்றுப் பதிவாக இல்லாமல் ஒரு புனித சரிதையாக இருக்கும் குறிக்கோளுடனே அத்தகைய ஒரு நூல் உண்மையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் கூட இவர் குறிப்பிடுகிறார்).[35][36] அமெரிக்கக் கல்வியாளர் யோவான் எஸ். இசுடிராங் பாளி, மேலும் சீனம், திபெத்தியம் மற்றும் சமசுகிருதம் ஆகியவற்றில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ள திருமுறை நூல்களில் உள்ள சில சுயசரிதை துணுக்குகளை தொடக்க கால ஆதாரங்களாகக் காண்கிறார். "உன்னதமான தேடல் குறித்த சொற்பொழிவு" (ஆரியபரியேசன-சுத்தா) மற்றும் பிற மொழிகளில் உள்ள அதை ஒத்த நூல்கள் போன்றவற்றை இவை உள்ளடக்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.[37] தூண் மற்றும் பாறைக் கல்வெட்டுகள்"பு-தே" (𑀩𑀼𑀥𑁂, புத்தா) மற்றும் "சா-க்ய-மு-னி" (𑀲𑀓𑁆𑀬𑀫𑀼𑀦𑀻, "சாக்கியர்களின் முனிவர்") ஆகிய சொற்களை பிராமி எழுத்துமுறையில் உடைய அசோகரின் லும்பினி தூண் கல்வெட்டு (அண். பொ. ஊ. மு. 250)[38][39][40] இவரது வாழ்நாளில் இருந்தோ அல்லது அதற்குப் பிறகு ஒன்று அல்லது இரு நூற்றாண்டுகளிலிருந்தோ கௌதமர் குறித்த எந்த ஒரு எழுதப்பட்ட பதிவுகளும் இல்லை.[11][12][41] ஆனால், பொ. ஊ. மு. 3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் அசோகரின் பல கல்வெட்டுக்கள் (ஆட்சி அண். 268 முதல் பொ. ஊ. மு. 232) புத்தர் மற்றும் பௌத்தத்தைக் குறிப்பிடுகின்றன.[11][12] குறிப்பாக, புத்தரின் பிறந்த இடமாக லும்பினிக்குப் பேரரசர் புனிதப் பயணம் மேற்கொண்டதை அசோகரின் லும்பினி தூண் கல்வெட்டு நினைவுபடுத்துகிறது. புத்தா சாக்யமுனி (பிராமி எழுத்துமுறை: 𑀩𑀼𑀥 𑀲𑀓𑁆𑀬𑀫𑀼𑀦𑀻 பு-தா சா-க்ய-மு-னி, "புத்தா, சாக்கியர்களின் முனிவர்") என்று அசோகர் புத்தரை இதில் அழைக்கிறார்.[l][38][39] அவரது கல்வெட்டுகளில் மற்றொன்று (3 ஆவது சிறு பாறைக் கல்வெட்டு) பல தம்ம ( பௌத்தத்தில் தர்மாவுக்கான மற்றொரு சொல் தம்மா ஆகும்)[42] நூல்களின் தலைப்புகளைக் குறிப்பிடுகிறது. குறைந்தது மௌரிய சகாப்தத்தின் காலத்திலிருந்தே ஒரு எழுதப்பட்டு வந்த பௌத்தப் பாரம்பரியம் இருந்ததை இது நிறுவுகிறது. இந்த நூல்கள் பாளி திருமுறைக்கு முன்னோடிகளாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[43][44][m] அண். பொ. ஊ. மு. 100க்குக் காலமிடப்பட்ட பர்குட்டின் ஒரு புடைப்புச் சிற்பத்திலும் கூட "சகமுனி" என்ற பெயர் இவரது ஒளிர்வு மற்றும் போதி மரத்துடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பகவதோ சகமுனினோ போதோ ("ஆசிர்வதிக்கப்பட்ட சகமுனியின் ஒளிர்வு") என்று கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.[45][46] மிகப் பழைய எஞ்சியுள்ள கையெழுத்துப் பிரதி நூல்கள்மிகப் பழமையான எஞ்சியுள்ள பௌத்த கையெழுத்துப் பிரதி நூல்களானவை காந்தார பௌத்த நூல்கள் ஆகும். இவை காந்தாரத்தில் (நவீன கால வடமேற்கு பாக்கித்தான் மற்றும் கிழக்கு ஆப்கானித்தானைக் குறிப்பிடும் பகுதி) கண்டுபிடிக்கப்பட்டன. இவை காந்தாரி மொழியில் எழுதப்பட்டிருந்தன. பொ. ஊ. மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து பொ. ஊ. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலத்திற்கு இவை காலமிடப்படுகின்றன.[47] சுயசரிதை ஆதாரங்கள்தொடக்க கால திருமுறை ஆதாரங்களில் ஆரியபரியேசன சுத்தா (மச்சிம நிகயம் 26), மகாபரிநிப்பாண சுத்தா (திக நிகயம் 16), மகாசச்சக-சுத்தா (மச்சிம நிகயம் 36), மகாபதன சுத்தா (திக நிகயம் 14), மற்றும் ஆச்சாரியபுதா சுத்தா (மச்சிம நிகயம் 123) ஆகியவை உள்ளடங்கியுள்ளன. இவை பழையவையாக இருந்திருக்கக் கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகளை உள்ளடக்கியிருந்தன. ஆனால், இவை முழுமையான சுயசரிதைகள் கிடையாது. ஜாதகக் கதைகளானவை போதிசத்துவராக கௌதமரின் முந்தைய பிறப்புகளை மீண்டும் கூறுகின்றன. இவற்றின் முதல் தொகுப்பானது தொடக்க கால பௌத்த நூல்களுடன் ஒத்த காலத்திற்குக் காலமிடப்படுகிறது.[48] மகாபதன சுத்தா மற்றும் ஆச்சாரியாபுதா சுத்தா ஆகிய இரு நூல்களுமே கௌதமரின் பிறப்பைச் சுற்றி நடந்த அதிசய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. இதில் துசிதா சொர்க்கத்தில் இருந்து இவரது தாயின் வயிற்றுக்குள் போதிசத்துவர் சென்றது போன்றவற்றை அடங்கும். சித்தார்த்த கௌதமரின் வாழ்க்கை குறித்த ஒரு முழுமையான காட்சியைச் சமர்ப்பிக்கும் ஆதாரங்களானவை வேறுபட்ட வகையான, சில நேரங்களில் முரண்படுகின்ற, பிந்தைய காலத்தைச் சேர்ந்த பாரம்பரிய சுயசரிதைகள் ஆகும். இதில் புத்தசரிதம், லலிதவிஸ்தாரா சூத்திரம், மகாவஸ்து மற்றும் நிதனகதை ஆகியவை அடங்கும்.[49] இதில் புத்தசரிதமானது[50][51][52] தொடக்க காலத்தைச் சேர்ந்த முழுமையான சுயசரிதையாகும். பொ. ஊ. முதலாம் நூற்றாண்டில் கவிஞர் அஸ்வகோசரால் எழுதப்பட்ட ஒரு இதிகாசக் கவிதை இதுவாகும்.[53] அடுத்த மிகப் பழமையான சுயசரிதையானது லலிதாவிஸ்தாரா சூத்திரம் ஆகும். இது பொ. ஊ. மூன்றாம் நூற்றாண்டிற்குக் காலமிடப்படுகிற ஒரு மகாயான/சர்வாஸ்திவாத சுயசரிதை இதுவாகும்.[54] மகாசம்கிக லோகோத்தரவாத பாரம்பரியத்தைச் சேர்ந்த மகாவஸ்துவானது மற்றொரு முதன்மையான சுயசரிதையாகும். அநேகமாக பொ. ஊ. 4 ஆம் நூற்றாண்டு வரை படிப்படியாக இது இயற்றப்பட்டது என்று கருதப்படுகிறது.[54] புத்தர் குறித்த தர்மகுப்தகப் பிரிவின் சுயசரிதையானது இயன்ற அனைத்தையும் உள்ளடக்கிய மிகப் பெரிய நூலாக உள்ளது. இது அபினிஸ்க்ரமன சூத்திரா என்று பெயரிடப்பட்டுள்ளது.[55] இந்நூலின் பல்வேறு சீன மொழி பெயர்ப்புகளானவை பொ. ஊ. 3 ஆம் மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் காலமிடப்படுகின்றன. நிதனகதை என்பது இலங்கையின் தேரவாத பௌத்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒரு நூல் ஆகும். இது 5 ஆம் நூற்றாண்டில் புத்தகோசரால் இயற்றப்பட்டது.[56] வரலாற்று நபர்வரலாற்று நபரைப் புரிந்து கொள்ளுதல்புத்தரின் வாழ்க்கையின் வரலாற்று உண்மைகள் குறித்து தகுதியற்ற கூற்றுக்களைக் கூற அறிஞர்கள் தயங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் புத்தர் வாழ்ந்து, போதித்து, மகாஜனபாதங்களின் சகாப்தத்தின் போது மகதத்தின் ஆட்சியாளரான பிம்பிசாரனின் (அண். 558 – அண். 491 பொ. ஊ. மு., அல்லது அண். பொ. ஊ. மு. 400) ஆட்சியின் போது துறவற ஒழுங்கை நிறுவினார் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.[57][58][59] பிம்பிசாரர் மகத நாட்டின் ஆட்சியாளர் ஆவார். அஜாதசத்ருவின் ஆட்சியின் ஆரம்ப காலங்களின் போது புத்தர் இறந்தார். அஜாதசத்ரு பிம்பிசாரருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். இது சைன தீர்த்தங்கரரான மகாவீரரின் சம காலத்தைச் சேர்ந்தவராகக் கூட புத்தரை ஆக்குகிறது.[60][61] "பௌத்த அறிஞர்கள் [...] புத்தரை வரலாற்று நபராக புரிந்து கொள்ளும் முயற்சியைப் பெரும்பாலும் கைவிட்டு விட்டதால்"[62] பாரம்பரிய வாழ்க்கை வரலாறுகளில் உள்ள பல தகவல்களின் துல்லியத் தன்மை குறித்து குறைவான அளவே ஒருமித்த கருத்து உள்ளது.[63][64] நம்மிடம் ஏற்கனவே உள்ள பௌத்த வாழ்க்கை வரலாற்று நூல்களின் தொடக்க கால வடிவங்களானவை பல இயற்கைக்கு மீறிய, பழங்கதைகளிலுள்ள அல்லது புராண ஆக்கக் கூறுகளைக் கொண்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டில் புத்தரின் வாழ்வு குறித்த தங்களது நூல்களிலிருந்து சில அறிஞர்கள் வெறுமனே இந்த ஆக்கக் கூறுகளை நீக்கினர். "ஒரு பகுத்தறிவு உள்ள, சாக்ரடீய ஆசிரியராக உள்ள - ஒரு மிகச் சிறந்த நபராக, ஆனால் மிகுதியாகவோ அல்லது குறைவாகவோ சாதாரண மனிதனாக புத்தர் குறித்த பார்வையை உருவாக்குவதற்காக" நீக்கினர். இத்தகைய பழங்கதைத் தகவல்களை நீக்கியவர்களை மிக சமீப அறிஞர்கள் பழங்கதைத் தகவல்களை மீண்டும் இணைத்தவர்களாக "தங்களுக்கு ஒவ்வாததை நீக்கியதன் மூலம் தங்களுக்கு ஏற்றவாறு புத்தரை உருவாக்கியவர்களாகப்" பார்க்கப்படுகின்றனர்.[65] காலமிடுதல்கௌதமரின் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த தேதிகளானவை துல்லியமாகத் தெரியவில்லை. சீனா, வியட்நாம், கொரியா மற்றும் சப்பானின் கிழக்கு பௌத்தப் பாரம்பரியங்களுக்குள் புத்தரின் இறப்பிற்கான பாரம்பரிய ஆண்டாக பொ. ஊ. மு. 949 ஆம் ஆண்டு குறிப்பிடப்படுகிறது.[1] ஆனால், காலச்சக்கரப் பாரம்பரியத்தின் க-தான் அமைப்பின்படி புத்தரின் இறப்பானது பொ. ஊ. மு. சுமார் 833 ஆம் ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது.[66] புத்தரின் வாழ்க்கையைக் காலமிடுவதற்குப் பயன்படுத்துவதற்காக இரு கால வரிசைகளைப் பௌத்த நூல்கள் முன் வைக்கின்றன.[67] இலங்கை நூல்களிலிருந்து பெறப்படும் "நீண்ட கால வரிசையானது" புத்தர் 80 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்தார் என்றும், அசோகர் அரியணைக்கு வருவதற்கு 218 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தார் என்றும் குறிப்பிடுகிறது. இவ்வாறாக இதிலிருந்து அசோகர் அரியணைக்கு வருவதற்கு சுமார் 298 ஆண்டுகளுக்கு முன் புத்தர் பிறந்தார் என்று தருவிக்கப்படுகிறது. இந்த நூல்களின்படி அசோகருக்கு பொ. ஊ. மு. 326 ஆம் ஆண்டு மகுடம் சூட்டப்பட்டது. இவை புத்தரின் வாழ்நாளாக 624 - 544 பொ. ஊ. மு. வரையிலான காலத்தைக் கொடுக்கிறது. இலங்கை மற்றும் தென்கிழக்காசியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டுகளாக இவை உள்ளன.[67] மாறாக, நீண்ட கால வரிசையை ஏற்றுக் கொள்ளக் கூடிய, ஆனால் அசோகர் அரியணைக்கு வந்த ஆண்டாக பொ. ஊ. மு. சுமார் 268 ஆம் ஆண்டை (கிரேக்கச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு) ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான அறிஞர்கள் புத்தரின் வாழ்க்கையை பிந்தைய காலமாக 566 - 486 பொ. ஊ. மு. வரையிலான காலம் என முன் வைக்கின்றனர்.[67] எனினும், இந்திய ஆதாரங்கள் மற்றும் அவற்றின் சீன மற்றும் திபெத்திய மொழி பெயர்ப்புகளிலிருந்து பெறப்படும் "குறுகிய காலவரிசையானது" புத்தரின் வாழ் நாளாக 80 ஆண்டுகளைக் குறிப்பிடும் அதே நேரத்தில் புத்தரின் இறப்பை அசோகர் அரியணைக்கு வருவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன் புத்தர் இறந்தார் என்று குறிப்பிடுகின்றன. இதிலிருந்து அசோகர் அரியணைக்கு வருவதற்கு 180 ஆண்டுகளுக்கு முன் புத்தர் பிறந்தார் என்று தருவிக்கப்படுகிறது. கிரேக்க ஆதாரங்களிலிருந்து பொ. ஊ. மு. 268 ஆம் ஆண்டை ஆசோகர் அரியணைக்கு வந்த ஆண்டாக பெறப்படுவது என்பது புத்தரின் வாழ்நாளை மேலும் பிந்தைய 448-368 பொ. ஊ. மு. ஆகிய ஆண்டுகளுக்குக் காலமிடுகிறது.[67] 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும்பாலான வரலாற்றாளர்கள் 563 - 483 பொ. ஊ. மு. ஆகிய முந்தைய ஆண்டுகள் என்று வரையறுத்தனர். கிரேக்கச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட நீண்ட கால வரிசையிலிருந்து இது வெறும் மூன்று ஆண்டுகளே குறைவாக உள்ளது.[1][68] மிக சமீபத்தில், இவரது இறப்பை நீண்ட கால வரிசையின் பொ. ஊ. மு. 480கள் மற்றும் குறுகிய கால வரிசையின் பொ. ஊ. மு. 360களுக்கு இடையில், அதாவது அண். 410 பொ. ஊ. மு. காலமிட முயற்சிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இக்கேள்வி எழுப்பப்பட்ட போது,[69][70][71] பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பொ. ஊ. மு. 400 க்கு 20 ஆண்டுகளுக்கு முந்தைய அல்லது பிந்தைய ஆண்டுகளில் புத்தர் இறந்திருக்கலாம் என்று அறுதியிட்டுக் கூறினர்.[1][72][c][77] எனினும், இந்த மாற்றுக் கால வரிசைகளானவை அனைத்து வரலாற்றாளர்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.[78][79][n] பிம்பிசாரன் மற்றும் அஜாதசத்ருவின் காலங்களும் கூட நீண்ட அல்லது குறுகிய கால வரிசைகளைச் சார்ந்தே உள்ளன. நீண்ட கால வரிசையில் பிம்பிசாரன் அண். 558 – அண். 492 பொ. ஊ. மு. காலத்தில் ஆட்சி செய்தார். பொ. ஊ. மு. 492 ஆம் ஆண்டு இறந்தார்.[84][85] அதே நேரத்தில், அஜாதசத்ரு அண். 492 – அண். 460 பொ. ஊ. மு. காலத்தில் ஆட்சி செய்தார்.[86] குறுகிய கால வரிசையில் பிம்பிசாரன் அண். 400 பொ. ஊ. மு. காலத்தில் ஆட்சி செய்தார்.[87][o] அதே நேரத்தில், அஜாதசத்ரு அண். 380 – அண். 330 பொ. ஊ. மு. இடைப்பட்ட காலத்தில் இறந்தார்.[87] புத்தரின் வாழ்நாளை அண். 477–397 பொ. ஊ. மு. ஆக கொண்டுள்ள குறுகிய கால வரிசைக்கு ஆதரவளிப்பவரான வரலாற்றாளர் கே. டி. எஸ். சராவோவின் கூற்றுப்படி பிம்பிசாரனின் ஆட்சிக் காலமானது அண். 457–405 பொ. ஊ. மு. ஆகும். அதே நேரத்தில், அஜாதசத்ருவின் ஆட்சிக் காலமானது அண். 405–373 பொ. ஊ. மு. ஆகும்.[88] வரலாற்றுச் சூழல்சாக்கியர்![]() பௌத்த மரபின்படி சாக்கியமுனி புத்தர் ஒரு சாக்கியர் ஆவார். சாக்கியர் என்பவர்கள் இந்திய துணைக் கண்டத்தின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த, இமயமலைக்கு அருகிலிருந்த ஓர் இனம் ஆவர்.[b][p] சாக்கிய சமூகமானது புவியியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் விளிம்பு எல்லைப் பகுதியில் பொ. ஊ. மு. 5 ஆம் நூற்றாண்டில் இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது.[89] இந்த சமூகத்தை ஒரு சிறிய குடியரசு என வரையறுத்தாலும், இது அநேகமாக ஒரு சிலவர் ஆட்சியாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இவரது தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்லது சிலவர் ஆட்சி அமைப்பின் தலைவராக இருந்தார்.[89] இவர்களின் பூர்வீகம் தொடர்ந்து ஊகத்துக்குக்கும், விவாதத்திற்கும் உட்படுத்தப்படக் கூடியதாக உள்ளது.[90] ஆரியவர்த்தத்திற்கு நெடுகில் வளர்ந்த இந்தப் பண்பாட்டை வரலாற்றாளர் புரோங்கோர்த்து பெரிய மகதம் என்று குறிப்பிடுகிறார்.[91] புத்தர் தோன்றிய பழங்குடியினமான சாக்கியர்கள் பௌத்தத்தில் காணப்படும் வேதம் சாராத சமயப் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்திருப்பதாகத் தோன்றுகிறது. மரங்கள் மற்றும் புனித தோப்புளுக்கு மரியாதை அளித்தல், மர உயிர்கள் (இயக்கர்கள்) மற்றும் நாக மனிதர்களுக்கு (நாகர்கள்) மரியாதை அளித்தல் போன்றவற்றை இதில் குறிப்பிடலாம். தூபிக்கள் என்று அழைக்கப்பட்ட சமாதி மேடுகளையும் கூட இவர்கள் கட்டமைத்ததாகத் தோன்றுகிறது.[90] இன்றும் பௌத்தத்தில் மரத்திற்கு மரியாதை செலுத்துவது முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, போதி மரங்களுக்கு மரியாதை செலுத்தும் பழக்கத்தைக் குறிப்பிடலாம். இதே போல இயக்கர் மற்றும் நாகர்கள் ஆகியோர் பௌத்த சமயப் பழக்கவழக்கங்கள் மற்றும் பழங்கதைகளில் முக்கியமான நபர்களாகத் தொடர்ந்து உள்ளனர்.[90] சிராமணர்ஆசீவகம், சர்வகம், சைனம் மற்றும் அஞ்ஞானம் போன்ற செல்வாக்குப் பெற்றிருந்த சமண சிந்தனைப் பிரிவுகள் செழித்திருந்த காலத்துடன் புத்தரின் வாழ்நாளானது ஒத்துப் போகிறது.[92] பிரம்மசலா சுத்தாவானது இத்தகைய 62 சமயப் பிரிவுகளைப் பதிவு செய்துள்ளது. இத்தகைய சூழலில் ஒரு சிராமணர் என்பவர் கடினமாக உழைத்து, வருந்தி அல்லது தங்களைத் தானே (சில உயர்ந்த அல்லது சமய நோக்கங்களுக்காக) கடுமுயற்சியில் ஈடுபடுத்திக் கொள்பவர் ஆவார். சமன்னபால சுத்தாவில் பதிவு செய்யப்பட்டுள்ள மகாவீரர்,[93] புராண காசியபர், மற்கலி கோசாலர், அஜிதா கேசகம்பளி, பாகுத காக்காயனர் மற்றும் சஞ்சய பெலத்தபுத்திரர் போன்ற செல்வாக்கு பெற்ற சிந்தனையாளர்களின் காலமாகக் கூட இக்காலம் திகழ்ந்தது. இவர்களின் உலகப் பார்வையையும் கூட புத்தர் அறிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[94][95][q] புத்தரின் முதன்மையான சீடர்களில் ஒருவரான சாரிபுத்திரரும், மௌத்கல்யாயனரும் புத்தர் மீது ஐயம் கொண்டிருந்த சஞ்சய பெலத்தபுத்திரரின் முந்தைய முன்னணி சீடர்களாகத் திகழ்ந்தனர்.[97] எதிர் சிந்தனைப் பிரிவுகளை பின்பற்றியவர்களுடன் விவாதங்களில் புத்தர் அடிக்கடி ஈடுபட்டதாக பாளி திருமுறையானது குறிப்பிடுகிறது. புத்தருக்கு முந்தைய ஆசிரியர்களாக இருந்த இருவரான ஆலார காலமர் மற்றும் உத்தக ராமபுத்திரர் ஆகியோர் வரலாற்று நபர்களாக இருந்ததைப் பரிந்துரைக்கும் எந்தவொரு மொழியியல்சார் சான்றுகளும் கிடைக்கவில்லை. அவர்கள் மிக சாத்தியமாக புத்தருக்கு தியான நுட்பங்களின் இரு வேறுபட்ட வடிவங்களை பயிற்றுவித்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[98] இவ்வாறாக அக்காலத்தில் இருந்த பல சிராமண தத்துவவாதிகளில் வெறும் ஒருவராகவே புத்தர் திகழ்ந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.[99] ஒருவரின் துறவின் கடுமை நிலையை அடிப்படையாகக் கொண்டே ஒரு நபரின் புனிதத் தன்மை அளவிடப்பட்ட அந்த சகாப்தத்தில்[100] சிராமண இயக்கத்துக்குள்ளேயே ஒரு சீர்திருத்தவாதியாக புத்தர் திகழ்ந்தார்.[101] கன்னிங்காம் மற்றும் யங் ஆகிய வரலாற்றாளர்கள் சைனர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய இரு சமயத்தினருமே தூபிக்களைப் பயன்படுத்தினர் என்று குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில், மர சன்னிதிகளானவை பௌத்தம் மற்றும் இந்து சமயம் ஆகிய இரு சமயங்களிலும்மே காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.[102] நகரச் சூழ்நிலையும், சமத்துவமும்பௌத்தத்தின் வளர்ச்சியானது இரண்டாம் நகரமயமாக்கல் காலத்துடன் ஒத்துப் போகிறது. இக்காலத்தில் கங்கை வடிநிலத்தில் மக்கள் குடியமர்ந்தனர். நகரங்கள் வளரத் தொடங்கின. இங்கு தான் சமத்துவமானது பரவலாகக் காணப்பட்டது. வரலாற்றாளர் ரோமிலா தாபரின் கூற்றுப்படி, புத்தரின் போதனைகளானவை "அக்காலத்தின் வரலாற்று மாற்றங்களுக்கான ஒரு எதிர் வினையாகவும் கூட திகழ்ந்தன. இவற்றின் மத்தியில் தான் அரசின் தோற்றம் மற்றும் நகர்ப்புற மையங்களின் வளர்ச்சியும் நடைபெற்றது".[103] பௌத்த யாசகர்கள் சமூகத்தைத் துறந்த அதே நேரத்தில் அவர்கள் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு நெருக்கமாக வாழ்ந்தனர். புதிய துறவிகளின் ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்ட தானங்களைச் சார்ந்திருந்தனர்.[103] வரலாற்றாளர் டைசனின் கூற்றுப்படி கங்கை வடிநிலமானது வடமேற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதியில் இருந்து குடியமரப்பட்டது. மேலும், வடிநிலத்திற்குள்ளும் மக்கள் புலம்பெயர்ந்து குடியமர்ந்தனர். இவை "[ஒன்றிணைந்து] தற்போதைய பீகாராக (பாடலிபுத்திரத்தின் அமைவிடம்) உருவாயின".[104] கங்கை வடிநிலமானது அடர்த்தியான காடுகளைக் கொண்டிருந்தது. புதிய பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு அறுவடை செய்யத் தொடங்கிய போது மக்கள் தொகை அதிகரித்தது.[104] நடு கங்கை வடிநிலத்தின் சமூகமானது "ஆரியப் பண்பாட்டுத் தாக்கப் பகுதியின் வெளிப்புற விளிம்பில்" அமைந்திருந்தது.[105] மேற்கு கங்கை வடிநிலத்தின் ஆரிய சமூகத்திலிருந்து பெருமளவுக்கு வேறுபட்டிருந்தது.[106][107] சைனமும், பௌத்தமும் சமூக படிநிலை அமைப்புகளை (சாதிகளை) எதிர்த்தன.[105] இச்சமயங்களின் சமத்துவமானது நடு கங்கை வடிநிலத்தின் நகரங்களில் பரவலாகக் காணப்பட்டது. "கடுமையான சாதி தடைகளை பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட்டிருந்தவர்களை விட வணிகத்தில் மிக எளிதாக ஈடுபட சைனர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இது அனுமதியளித்தது."[108] பகுதியளவு-பழங்கதை கலந்த வாழ்க்கை வரலாறுமரபுவழி சித்தரிப்புகளின் இயல்பு![]() நிகயங்கள் மற்றும் ஆகமங்கள் போன்ற தொடக்க கால பௌத்த நூல்களில் புத்தர் முற்றறிவைக் (சப்பண்ணு)[111] கொண்டவராகவோ அல்லது எக்காலத்திற்கும் இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவோ (லோகத்தரா) சித்தரிக்கப்படவில்லை. பிக்கு அனாலயோவின் கூற்றுப்படி புத்தரின் முற்றறிவு (இவர் மற்றும் இவரது சுயசரிதையை தெய்வீகமாக்கும் அதிகரித்து வந்த மனப்பாங்குடன் சேர்த்து) குறித்த யோசனைகளானவை பிற்காலத்தில் தான் காணப்படுகின்றன. அவை மகாயான சூத்திரங்கள் மற்றும் பிந்தைய பாளி வர்ணனைகள் அல்லது நூல்களான மகாவஸ்து போன்றவற்றில் காணப்படுகின்றன.[111] சந்தக சுத்தாவில் தாங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் என்று கூறும் ஆசிரியர்களுக்கு எதிரான ஒரு விவாதத்தை புத்தரின் சீடரான ஆனந்தர் மேலோட்டமாகக் குறிப்பிடுகிறார்.[112] அதே நேரத்தில், தேவிச்சவச்சகோத்த சுத்தாவானது தான் அனைத்தையும் அறிந்தவன் என்று என்றுமே கூறவில்லை என்று புத்தர் கூறுவதாகக் குறிப்பிடுகிறது. மாறாக, தான் "உயர்ந்த அறிவுகளை" (அபிச்னா) அறிந்தவராக புத்தர் தன்னைக் குறிப்பிடுகிறார்.[113] பாளி நிகயங்களில் இருந்து பெறப்படும் தொடக்க கால சுயசரிதை குறிப்புகளானவை ஒரு சிராமணராக புத்தரின் வாழ்வு, ஆலார காலமர் போன்ற பல்வேறு ஆசிரியர்களுக்குக் கீழ் விழிப்படைதலுக்கான இவரது தேடல் மற்றும் ஓர் ஆசிரியராக இவரது 45 ஆண்டு கால வாழ்வு ஆகியவற்றின் மீது கவனக் குவியம் கொண்டுள்ளன.[114] கௌதமரின் மரபு வழி சுயசரிதைகள் பொதுவாக ஏராளமான அதிசயங்கள், சகுனங்கள் மற்றும் இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளன. இந்த மரபு வழி சுயசரிதைகளில் புத்தரின் இயற்பண்பானது ஒரு முழுமையான இயற்கைக்கு அப்பாற்பட்டதாகவும் (சமசுகிருதம்: லோகத்தரா), சாதாரணமான உலகத்தால் ஆட்படாத ஒரு குறைபாடற்ற நபராகவும் உள்ளது. மகாவஸ்துவில் பல பிறப்புகளுக்குப் பிறகு புத்தர் இயல்பான உலகிற்கு அப்பாற்பட்ட திறன்களை வளர்த்துக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. உலகுடன் ஒத்துப் போவதற்காகவே பின்வரும் செயல்களில் ஈடுபட்டாலும் - பிறக்கும் போது வலி ஏற்படாது, தூங்குவதற்கோ, உணவுக்கோ, மருந்துக்கோ அல்லது குளிப்பதற்கோ தேவை இவருக்கு ஏற்படாது. முற்றறிவு மற்றும் "கர்மவினையை ஒடுக்கும் திறன்" ஆகியவற்றை கொண்டவராகக் குறிப்பிடப்படுகிறார்.[115] ஆண்ட்ரூ இசுகில்டனால் குறிப்பிடப்படுவதன்படி புத்தர் பொதுவாக மீமனிதனாக இருப்பார். இதில் ஒரு "மகா மனிதனுடைய" 32 முதன்மையான மற்றும் 80 சிறிய அறிகுறிகளுடன் இவர் இருப்பவராகவும், தான் விரும்பினால் ஓர் ஊழி முழுவதும் நீண்ட காலத்திற்கு புத்தரால் வாழ முடியும் என்ற கருத்தும் இதில் குறிப்பிடப்படுகிறது (திக நிகயம் 16).[116] பண்டைக் கால இந்தியர்கள் பொதுவாக கால வரிசைகள் குறித்து கவலைப்பட்டதில்லை. தத்துவம் மீதே அதிக கவனத்தைக் கொண்டிருந்தனர். இந்த மனப்பாங்கை பௌத்த நூல்கள் பிரதிபலிக்கின்றன. இவருடைய வாழ்வில் நிகழ்வுகளின் ஆண்டுகளை விட என்ன போதித்தார் என்பது குறித்து ஒரு தெளிவான காட்சியை அவை வைத்திருக்கின்றன. இந்த நூல்கள் பண்டைக் கால இந்தியாவின் பண்பாடு மற்றும் அன்றாட வாழ்வின் விளக்கங்களைக் கொண்டுள்ளன. சைன புனித நூல்களிலிருந்து இதை நம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள இயலும். புத்தரின் காலத்தை இந்திய வரலாற்றின் தொடக்க காலப் பகுதியாக இவை ஆக்குகின்றன. இவர் குறித்த முதன்மையான நூல்கள் உள்ளன.[117] பிரித்தானிய எழுத்தாளர் கரேன் ஆம்சுட்ராங் வரலாற்று ரீதியாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு மிகக் குறைவான தகவல்களே இருந்தாலும், ஒரு வரலாற்று நபராக சித்தார்த்த கௌதமர் வாழ்ந்தார் என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும் என்கிறார்.[118] மைக்கேல் கரித்தேர்சு ஒரு படி மேலே சென்று, "பிறப்பு, வளர்ப்பு, துறவு, தேடல், விழிப்படைதல் மற்றும் விடுதலை, போதனை, இறப்பு" ஆகியவை குறித்த மிகப் பொதுவான சுருக்கமானது கண்டிப்பாக உண்மையாக இருக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறார்.[119] முந்தய பிறப்புகள்பாளி புத்தவம்சம் மற்றும் சமசுகிருத ஜாதகமாலை போன்ற பழங்கதை சுயசரிதைகளானவை இவரது கடைசி பிறப்பான கௌதமராகப் பிறப்பதற்கு முன்னர் நூற்றுக்கணக்கான பிறப்புகளுக்கு விரிவடைந்திருந்ததாக புத்தரின் முழுப் பயணத்தையும் (இவரது விழிப்படைலுக்கு முன்னர் "போதிசத்துவர்" என்று இவர் குறிப்பிடப்பட்டார்) குறிப்பிடுகின்றன. இவரது முந்தைய பிறப்புகளானவை பல ஜாதகக் கதைகளில் விளக்கப்பட்டுள்ளன. ஜாதகக் கதைகளானவை 547 கதைகளைக் கொண்டுள்ளன.[120][121] ஒரு ஜாதகக் கதையின் வடிவமானது பொதுவாக தற்காலத்தில் ஒரு கதையைக் கூறுவதில் தொடங்குகிறது. பிறகு ஒருவரின் முந்தைய பிறப்பு குறித்த ஒரு கதையால் விளக்கப்படுகிறது.[122] பௌத்தத்திற்கு முந்தைய கடந்த காலத்தை ஓர் ஆழமான கர்ம வரலாற்றுடன் சேர்ப்பதைத் தவிர்த்து போதிசத்துவரின் (ஒரு புத்தராக மாறப் போகும்) வழியை விளக்கவும் கூட ஜாதகக் கதைகள் பயன்படுகின்றன.[123] புத்தவம்சம் போன்ற சில சுயசரிதைகளில் இந்த வழியானது நீண்ட மற்றும் இடரார்ந்த, "நான்கு கணக்கிட முடியாத ஊழிகளைக்" (அசம்கேயங்கள்) கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[124] இந்த பழங்கதை சுயசரிதைகளில் போதிசத்துவர் பல வெவ்வேறு பிறப்புகளின் (விலங்கு மற்றும் மனிதன்) வழியாகச் செல்கிறார். முந்தைய புத்தர்களுடனான தனது சந்திப்பால் அகத்தூண்டுதல் பெறுகிறார். பிறகு தானே ஒரு புத்தராக உருவாவதற்கு ஒரு தொடர்ச்சியான உறுதிகளையும், சபதங்களையும் (பிரனிதனம்) எடுக்கிறார். பிறகு முந்தைய புத்தர்களிடமிருந்து கணிப்புகளை இவர் பெறத் தொடங்குகிறார்.[125] இந்த கதைகளில் மிக பிரபலமானவற்றில் ஒன்றாக தீபங்கார புத்தருடனான இவரது சந்திப்பு உள்ளது. அப்புத்தர் எதிர்கால புத்தர் நிலைக்கான ஒரு கணிப்பை போதிசத்துவருக்குக் கொடுக்கிறார்.[126] பாளி ஜாதக வர்ணனை (ஜாதகத்தகதா) மற்றும் சமசுகிருத ஜாதகமாலை ஆகியவற்றில் காணப்படும் மற்றொரு கருத்துருவானது புத்தராக வரப்போகும் ஒருவர் எவ்வாறு ஏராளமான "நிறைவுகளை" (பரமிதம்) புத்தராக மாறுவதற்குப் பின்பற்ற வேண்டும் என்பதாகும்.[127] ஜாதாகக் கதைகள் சில நேரங்களில் முந்தைய பிறப்புகளில் போதிசத்துவரால் செய்யப்பட்ட கெட்ட செயல்களையும் கூட குறிப்பிடுகின்றன. தன்னுடைய கடைசிப் பிறப்பில் கெளதமராக இவர் அடைந்த கடினமான நிலைகளுக்கு இது விளக்கமாக அமைகிறது.[128] பிறப்பும், ஆரம்ப வாழ்க்கையும்![]() ![]() ![]() பௌத்த மரபின் படி, கௌதமர் லும்பினியில் பிறந்தார்.[129][131] இந்த இடம் நவீன கால நேபாளத்தில் உள்ளது.[r] இவர் கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார்.[132][s] பண்டைக் கால கபிலவஸ்து அமைந்திருந்த சரியான தளமானது அறியப்படவில்லை.[134] தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள பிப்ரவா[135] அல்லது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட்[136] ஆகியவற்றில் ஓர் இடமாக இது இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களுமே சாக்கியர்களின் நிலப்பரப்புக்குள் அமைந்திருந்தன. இவை இரண்டும் வெறும் 24 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளன.[136][b] பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பேரரசர் அசோகர் லும்பினி தான் கௌதமர் பிறந்த இடம் என்று உறுதியுடன் குறிப்பிட்டார். அங்கு பின் வரும் கல்வெட்டை கொண்ட ஒரு தூணை நிறுவினார்: "இங்கு தான் சாக்கியர்களின் முனிவரான (சாக்கியமுனி) புத்தர் பிறந்தார்".[137] மகாவஸ்து மற்றும் லலிதவிஸ்தாரா போன்ற பிந்தைய வாழ்க்கை வரலாற்று நூல்களின் படி, சுத்தோதனரின் மனைவியும், இவரது தாயுமான மாயா (மாயாதேவி) தேவதகாவைச் சேர்ந்த ஓர் இளவரசி ஆவார். தேவதகா என்பது கோலியர்களின் இராச்சியத்தின் பண்டைக் கால தலைநகரம் ஆகும். இது நேபாளத்தின் ரூபந்தேஹி மாவட்டத்தில் அமைந்துள்ளது. புராணத்தின் படி, சித்தார்த்தர் தன் தாயின் வயிற்றில் கருவுற்ற இரவில் ஆறு வெள்ளை தந்தங்களை உடைய ஒரு வெள்ளை யானையானது தன் வலது பக்கத்தில் உட்புகுந்ததாக இராணி மாயா கனவு கண்டார்.[138][139] 10 மாதங்கள் கழித்து சித்தார்த்தர் பிறந்தார்.[140] சாக்கியர்களின் மரபின் படி இவரது தாய் இராணி மாயா இவரை தன் வயிற்றில் சுமந்த போது குழந்தை பிறப்புக்காக தனது தந்தையின் இராச்சியத்திற்கு சொல்வதற்காக கபிலவஸ்துவிற்கு சென்றார். பயணம் செல்லும் வழியில் லும்பினியில் ஒரு தோட்டத்தில் ஒரு குங்கிலிய மரத்தின் அடியில் புத்தர் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகிறது. ஆரம்ப கால பௌத்த நூல்கள் கோதமர் (சமக்கிருதம்: கௌதமர்) என்று அழைக்கப்பட்ட ஒரு மேற்குடி சத்திரிய (பாளி: கட்டியர்) குடும்பத்தில் புத்தர் பிறந்தார் என்று குறிப்பிடுகின்றன. கௌதமர்கள் சாக்கியர்களின் ஒரு பிரிவினராக இருந்தனர். இந்தியா மற்றும் நேபாளத்தின் நவீன கால எல்லைக்கு அருகில் வாழ்ந்த அரிசி விவசாயிகளின் ஒரு பழங்குடியினமாக சாக்கியர்கள் திகழ்ந்தனர்.[141][133][142][t] இவரது தந்தை சுத்தோதனர் "சாக்கிய இனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக" இருந்தார்.[6] இவரது தலை நகரம் கபிலவஸ்து ஆகும். புத்தரின் காலத்தின் போது விரிவடைந்து கொண்டிருந்த கோசல இராச்சியத்தால் கபிலவஸ்துவானது பிற்காலத்தில் இணைக்கப்பட்டது. ஆரம்ப கால பௌத்த நூல்கள் கௌதம புத்தரின் பிறப்பு மற்றும் இளம் வயது குறித்து மிகவும் சிறிய தகவல்களையே கொண்டுள்ளன.[144][145] பிந்தைய வாழ்க்கை வரலாறுகள் இளம் வயது கௌதம புத்தரின் வாழ்வில் ஓர் இளவரசராக மற்றும் இவர் சந்தித்த பிரச்சினைகளை கவனத்தை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்டுள்ளன.[146] இசுவாகுவின் (பாளி: ஒக்ககம்) சூரிய குலத்தைச் சேர்ந்த ஒரு மரபு வழி முடியரசராக புத்தரின் தந்தை சுத்தோதனரை இவை குறிப்பிட்டன. இதை ஏற்றுக் கொள்ள சில வரலாற்றாளர்கள் மறுக்கின்றனர். சுத்தோதனர் வெறுமனே ஒரு சாக்கிய மேற்குடி சத்திரிய (பாளி: கட்டியர்) இனத்தைச் சேர்ந்தவர் என்கின்றனர். சாக்கிய குடியரசானது மரபு வழி முடியாட்சியாக இல்லை என்று பல அறிஞர்கள் எண்ணுகின்றனர்.[147][148][149] சிரமண சைன மற்றும் புத்த சங்கங்களின்[u] வளர்ச்சி மீது, அதிகப்படியான சமத்துவ கொள்கையுடைய கன சங்க அமைப்பு அரசாங்கமானது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த அமைப்பானது இந்திய முடியரசுகளுக்கு ஒரு மாற்று அரசியல் அமைப்பாக இருந்தது. பெரும்பாலான இந்திய முடியரசுகள் அக்காலத்தில் பண்டைய வேத சமயத்தையே ஆதரித்தன.[150] புத்தரின் பிறப்பு மற்றும் குழந்தைப் பருவச் சிற்பங்கள்
புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்ற மற்றும் இறப்பு ஆகிய நாட்கள் தேரவாத பௌத்த நாடுகளில் வைசாகம் எனவும், இவர் தன் தாயின் வயிற்றில் உருவான நாளை போசோன் என்றும் பரவலாக கொண்டாடுகின்றன.[151] நேபாளம், வங்கதேசம் மற்றும் இந்தியாவில் புத்தரின் பிறந்த தினமானது புத்த பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. ஒரு பௌர்ணமி நாளில் புத்தர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. பிந்தைய வாழ்க்கை வரலாற்று புராணங்களின் படி, இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எதிர்காலத்தைக் கணித்து கூறும் துறவியான அசிதர் தன்னுடைய மலை வாழ்விடத்தில் இருந்து பயணித்து புத்தரைக் காண வந்தார். "ஒரு மகா மனிதனுக்குரிய 32 அறிகுறிகள்" குழந்தையிடம் உள்ளதா என்று ஆராய்ந்தார். பிறகு புத்தர் ஒரு மகா மன்னன் (சக்கரவர்த்தி) அல்லது ஒரு மகா சமயத் தலைவர் ஆகிய இருவரில் ஒருவராக ஆவார் என்று கூறினார்.[152][153] புத்தர் பிறந்த 5ஆம் நாளில் ஒரு பெயர் சூட்டும் விழாவிற்கு சுத்தோதனர் ஏற்பாடு செய்தார். புத்தரின் எதிர் காலத்தை கணித்து கூறுவதற்காக எட்டு பிராமண அறிஞர்களை வருமாறு வேண்டினார். அனைவரும் இதே போன்ற கணிப்பை கூறினர்.[152] இதில் மிகவும் இளையவரான கௌந்தேயன் என்பவர் மட்டுமே தீர்க்கமாக சித்தார்த்தர் ஒரு புத்தராக மாறுவார் என்று கணித்து கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தரைத் தவிர்த்த முதல் அருகதராகவும் கௌந்தேயன் உருவானார்.[154] தன்னுடைய சமய தேடலுக்காக வெளியேறும் வரையில் தன் காலத்தில் இருந்த ஆதிக்கமிக்க சமய போதனைகளை கௌதமர் அறிந்திருக்கவில்லை என்று ஆரம்ப கால நூல்கள் பரிந்துரைக்கின்றன. இவரது தேடலானது மனிதர்களின் துன்பத்திற்கு எது காரணமாக அமைகிறது என்பதனால் தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது.[155] பல்வேறு பௌத்த சமய பிரிவுகளைச் சேர்ந்த ஆரம்ப கால பௌத்த நூல்களின் படியும், இந்திய நூல்களின் மொழி பெயர்ப்பாக கிழக்காசியாவில் எழுதப்பட்ட ஏராளமான நூல்களின் படியும், கௌதமருக்கு யசோதரை என்ற ஒரு மனைவியும், ராகுலன் என்ற ஒரு மகனும் இருந்தனர்.[156] இது தவிர ஆரம்ப கால நூல்களில் புத்தர் "(எனது பெற்றோரின் வீட்டில்) நான் செல்லமாக, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டேன் துறவிகளே" என்று குறிப்பிட்டுள்ளார்.[157] புராணங்கள் கலந்த வாழ்க்கை வரலாறுகளான லலிதவிஸ்தாரா போன்றவை இளம் கௌதமரின் சிறப்பான போர் ஆற்றல் குறித்த கதைகளையும் குறிப்பிடுகின்றன. பிற சாக்கிய இளைஞர்களுக்கு எதிராக பல்வேறு போட்டிகளில் இவர் கலந்து கொண்டார் என்றும் குறிப்பிடுகின்றன.[158] துறவுகௌதமர் ஓர் உயர்ந்த ஆன்மிக இலக்கை தேடியது மற்றும் சமய குருவுக்குரிய வினைமுறை பயிற்சி அளிக்கப்படாத வாழ்க்கையால் விரக்தியடைந்தது ஆகியவற்றுக்கு பிறகு, ஒரு துறவி அல்லது சிரமனராக உருவானதை ஆரம்ப கால நூல்கள் வெறுமனே குறிப்பிடும் அதே நேரத்தில், பிந்தைய புராணம் கலந்த வரலாறுகள் புத்தர் எவ்வாறு ஒரு யாசகராக ஆனார் என்பதை ஒரு விரிவான, விளக்கங்களுடன் கூடிய, கவனத்தை ஈர்க்கக்கூடிய கதையாக குறிப்பிடுகின்றன.[146][159] பாளி மொழி ஆரியபரியேசன-சுத்தா ("உன்னதமான தேடல் குறித்த விவாதம்," மச்சிம நிகயம் 26) நூல் மற்றும் அதன் சீன இணை நூலான மத்தியம ஆகமத்தின் 204ஆம் பத்தி போன்றவற்றில் புத்தரின் ஆன்மீக தேடல் குறித்த ஆரம்ப கால குறிப்புகள் காணப்படுகின்றன.[160] தன்னுடைய வாழ்வும் முதுமை, நோய் மற்றும் இறப்பு ஆகியவற்றை அடையும், மற்றும் இவற்றை விட சிறந்த ஒன்று (அதாவது விடுதலை, நிர்வாணம்) இருக்கும் ஆகியவை குறித்த எண்ணமே கௌதமர் துறவு மேற்கொள்வதற்கு இட்டுச் சென்றன என்று இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன.[161] தான் ஒரு சிரமனராக வந்ததற்கு புத்தர் கொடுத்த விளக்கத்தை இந்த ஆரம்ப கால நூல்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன: "இல்லற வாழ்க்கை, இந்த தூய்மையற்ற இடம் என்பது குறுகலானது - சமண வாழ்க்கையானது சுதந்திரமான வெட்ட வெளி காற்று போன்றது. பிழையற்ற, மிகவும் தூய்மையான மற்றும் பிழையற்ற புனித வாழ்வை ஓர் இல்லற வாழ்க்கை உடையவரால் வாழ்வது என்பது எளிதானது கிடையாது."[162] மச்சிம நிகயம் 26, மத்தியம ஆகமம் 204, தர்மகுப்தக வினயம் மற்றும் மகாவஸ்து ஆகிய அனைத்து நூல்களுமே புத்தரின் இந்த முடிவை அவரது தாய் மற்றும் தந்தை எதிர்த்தனர் என்பதை ஒப்புக் கொள்கின்றன. புத்தர் துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வீட்டை விட்டு வெளியேறிய போது அவர்கள் "கண்ணீர் உடைய முகங்களுடன் அழுக" ஆரம்பித்தனர்.[163][164] ![]() தன்னுடைய அரண்மனையை விட்டு முதன் முறையாக வெளியுலகத்தை காண்பதற்காக கௌதமர் எவ்வாறு வெளியேறினார், மனிதர்கள் அடையும் துன்பங்களை இவர் கண்ட போது எவ்வாறு அதிர்ச்சி அடைந்தார் என்ற கதையையும் புராணம் கலந்த வரலாறுகள் குறிப்பிடுகின்றன.[165][166] ஒரு பெரிய சமயத் தலைவராக மாறுவதற்கு பதிலாக ஒரு மகா மன்னனாக கௌதமர் வர வேண்டும் என்பதற்காக சமய போதனைகள் மற்றும் மனிதர்கள் அடையும் துன்பங்கள் குறித்த நிகழ்வுகளை கௌதமர் காணாமல் இருக்க கௌதமரின் தந்தை எவ்வாறு இவரை மறைத்து வளர்த்தார் என்பதையும் இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன.[167] பொ. ஊ. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாதக கதைகள் கௌதமர் ஒரு முதியவரைக் கண்டார் என்று குறிப்பிடுகின்றன. அனைவரும் ஒரு நாள் முதுமை அடைவார்கள் என்பதை கெளதமரின் தேரோட்டியான சந்தகன் விளக்கி கூறிய போது அரண்மனையைத் தாண்டி மேற்கொண்ட பயணங்களை இளவரசர் கௌதமர் மேற்கொண்டார். இத்தகைய ஒரு பயணத்தில் கௌதமர் ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதன், ஓர் அழுகிக் கொண்டிருந்த பிணம் மற்றும் தனக்கு அகத்தூண்டுதலாக விளங்கிய ஒரு துறவியையும் கண்டார்.[168][169][170] இவ்வாறு "நான்கு காட்சிகளை" கண்ட கதையானது விபசி என்ற ஒரு முந்தைய புத்தரை சித்தரித்திருந்த திக நிகயம் (திக நிகயம் 14.2) என்ற நூலின் முந்தைய பதிப்பில் இருந்து பெறப்பட்டதாக ஒரு சிலர் கருதுகின்றனர். விபசி என்ற ஒரு முந்தைய புத்தரின் இள வயது வாழ்க்கையை இந்நூல் சித்தரித்திருந்தது.[170] தன்னுடைய அரண்மனையிலிருந்து கௌதமர் வெளியேறியதை இந்த புராணம் கலந்த வரலாறுகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன. நான்கு காட்சிகளை கண்டதற்கு பிறகு சீக்கிரமே கௌதமர் ஓரிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்தார். காண்பதற்கு இனியதற்ற பிணம் போன்ற நிலையில் தன்னுடைய வேலை பெண்கள் இருப்பதை கண்டது இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.[171] தான் ஞானம் பெற்ற போது மிகவும் ஆழமாக பின்னர் தான் புரிந்து கொண்ட துக்கம் ("நிலையற்ற," "மனநிறைவின்மை")[172][173][174][175] மற்றும் துக்கத்தின் முடிவு ஆகியவற்றை இவ்வாறாக கண்டறிந்தார்.[176] தான் கண்ட அனைத்து காட்சிகளாலும் மனமாற்றமடைந்த கௌதமர் தன்னுடைய தந்தையின் விருப்பத்திற்கு எதிராக ஒரு நள்ளிரவில் அரண்மனையிலிருந்து வெளியேறி ஓர் அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை வாழ முடிவு செய்தார்.[168] தன்னுடைய குதிரை கந்தகா மற்றும் சந்தகனுடன் கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறினார். தன்னுடைய மகன் ராகுலன் மற்றும் மனைவி யசோதரை ஆகியோரை விட்டு விட்டுச் சென்றார்.[177] அனோமியா ஆற்றுக்கு பயணித்தார். தன்னுடைய முடியை வெட்டினார். தன்னுடைய பணியாள் மற்றும் குதிரையை விட்டு விட்டு வனப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு துறவிகளுக்குரிய அங்கியை மாற்றிக் கொண்டார்.[178] எனினும், இக்கதையின் சில மாறுபட்ட பதிப்புகள், அனோமியா ஆற்றின் கரையில் பிரம்மாவிடமிருந்து அங்கிகளை கௌதமர் பெற்றார் எனக் கூறுகின்றன.[179] புராணம் கலந்த வரலாறுகளின் படி, துறவி கௌதமர் முதன் முதலில் ராஜககத்திற்கு (தற்கால ராஜகிரகம்) தெருக்களில் யாசகம் வேண்டுவதற்காக சென்றார். மகதத்தின் மன்னனான பிம்பிசாரர் கௌதமரின் இந்த தேடல் குறித்து அறிந்தார். தன்னுடைய இராச்சியத்தின் ஒரு பகுதியை அளிக்க முன் வந்தார். கௌதமர் இந்த வாய்ப்பை நிராகரித்தார். ஆனால், தான் ஞானம் பெற்றவுடன் முதன் முதலில் பிம்பிசாரரின் இராச்சியத்திற்கு வருகை புரிவேன் என்று உறுதியளித்தார்.[180][181] துறவு வாழ்வும், விழிப்படைதலும்![]() ![]() ![]() ![]() தன்னை வருத்தி கடு முயற்சி செய்து ஆன்மிகத் தேடலில் ஈடுபட்ட ஆண்டுகளின் போது கெளதமர் தொலை தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்ந்தார் என்றும், காடுகளில் வாழும் போது தான் அடைந்த பயத்தை இவர் கட்டுக்குள் கொண்டு வர வேண்டி இருந்தது என்றும் மச்சிம நிகயம் 4 குறிப்பிடுகிறது.[183] நிகய-நூல்கள் துறவி கௌதமர் இரண்டு ஆசிரியர்களுக்கு கீழ் யோக தியானத்தை பயின்றார் என்றும் கூறுகின்றன.[184][185] ஆரியபரியேசன-சுத்தா (மச்சிம நிகயம் 26) மற்றும் அதன் சீன இணை நூலான மத்தியம ஆகமம் 204 ஆகியவற்றின் படி ஆலார காலமரின் பயிற்சியை முழுவதுமாக கற்றதற்குப் பிறகு அவர்களின் ஆன்மிக சமூகத்தின் ஒரு சமமான தலைவராக வரவேண்டும் என்று புத்தரை ஆலாரர் கேட்டுக் கொண்டார். ஆலரார் புத்தருக்கு "ஏதுமின்மையின் கோளம்" என்று அழைக்கப்பட்ட ஒரு தியான அடைதலை பயிற்றுவித்தார்.[186][187] கெளதமர் இந்த பயிற்றுவிப்பில் திருப்தி அடையவில்லை. ஏனெனில், இது (உலக வாழ்வு மீதான) கடும் வெறுப்புணர்ச்சிக்கோ, நிர்ச்சலனத்திற்கோ, அற்றுப் போதலுக்கோ, அமைதி நிலைக்கோ, அறிவாற்றலுக்கோ, விழிப்படைதலுக்கோ, நிப்பானத்திற்கோ (நிர்வாணம்) இட்டுச் செல்லவில்லை. பிறகு உத்தக ராமபுத்திரரின் ஒரு மாணவனாக பயில ஆரம்பித்தார்.[188][189] இவர் மூலமாக உயர் நிலை தியான உணர்வு நிலைகளை புத்தர் அடைந்தார். இந்த உணர்வு நிலையானது "உணர்ந்தறியும் ஆற்றல் அல்லது உணர்ந்தறியா ஆற்றலின் கோளம்" என்று அழைக்கப்பட்டது. இந்த முறையும் தன்னுடைய ஆசிரியரால் அவருடன் இணைந்து கொள்ளுமாறு புத்தருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் ஒரு முறை, ஏற்கனவே தான் கொண்ட அதே காரணங்களுக்காக புத்தர் திருப்தி அடையவில்லை. மீண்டும் தனது பயணத்தை புத்தர் தொடர ஆரம்பித்தார்.[190] சில சூத்திரங்களின் படி, தனது தியான ஆசிரியர்களிடம் இருந்து விலகியதற்கு பிறகு கௌதமர் துறவிகளின் உத்திகளைப் பின்பற்ற ஆரம்பித்தார்.[191][v] ஆரம்ப கால நூல்களில் விளக்கப்பட்டுள்ள புத்தர் மேற்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள துறவு உத்திகளில் மிகக் குறைவான அளவே உணவை எடுத்துக் கொள்ளுதல், வேறுபட்ட வகையிலான மூச்சுக் கட்டுப்பாடு மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட மனக் கட்டுப்பாடு ஆகியவையும் அடங்கும். புத்தர் மிகவும் இளைத்ததன் காரணமாக இவரது எலும்புகள் தோல் வழியாக தெரிய ஆரம்பித்தன என்று இந்நூல்கள் குறிப்பிடுகின்றன.[193] மகசச்சக-சுத்தா மற்றும் பெரும்பாலான அதன் இணை நூல்கள் துறவை அதன் மட்டு மீறிய உச்ச நிலைகளுக்கு கொண்டு சென்றதற்கு பிறகு நிர்வாணத்தை அடைவதற்கு இந்த உத்திகள் உதவில்லை என்பதை கௌதமர் உணர்ந்தார் என்றூ குறிப்பிடுகின்றன. தன்னுடைய இலக்கைத் தொடர்வதற்காக வலிமையை மீண்டும் பெற வேண்டும் என்ற தேவையை புத்தர் உணர்ந்தார்.[194] ஒரு பிரபலமான கதையானது சுஜாதா என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமப் பெண்ணிடமிருந்து பாலையும், அரிசி பாயாசத்தையும் புத்தர் எவ்வாறு ஏற்றுக் கொண்டார் என்பதை கூறுகிறது.[195] துறவில் இருந்து சற்றே இடை நிறுத்தத்தை புத்தர் எடுத்ததானது, இவரது ஐந்து தோழர்கள் இவரிடமிருந்து விலகுதற்கு வழி வகுத்தது என்று கூறப்படுகிறது. தன்னுடைய தேடலை கைவிட்டு விட்டு, ஒழுக்கமற்றவராக புத்தர் உருவாகிவிட்டார் என்று அவர்கள் நம்பியதால் இவ்வாறு விலகினர். இந்நிலையில் தன்னுடைய தந்தை வேலையில் ஈடுபட்டிருந்த போது தான் ஒரு குழந்தையாக ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்த போது தான் அடைந்த ஒரு முந்தைய தியான அனுபவத்தை கௌதமர் மீண்டும் ஞாபகம் கொண்டார்.[194] விடுதலை பெறுவதற்கான வழியானது தியானமே என்று உணர்ந்து கொள்ள இந்த நினைவானது இவருக்கு வழி வகுத்தது. புத்தர் அனைத்து நான்கு தியானங்களையும் கற்றார் என்றும், அதற்குப் பிறகு "மூன்று உயர்ந்த அறிவுகளையும்" (தெவிஜ்ஜா)[w] பெற்றார் என்றும், இறுதியாக நான்கு உயர்ந்த உண்மைகள் குறித்த முழுவதுமான புரிதலையும் பெற்றார் என்றும், இவ்வாறாக மீண்டும் மீண்டும் பிறக்கும் முடிவற்ற சுழற்சியான பிறவிச்சுழற்சியில் இருந்து விடுதலை பெற்றார் என்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன.[197][198][199][200][x] தம்மசக்கபவத்தன சுத்தா (சம்யுத்த நிகயம் 56)[201] நூலானது ததாகதர், இன்பம் கொள்வது மற்றும் ஊனுருக வைப்பதின் மட்டு மீறிய நிலைகளாக இல்லாது ஒரு மிதமான வழியான "நடு வழி" அல்லது உன்னதமான எண்வகை மார்க்கங்களை உணர்ந்தார் என்று குறிப்பிடுகிறது. இந்த ததாகதர் என்ற சொல்லைத் தான் கௌதமர் பெரும்பாலும் அடிக்கடி தன்னைத் தானே குறிப்பிட்டுக் கொள்ள பயன்படுத்தினார்.[201] பிந்தைய நூற்றாண்டுகளில் தான் கௌதம புத்தர் அல்லது "விழிப்படைந்த ஒருவர்" என்று இவர் அறியப்பட ஆரம்பித்தார். புத்தர் என்ற இந்த பட்டமானது "தூங்கி கொண்டிருக்கும்" பெரும்பாலான மக்களிலிருந்து வேறுபடுத்தி, ஒரு புத்தர் என்பவர் நடைமுறையின் உண்மையான இயல்புக்கு "விழிப்படைந்த ஒருவரென்றும்", உலகம் 'எவ்வாறு உள்ளதோ அவ்வாறே' (யுத-புதம்) அதைக் காண்பவர் என்றும் குறிக்கிறது.[13] துன்ப சுழற்சி மற்றும் மறு பிறப்பு ஆகியவற்றை தொடர வைக்கும் ஆசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகிய "நெருப்புகளை" அணைத்ததாக அறியப்படுகிற விடுதலை (விமுத்தி) அல்லது நிர்வாணத்தை அடைந்த ஒருவராக ஒரு புத்தர் அறியப்படுகிறார்.[202] தன்னுடைய தியான ஆசிரியர்களிடமிருந்து விலகிச் செல்லும் தன்னுடைய முடிவைத் தொடர்ந்து மத்தியம ஆகமம் 204 மற்றும் பிற ஆரம்ப இணை நூல்களில் குறிப்பிட்டுள்ள படி, முழுமையான விழிப்படைதலை (சம்ம-சம்போதி) அடையும் வரை தான் எழுந்திருக்கக் கூடாது என்ற முடிவுடன் கௌதமர் அமர்ந்தார். ஆரியபரியேசன-சுத்தா நூலானது "முழுமையான விழிப்படைதலை" பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், இவர் நிர்வாணத்தை அடைந்தார் என்று மட்டும் குறிப்பிடுகிறது.[203] இந்நிகழ்வானது பீகாரின் புத்தகயையில் உள்ள, "போதி மரம்" என்று தற்போது அறியப்படும் ஓர் அரச மரத்தின் கீழ் நடந்தது என்று கூறப்படுகிறது.[204] பாளி திரு முறையைச் சேர்ந்த பல்வேறு நூல்களில் குறிப்பிட்டுள்ள படி, போதி மரத்தின் கீழ் புத்தர் ஏழு நாட்களுக்கு அமர்ந்திருந்தார். "விடுதலையின் நிறைவான மகிழ்ச்சியை" உணர்ந்தார்.[205] இவர் தொடர்ந்து தியானம் செய்தார் என்றும், நைரஞ்சன ஆற்றின் அருகில் வாழ்ந்து தம்மத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சிந்தித்தார் என்றும் பாளி நூல்கள் மேலும் குறிப்பிடுகின்றன. இந்த அம்சங்களில் ஒரு தம்மமானது மற்றொரு தம்மத்திலிருந்து உருவாகிறது, ஐந்து ஆன்மிக புலன்கள் மற்றும் துன்பம் (துக்கம்) ஆகியவையும் அடங்கும்.[206] மகாவஸ்து, ஜாதக கதைகள் மற்றும் லலிதாவிஸ்தாரா போன்ற புராணம் கலந்த வரலாறுகள், ஆசைகள் உலகின் மன்னனான மாறன் புத்தர் நிர்வாணம் அடைவதை தடுப்பதற்காக மேற்கொண்ட ஒரு முயற்சியையும் குறிப்பிடுகின்றன. அவன் புத்தரை மயக்குவதற்காக தன்னுடைய மகள்களை அனுப்பினான், தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றான், இராட்சதர்களின் இராணுவத்தைக் கொண்டு புத்தரைத் தாக்கினான்.[207] எனினும், புத்தர் இதனால் சலனம் அடையவில்லை. தன்னுடைய முதன்மை நிலையை பூமி அறிந்து கொள்வதற்காக பூமியை அழைத்து தரையை தொட்டார். புராணங்களின் சில பதிப்புகளின் படி, பிருத்வியை அழைத்தார் என்று குறிப்பிடப்படுகிறது. பிறகு தியானத்தை மேற்கொண்டார்.[208] இது தவிர பிற அதிசயங்கள் மற்றும் மந்திர நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. முதல் சமயச் சொற்பொழிவும், சங்கம் உருவாக்கப்படுதலும்![]() மச்சிம நிகயம் 26இன் படி, தன்னுடைய விழிப்படைதலுக்கு பின் உடனடியாக, தன் தம்மத்தை பிறருக்கு போதிக்கலாமா அல்லது வேண்டாமா என்ற தயக்கம் புத்தருக்கு ஏற்பட்டது. "நுட்பமான, ஆழமான மற்றும் பின்பற்ற கடினமான" ஒரு பாதையை அறியாமை, பேராசை மற்றும் வெறுப்பால் ஆட்கொள்ளப்பட்டுள்ள மனிதர்களால் ஏற்றுக் கொள்ள இயலுமா என்ற கவலை ஏற்பட்டது. எனினும், கடவுள் பிரம்ம சகம்பதி புத்தரை இணங்க வைத்தார். குறைந்தது "தம் கண்களில் சிறு தூசி" உள்ள யாரேனும் இதை புரிந்து கொள்வார்கள் என்று வாதிட்டார். புத்தர் தணிந்தார். போதிக்க ஒப்புக் கொண்டார். மச்சிம நிகயம் 26, மத்தியம ஆகமம் 204 ஆகியவற்றுக்கு இணை சீன நூலான அனலயோவின் நூலில் இக்கதை காணப்படவில்லை. ஆனால், லலிதவிஸ்தாராவின் கதுஸ்பரிசத்-சூத்திரத்தின் எகோத்தரிக-ஆகம கருத்தாடல் போன்ற பிற இணை நூல்களில் இந்நிகழ்வு காணப்படுகிறது.[203] மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204இன் படி, போதிக்க முடிவு செய்ததற்கு பிறகு புத்தர் ஆரம்பத்தில் தன்னுடைய முந்தைய ஆசிரியர்களான ஆலார காலமர் மற்றும் உத்தக ராமபுத்திரர் ஆகியோரை சந்திக்க விரும்பினார். தன்னுடைய போதனைகளின் தன்மையை அவர்களுக்கு கூற எண்ணினார். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்து இருந்தனர். எனவே, தன்னுடைய ஐந்து முன்னாள் தோழர்களை சந்திக்க இவர் முடிவு செய்தார்.[209] மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204 ஆகிய இரு நூல்களுமே புத்தர் தான் வாரணாசிக்கு (பனாரசு) செல்லும் வழியில் மற்றொரு அலைந்து திரிந்த துறவியை சந்தித்தார். அவர் ஆசீவகத் துறவியான உபகர் ஆவார். இது மச்சிம நிகயம் 26இல் குறிப்பிடப்பட்டுள்ளது. தான் முழுமையான விழிப்படைதலை அடைந்து விட்டதாக புத்தர் தெரிவித்தார். ஆனால் உபகர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அவர் "மாற்று (ஆன்மிக) பாதையை" தேர்ந்தெடுத்தார்.[210] மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204 ஆகியவை புத்தர் சாரநாத்தின் மான் பூங்காவை அடைந்ததுடன் தொடர்கின்றன. இவ்விடம் மிரிகவதம் மற்றும் ரிஷிபட்டணம் என்றும் அழைக்கப்பட்டது. ரிஷிபட்டணம் என்பதன் பொருள் "துறவிகளின் சாம்பல் விழும் தளம்" என்பதாகும்.[211] இது வாரணாசிக்கு அருகில் அமைந்திருந்தது. இங்கு புத்தர் ஐந்து துறவிகளின் குழுவை சந்தித்தார். அத்துறவிகளை தான் உண்மையில் முழுமையான விழிப்படைதலை அடைந்ததை நம்புமாறு செய்தார்.[212] மத்தியம ஆகமம் 204லும் (மச்சிம நிகயம் 26இல் இது குறிப்பிடப்படவில்லை), மேலும் தேரவாத வினயம் எனும் ஓர் எகோத்தரிக-ஆகம நூல், தருமகுப்தக வினயம், மகிசசக வினயம், மற்றும் மகாவஸ்து ஆகியவற்றின் படி, புத்தர் இவர்களுக்கு "முதல் சமயச் சொற்பொழிவை" போதித்தார். இது "பனாரசு சமயச் சொற்பொழிவு" என்றும் அறியப்படுகிறது.[211] இதன் பொருள், "இன்பம் கொள்வது மற்றும் ஊனுருக வைப்பதின் மட்டு மீறிய நிலைகளில் இருந்து விலகி உன்னதமான எண்வகை மார்க்கங்கள் எனும் ஒரு நடு வழியை போதிப்பதாகும்.[212] முதல் சமயச் சொற்பொழிவுக்கு பிறகு துறவி கௌந்தேயன் முதல் அருகதராகவும் (விடுதலை பெற்ற மனிதன்), முதல் பௌத்த பிக்குவும் ஆனார் என பாளி நூல் குறிப்பிடுகிறது.[213] பிற துறவிகளுக்கு போதிப்பதை பிறகு புத்தர் தொடர்ந்தார். பௌத்த துறவிகளின் குழுவான முதல் சங்கத்தை இவர்கள் நிறுவினர்.[u] மகாவஸ்து, தேரவாத வினயத்தின் மகாகந்தகம் மற்றும் கதுஸ்பரிசத்-சூத்திரம் போன்ற பல்வேறு நூல்கள் இவர்களுக்கு புத்தர் "தான்-அற்ற" (அனாத்மலக்சண சூத்திரம்) என்ற தன் இரண்டாவது கருத்தாடலையும் இந்நேரத்திலோ[214] அல்லது ஐந்து நாட்கள் கழித்தோ[211] போதித்தார் என்று குறிப்பிடுகின்றன. இந்த இரண்டாவது சமயச் சொற்பொழிவை கேட்டதற்கு பிறகு மீதமிருந்த நான்கு துறவிகளும் அருகதர் நிலையை அடைந்தனர்.[211] தேரவாத வினயம் மற்றும் கதுஸ்பரிசத்-சூத்திரம் ஆகியவையும் யசா என்ற ஓர் உள்ளூர் கழக எசமானர் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் மதம் மாறியதை குறிப்பிடுகின்றன. மதம் மாறி பௌத்த சமூகத்துக்குள் நுழைந்த முதல் உபாசகர்களில் இவர்களும் முதன்மையானோர் ஆவர்.[215][211] கசப்பா என்ற பெயருடைய மூன்று சகோதரர்கள் இதைத் தொடர்ந்து மதம் மாறினர். முன்னர் "சடை முடி துறவிகளாக" இருந்த ஐநூறு பேரை இவர்கள் தங்களுடன் அழைத்து வந்தனர். இந்த ஐநூறு பேரின் முந்தைய ஆன்மீக வழக்கமானது நெருப்பு பலியிடலாக இருந்தது.[216][217] தேரவாத வினயத்தின் படி, கயைக்கு அருகில் இருந்த கயாசிசா குன்றில் பிறகு புத்தர் தங்கினார். ஆதித்தபரியாய சுத்தா (நெருப்பு கருத்தாடல்) என்ற தன் மூன்றாவது கருத்தாடலை புத்தர் ஆற்றினார்.[218] இந்த உலகில் உள்ள அனைத்தும் உணர்ச்சி ஆர்வத்தால் தூண்டப்பட்டுள்ளன என்றும், எண் வகை மார்க்கங்களை பின்பற்றுவோர் மட்டுமே விடுதலை பெறுவர் என்றும் இதில் போதித்தார்.[211] மழைக் காலத்தின் முடிவின் போது புத்தரின் சமூகமானது சுமார் 60 விழிப்படைந்த துறவிகள் அளவுக்கு வளர்ந்த போது அவர்களை தனியாக அலைந்து திரியுமாறு புத்தர் அறிவுறுத்தினார். பௌத்த சமூகத்துக்குள் மக்களை போதித்து சேர்க்குமாறு கூறினார். இதை உலகின் "நன்மைக்காகவும், அனுகூலத்திற்காகவும்" செய்யுமாறு கூறினார்.[219][211] பயணங்களும், சங்கத்தின் வளர்ச்சியும்![]() தன் வாழ்வின் எஞ்சிய 40 அல்லது 45 ஆண்டுகளுக்கு தற்போதைய உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் தெற்கு நேபாளத்தை உள்ளடக்கியிருந்த சிந்து-கங்கை சமவெளியில் புத்தர் பயணம் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. பல்வேறு வகைப்பட்ட மக்களுக்கு இப்பயணத்தில் புத்தர் போதித்தார். உயர்குடியினர் முதல் பணியாளர்கள் வரை, துறவிகள் முதல் இல்லற வாழ்வைப் பின்பற்றியவர் வரை, அங்குலிமாலா போன்ற கொலைகாரர்கள் முதல் ஆலவகன் போன்ற நரமாமிசம் உண்பவர்கள் வரை புத்தர் போதித்தார்.[220][159][221] சூமன் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப் படி, "யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருந்த கோசாம்பி (பிரயாக்ராஜுக்கு தென் மேற்கே 25 கி. மீ.) முதல் கம்பா (பாகல்பூருக்கு கிழக்கே 40 கி. மீ.) வரையிலும்" மற்றும் "கபிலவஸ்து (கோரக்பூருக்கு வட மேற்கே 95 கி. மீ.) முதல் உருவேலா (கயைக்கு தெற்கே) வரையிலும் புத்தரின் பயணமானது நடைபெற்றிருந்தது. இது 600 நீளம் மற்றும் 300 கிலோமீட்டர் அகலமுடைய பரப்பளவுடைய ஒரு பகுதியாகும்.[222] கோசல மற்றும் மகத நாட்டு மன்னர்களின் புரவை இவரது சங்கமானது[u] பெற்றிருந்தது. இவ்வாறாக இந்நாடுகளின் தலைநகரங்களான முறையே சவத்தி மற்றும் இராஜககம் ஆகியவற்றில் ஏராளமான நேரத்தை புத்தர் செலவழித்தார்.[222] புத்தர் என்ன மொழி பேசினார் என்பது தொடர்ந்து அறியப்படாமலேயே உள்ள போதிலும், நடு இந்தோ-ஆரிய மொழி வழக்குகளுடன் நெருங்கிய தொடர்புடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகை மொழிகளில் இவர் போதித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் தரப்படுத்தப்பட்டதாக பாளி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சங்கமானது ஆண்டு முழுவதும் அலைந்து திரிந்தது. இதில் விதி விலக்கு வச்சா மழைக் காலத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே ஆகும். இந்நேரத்தில் அனைத்து சமயத்தைச் சார்ந்த துறவிகளும் அரிதாகவே பயணம் மேற்கொண்டனர். இதற்கு ஒரு பங்கு காரணமானது தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு துன்பம் விளைவிக்காமல் பயணம் மேற்கொள்வது என்பது மழைக்காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது ஆகும். [223]துறவிகளின் உடல் நலம் குறித்த ஐயப்பாடும் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.[224] ஆண்டின் இந்த நேரத்தின் போது சங்கமானது மடாலயங்கள், பொதுப் பூங்காக்கள் அல்லது காடுகளில் நடத்தப்பட்டது. இவ்விடங்களுக்குத் துறவிகளைத் தேடி மக்கள் வந்தனர். சங்கம் தொடங்கப்பட்ட போது முதல் மழைக் காலமானது வாரணாசியில் கழிக்கப்பட்டது. பாளி நூல்களின் படி சங்கம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு சீக்கிரமே புத்தர் மகத நாட்டின் தலைநகரமான இராஜககத்திற்கு பயணம் மேற்கொண்டார். மன்னர் பிம்பிசாரரை சந்தித்தார். பிம்பிசாரர் சங்கத்திற்கு ஒரு மூங்கில் வன பூங்காவை பரிசளித்தார்.[225] புத்தரின் சங்கமானது வட இந்தியாவில் இவருடைய ஆரம்ப கால பயணங்களின் போது தொடர்ந்து வளர்ந்தது. எளிதில் நம்பிக்கை கொள்ளாத சிரமனரான சஞ்சய பெலத்திப்புத்தரின் மாணவர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோரை அசாஜி எவ்வாறு மதம் மாற்றி புத்தரின் முதன்மையான சீடர்களாயினர் என்ற கதையை ஆரம்ப கால நூல்கள் குறிப்பிடுகின்றன.[226][227] புத்தர் கபிலவஸ்துவில் உள்ள தனது பழைய வீட்டிற்கு வருகை புரிந்த போது புத்தரின் மகனான இராகுலன் எவ்வாறு தன்னுடைய தந்தையுடன் ஒரு பிக்குவாக இணைந்தார் என்ற கதையையும் இவை கூறுகின்றன.[228] புத்தரின் உறவினரான ஆனந்தர், அனுருத்தர், முடி திருத்துபவரான உபாலி, புத்தரின் ஒன்று விட்ட சகோதரரான நந்தர் மற்றும் தேவதத்தன் போன்ற பிற சாக்கியர்களும் எவ்வாறு புத்தரின் சங்கத்தில் பிக்குகளாக காலப்போக்கில் இணைந்தனர் என்பதையும் குறிப்பிடுகின்றன.[229][230] அதே நேரத்தில், புத்தரின் தந்தையான சுத்தோதனர் தன்னுடைய மகனின் போதனைகளை பற்றிய தகவல் அறிந்ததால் பௌத்த மதத்திற்கு மதம் மாறினார். தம்மத்தை அறிந்த, முதல் மூன்று பிணைகளிலிருந்து விடுபட்ட சொதபன்னர் ஆனார். ஆரம்ப கால நூல்கள் ஒரு முக்கியமான உபாசக சீடரான வணிகர் அனாதபிண்டிகனை பற்றியும் குறிப்பிடுகின்றன. புத்தருக்கு ஒரு வலிமையான உபாசக ஆதரவளிப்பவராக இவர் உருவானார். ஒரு பெரும் பணம் செலவழித்து (தேரவாத வினயமானது ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை பற்றி கூறுகிறது) சங்கத்திற்கு ஜேதவனத்தை பரிசாகக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.[231][232] பிக்குணி அமைப்பை உருவாக்குதல்![]() புத்தரின் சமூகத்தின் வளர்ச்சியின் மற்றொரு முக்கிய பங்காக ஆண் பிக்குகளை ஒத்த பெண் துறவிகளுக்குமான (பிக்குணி) ஓர் இணையான அமைப்பு உருவாக்கப்பட்டதை கூறலாம். இந்த தலைப்பு குறித்த அனலயோவின் ஒப்பீட்டு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள படி, வேறுபட்ட ஆரம்ப கால புத்த நூல்களில் இந்நிகழ்வை பற்றிய குறிப்பானது பல்வேறு பதிப்புகளாக உள்ளது.[y] அனலயோவால் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து முதன்மையான பதிப்புகளின் படியும், புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமி தனக்கும், சில பிற பெண்களுக்கும் புத்த சங்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுதலை வைத்த போது ஆரம்பத்தில் புத்தரால் அது நிராகரிக்கப்பட்டது. மகாபிரஜாபதியும், அவரது ஆதரவாளர்களும் பிறகு தமது முடியை மழித்து விட்டு, அங்கிகளை அணிந்து கொண்டு புத்தரை அவரது பயணங்களின் போது பின் தொடர ஆரம்பித்தனர். ஆண் மற்றும் பெண் துறவிகளின் புதிய அமைப்புக்கு இடையிலான உறவு முறையை கவனக் குவியலாகக் கொண்ட கருதம்மத்தின் (சமக்கிருதம்: குருதர்மம்) எட்டு நிபந்தனைகளை மகாபிரஜாபதி ஒப்புக்கொண்டால் அவரை பிக்குணி அமைப்பில் இணைத்துக் கொள்ளலாம் என ஆனந்தர் இறுதியாக புத்தரை இணங்கச் செய்தார்.[234] அனலயோவின் ஆய்வுப் படி, அனைத்து பதிப்புகளிலும் பொதுவாக காணப்படும், ஆனந்தரால் புத்தரை இணங்கச் செய்ய பயன்படுத்தப்பட்ட வாதமானது விழிப்படைதலின் அனைத்து நிலைகளையும் அடைய ஆண்களைப் போன்ற அதே ஆற்றலை பெண்களும் கொண்டுள்ளனர் என்பதாகும்.[235] பல்வேறு முரண்பாடுகள் காரணமாக எட்டு கருதம்மங்களை அவற்றின் தற்போதைய வடிவில் ஏற்றுக் கொள்வதை சில நவீன அறிஞர்கள் கேள்விக்கு உள்ளாகின்றனர் என்பதையும் அனலயோ குறிப்பிட்டுள்ளார். தற்போதைய எட்டு கருதம்மங்களின் பட்டியலின் வரலாற்று தன்மையானது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்பதை அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இவை ஒருவேளை புத்தரால் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இருக்கலாம் என்றும் கருதுகிறார்.[236][237] ஓர் அலைந்து திரியும் சிரமண வாழ்வானது, தம் ஆண் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பின் கீழ் இல்லாத பெண்களுக்கு, பாலியல் தாக்குதல் மற்றும் கடத்தப்படுதல் போன்ற ஆபத்துகளை விளைவிக்கலாம் என்ற காரணமே பெண்களை சங்கத்தில் இணைத்துக் கொள்ள புத்தருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியதாக பல்வேறு பத்திகள் புலப்படுத்துகின்றன என அனலயோ குறிப்பிடுகிறார். இதன் காரணமாக, "ஓர் உபாசக பெண் தன் ஆண் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கும் சாத்தியப்படக் கூடிய பாதுகாப்பை முடிந்த வரை ஒத்த, உறவு முறையை ஆண் பிக்குகளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட பிக்குணி அமைப்பில் உள்ளவர்களும் பெற வேண்டும்" என்பதை உறுதிப்படுத்தும் ஒரு வழியாக கருதம்ம வழி முறைகள் இருந்திருக்கலாம் என கருதபப்டுகிறது.[238] பிந்தைய ஆண்டுகள்![]() யோவான் இசுடிராங் என்ற அமெரிக்க வரலாற்றாளரின் கூற்றுப் படி, தான் போதித்த ஆண்டுகளில் முதல் 20 ஆண்டுகளுக்கு பிறகு புத்தர் கோசல இராச்சியத்தின் தலைநகரான சிரவஸ்தியில் மெதுவாக வாழ ஆரம்பித்தார் என்று தோன்றுகிறது. தன்னுடைய பிந்தைய ஆண்டுகளில் பெரும்பாலானவற்றை இந்த நகரத்தில் கழித்தார்.[232] சங்கம்[u] அதன் அளவில் வளர்ந்த போது, சங்கத்திற்கான ஒரு தரப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் அமைப்பிற்கான தேவையானது ஏற்பட்டது. சங்கத்திற்கான ஒரு குறிப்பிட்ட அளவிலான வழிமுறைகளை புத்தர் உருவாக்கினார் என்றும் தோன்றுகிறது. "பிரதிமோச்சம்" என்று அழைக்கப்படும் பல்வேறு நூல்களில் இவை பாதுகாக்கப்பட்டுள்ளன. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புத்த சமூகத்தால் இந்நூல்கள் போதிக்கப்பட்டன. பொதுவான அற நெறி விதிமுறைகள், மேலும் கிண்ணங்கள் மற்றும் அங்கிகள் போன்ற துறவற வாழ்வுக்கு இன்றியமையாத பொருட்கள் குறித்துமான விதிகளை பிரதிமோச்சம் உள்ளடக்கியிருந்தது.[239] இவரது பிந்தைய ஆண்டுகளில் புத்தரின் புகழானது அதிகரித்தது. சாக்கியர்களின் புதிய அரசவை மண்டபத்தின் திறப்பு விழா (மச்சிம நிகயம் 53) மற்றும் இளவரசர் போதியின் ஒரு புதிய அரண்மனை திறப்பு (மச்சிம நிகயம் 85) போன்ற முக்கியமான அரச குல நிகழ்வுகளுக்கு இவர் அழைக்கப்பட்டார்.[240] புத்தரின் முதுமை காலத்தின் போது எவ்வாறு மகத இராச்சியத்தின் அரியணையானது அஜாதசத்ரு எனும் ஒரு புதிய மன்னனால் நேர்மையற்ற முறையில் கைப்பற்றப்பட்டது என்பதையும் ஆரம்ப கால நூல்கள் பேசுகின்றன. அஜாதசத்ரு தனது தந்தை பிம்பிசாரரை பதவியில் இருந்து தூக்கி எறிந்து ஆட்சிக்கு வந்தார். சமன்னபால சுத்தா நூலின் படி, புதிய மன்னர் வேறுபட்ட துறவி ஆசிரியரிடம் பேசினார். இறுதியாக புத்தரிடம் தஞ்சமடைந்தார்.[241] எனினும், சைன நூல்களும் அஜாசத்ரு தங்களது நம்பிக்கைக்கு ஆதரவளித்தார் என்று குறிப்பிடுகின்றன. அஜாதசத்ரு புத்தரின் சங்கத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், வேறுபட்ட சமய குழுக்களுக்கும் ஆதரவளித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[242] புத்தர் பயணித்து, போதிப்பதை தொடர்ந்த போது பிற சிரமண பிரிவுகளின் உறுப்பினர்களுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதில் சில நபர்களை புத்தர் சந்தித்தார் என்றும், அவர்களது கொள்கைகளின் நிறை குறைகளை சுட்டிக் காட்டினார் என்றும் ஆரம்ப கால நூல்களில் சான்றுகள் காணப்படுகின்றன. சமன்னபால சுத்தா நூலானது இத்தகைய ஆறு சமயப் பிரிவுகளை அடையாளப்படுத்துகிறது.[243] ஆரம்ப கால நூல்கள் முதுமை காலத்தில் புத்தர் எவ்வாறு முதுகு வலியுடன் இருந்தார் என்பதையும் குறிப்பிடுகின்றன. தனது உடல் தற்போது மேற்கொண்ட ஓய்வை வேண்டியதால் தன்னுடைய முதன்மையான சீடர்களிடம் போதிக்கும் பணியை அளித்தார் என்று பல்வேறு நூல்கள் குறிப்பிடுகின்றன.[244] எனினும், புத்தர் தானும் தொடர்ந்து தன்னுடைய முதுமைக் காலம் வரை போதித்தார். புத்தரின் முதுமைக் காலத்தின் போது மிகுந்த இடர்பாடு ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாக தேவதத்தன் பிரிந்து சென்றது திகழ்ந்தது. புத்தரின் மைத்துனனான தேவதத்தன் புத்த அமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற எவ்வாறு முயற்சித்தான் என்று ஆரம்ப கால நூல்கள் பேசுகின்றன. பிறகு பல்வேறு புத்த துறவிகளுடன் சங்கத்திலிருந்து பிரிந்து ஓர் எதிர்ப் பிரிவை உருவாக்கினான். இந்த பிரிவானது மன்னன் அஜாதசத்ருவால் ஆதரவளிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.[245][246] பாளி நூல்கள் புத்தரை கொல்லவும் தேவதத்தன் திட்டமிட்டான் என்பதை குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன.[247] தன்னுடைய இரண்டு முதன்மையான சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோரை பிரிந்து சென்ற சமூகத்துடன் பேசுவதற்காக புத்தர் அனுப்பியதையும் குறிப்பிடுகின்றன. தேவதத்தனுடன் சென்ற துறவிகளை இணங்க வைத்து திரும்ப அழைத்து வருவதற்காக இரு சீடர்களும் சென்றனர்.[248] அனைத்து முதன்மையான ஆரம்ப கால பௌத்த வினய நூல்களும் புத்த சமூகத்தை பிரிக்க முயற்சித்த ஒரு பிரிவினைவாத நபராக தேவதத்தனை குறிப்பிடுகின்றன. ஆனால், புத்தருடன் அவன் எந்தெந்த விஷயங்களில் முரண்பட்டான் என்பது குறித்து இந்து நூல்களுக்கிடையே வேறுபாடு உள்ளது. இசுதவிர நிகய நூல்கள் "ஐந்து கருத்துகள்" எனப்படும் மட்டு மீறிய துறவற பழக்கங்களின் மீது பொதுவாக பிரச்சினைக்குக் காரணம் என கவனம் கொள்கின்றன. மகாசங்கிக வினயமானது அதே நேரத்தில் ஒரு மிகுந்த விரிவான அனைத்தையும் உள்ளடக்கிய முரண்பாட்டை பற்றி பேசுகிறது. புத்தரின் போதனைகள் மற்றும் மேலும் துறவற ஒழுங்குகளையும் தேவதத்தன் மாற்றியதாக குறிப்பிடுகின்றன.[249] தேவதத்தன் பிரிந்த இதே நேரத்தின் போது அஜாதசத்ருவால் தலைமை தாங்கப்பட்ட மகத இராச்சியத்திற்கும், அவரை விட வயது முதியவரான மன்னர் பசேனதியால் தலைமை தாங்கப்பட்ட கோசல இராச்சியத்திற்கும் இடையில் ஒரு போர் ஏற்பட்டது.[250] அஜாதசத்ரு இதில் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வுகள் புத்தருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.[251] கடைசி நாட்களும், பரிநிர்வாணமும்![]() புத்தரின் கடைசி நாட்கள், இறப்பு மற்றும் இவரது இறப்பை தொடர்ந்த நிகழ்வுகளின் முதன்மையான விளக்கமானது மகாபரிநிப்பாண சுத்தா (திக நிகயம் 16) மற்றும் அதன் பல்வேறு சமக்கிருத, சீன மற்றும் திபெத்திய மொழி இணை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.[252] அனலயோவின் கூற்றுப் படி, இதில் சீன நூலான திர்க ஆகமம் 2, "மகாபரிநிர்வாண சூத்திரத்தின் சமக்கிருத துணுக்குகள்" மற்றும் "சீன மொழியில் தனி மொழிபெயர்ப்பாக பாதுகாக்கப்பட்டுள்ள மூன்று கருத்தாடல்களும்" இதில் அடங்கும்.[253] மகாபரிநிப்பாண சுத்தா நூலானது போர் காலத்தின் போது புத்தரின் கடைசி ஆண்டை குறிப்பிடுகிறது. வஜ்ஜி நாடு மீது போர் தொடுக்க அஜாதசத்ரு முடிவு எடுத்ததுடன் இது தொடங்குகிறது. புத்தரிடம் ஆலோசனை கேட்பதற்காக ஒரு மந்திரியை அஜாதசத்ரு அனுப்புவதற்கு இது இட்டு சென்றது.[254] ஏழு நியதிகளை தொடர்ந்து செய்யும் வரையில் வஜ்ஜி நாட்டவர் செழிப்படைந்து வருவார்கள் என்ற பதிலை புத்தர் கூறுகிறார். பிறகு, இந்த ஏழு நியதிகளை புத்த சங்கத்தில் பின்பற்றுமாறு கூறுகிறார். புத்த சங்கத்தின்[u] எதிர் கால நலன் குறித்து புத்தர் அக்கறை கொண்டார் என்பதை இது காட்டுகிறது. "வாடிக்கையாக அடிக்கடி நடைபெறும் கூட்டங்கள், ஒத்திசைவுடன் நடைபெறும் சந்திப்பு, பயிற்சியின் நியதிகளை மாற்றாமல் இருப்பது, தங்களுக்கு முன்னர் சங்கத்தில் இணைந்த அனுபவசாலிகளுக்கு மரியாதை செலுத்துதல், உலக ஆசைகளுக்கு இரையாகாமல் இருத்தல், காட்டில் துறவியாக வாழும் முறைக்கு உண்மையாக இருத்தல் மற்றும் தங்களது சொந்த விழிப்புணர்வை தக்க வைத்துக் கொள்ளுதல்" ஆகிய நியதிகளை கடைபிடிக்கும் வரையில் சங்கமானது தொடர்ந்து செழிப்படையும் என்று புத்தர் கூறினார். சங்கத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான அறநெறி நடத்தைகளின் பட்டியலையும் புத்தர் மேலும் அளித்தார்.[255] புத்தரின் இறப்பிற்கு சற்று முன்னர் புத்தரின் இரண்டு முதன்மையான சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோர் இறந்தனர் என்பதை ஆரம்ப கால நூல்கள் குறிப்பிடுகின்றன.[256] மகாபரிநிப்பாண சுத்தா நூலானது தன்னுடைய வாழ்வின் கடைசி மாதங்களின் போது புத்தர் எவ்வாறு உடல் நலம் குன்றியதை உணர்ந்தார் என்று குறிப்பிடுகிறது. ஆனால், தொடக்கத்தில் இவர் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டார். தனக்குப் பிந்தைய தலைவராக யாரையும் கூற இயலாது என புத்தர் கூறியதாகவும் இது குறிப்பிடுகிறது. ஆனந்தர் இதற்காக வேண்டிய போது புத்தர் கூறிய பதிலாக மகாபரிநிப்பாண சுத்தா நூலானது பின்வருவனவற்றை பதிவிட்டுள்ளது:[257]
![]() ![]() பயணம் செய்து சில மேற்கொண்டவர்களுக்கு போதித்ததற்கு பிறகு புத்தர் தனது கடைசி உணவை உண்டார். சுந்தா கம்மரபுத்தா என்று பெயருடைய ஓர் இரும்பு கொல்லரிடமிருந்து யாசகமாக இந்த உணவை இவர் பெற்றார். இதன் பிறகு இவருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தன்னுடைய இறப்பிற்கு சுந்தாவின் இடத்தில் தான் உண்ட உணவு காரணமல்ல என்று அவருக்கு கூறுமாறு ஆனந்தரிடம் புத்தர் கூறினார். புத்தருக்கு கடைசி உணவாக இது அமைந்ததன் காரணமாக இந்த உணவானது உயர் நிலையை அடைந்தது என்றும் கூறுமாறு கூறினார்.[258] பிக்கு மெத்தனந்தோ மற்றும் செருமானிய இந்தியவியலாளர் ஆசுகர் வான் இனுபெர் ஆகியோர் உணவு விடமாக மாறியதால் அல்லாமல் வயது முதிர்வின் ஓர் அறிகுறியான மிகையான குடலுரிசார் குருதிக் குழாய் திசு இறப்பால் புத்தர் இறந்தார் என்று வாதிடுகின்றனர்.[259][260] புத்தரின் கடைசி உணவின் துல்லியமான உணவு பொருட்கள் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கு காரணம் வேறுபட்ட புனித நூல் மரபுகள் மற்றும் சில முக்கிய வார்த்தைகளின் மொழிபெயர்ப்பில் உள்ள தெளிவற்ற தன்மை ஆகியவை காரணமாகும். தேரவாத பௌத்த மரபானது புத்தருக்கு ஒரு வகை பன்றி இறைச்சி கொடுக்கப்பட்டது என்று பொதுவாக நம்புகிறது. அதே நேரத்தில், மகாயான பௌத்த மரபானது புத்தர் ஒரு வகை பூங்கிழங்கு அல்லது பிற காளான்களை உண்டார் என்று நம்புகிறது. பௌத்த சைவம் மற்றும், பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கான நியதிகள் ஆகியவற்றின் மீதான வேறுபட்ட மரபு வழி பார்வைகளை இவை பிரதிபலிக்கின்றன.[261] நவீன அறிஞர்கள் கூட இந்த நிகழ்வில் முரண்படுகின்றனர். இது பன்றி இறைச்சியாகவோ அல்லது பன்றிகள் விரும்பி உண்ணும் ஒரு வகை தாவரமாகவோ அல்லது காளானாகவோ இது இருந்திருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.[z] எது எவ்வாறு இருந்தாலும், கடைசி உணவை குறிப்பிடும் எந்த ஓர் ஆதாரங்களும் புத்தரின் உடல் நலக்குறைவிற்கு இந்த கடைசி உணவு தான் காரணம் என குறிப்பிடவில்லை.[262] மகாபரிநிப்பாண சுத்தா நூலின் படி, சுந்தாவுடனான உணவிற்கு பிறகு புத்தர் மிகவும் பலவீனமானதால் புத்தரும், அவரது சீடர்களும் பயணத்தை நிறுத்தினர். இதனால் குசி நகரத்தில் அவர்கள் தங்க வேண்டியிருந்தது. அங்கு குங்கிலிய மரங்களின் ஒரு தோப்பில் புத்தர் தங்குவதற்கு ஆனந்தர் ஓர் இடத்தை உருவாக்கினார்.[263][264] சங்கத்தில் உள்ள அனைவருக்கும் தான் கடைசி நிர்வாணத்திற்குச் செல்வேன் என்று அறிவித்ததற்குப் பிறகு, சங்கத்திற்கு ஒரு கடைசி பிக்குவை தானாகவே புத்தர் இணைத்தார். இந்த பிக்குவின் பெயர் சுபத்தா ஆகும்.[263] பிறகு சங்கத்திற்கான தனது கடைசி அறிவுரையாக, தன்னுடைய இறப்பிற்கு பிறகு தம்மமும், வினயமும் அவர்களுக்கு ஆசிரியராக இருக்கும் என்று புத்தர் மீண்டும் கூறினார். தன்னுடைய போதனை குறித்து யாருக்கேனும் சந்தேகங்கள் இருக்கின்றனவா என்று கேட்டார். ஆனால், ஒருவரும் சந்தேகம் உள்ளதாக கூறவில்லை.[265] புத்தரின் கடைசி வார்த்தைகளாக "அனைத்து சங்கரங்களும் (ஒன்றாக இணைக்கப்பட்ட அமைப்புகள்) படிப்படியாக அழிவுறுகின்றன. தளரா ஊக்கத்துடன் (அப்பமதம்) உங்களுடைய இலக்குகளுக்காக கடும் முயற்சி செய்யுங்கள்" (பாளி: 'வயதம்ம சங்கர அப்பமதேன சம்பதேதா') என்றார் என்று குறிப்பிடப்படுகிறது.[266][267] பிறகு புத்தர் தனது கடைசி தியானத்தில் மூழ்கினார். பிறகு இறந்தார். பரிநிர்வாணம் என்று அறியப்படும் நிலையை அடைந்தார். பரிநிர்வாணம் (உடலின் இறப்பிற்கு பிறகு பிறவி சுழற்சி மற்றும் துன்பத்தின் முடிவை அடைவதை இது குறிக்கிறது) என்பதன் பொருள் கடைசி நிர்வாணம் என்பதாகும். நான்கு தியான நிலைகளுக்குள் அடுத்தடுத்து நுழைந்ததற்கு பிறகு, நான்கு பொருட்படுத்த வேண்டியதல்லாத அடைதல்களையும், இறுதியாக நிரோத-சம்பத்தி என்று அறியப்படும் தியான நிலைக்குச் சென்று, தன்னுடைய இறப்பின் தருணத்தின் போது நான்காவது தியானத்திற்கு மீண்டும் வந்தார் என்று மகாபரிநிப்பாண சுத்தாவானது குறிப்பிடுகிறது.[268][264] ![]() ![]() மறைவிற்கு பிந்தைய நிகழ்வுகள்மகாபரிநிப்பாண சுத்தாவின் படி புத்தரின் இறப்பை தொடர்ந்து வந்த நாட்களை குசி நகரின் மல்லர்கள் இவரது உடலுக்கு பூக்கள், இசை மீட்டுதல் மற்றும் வாசனை திரவியங்களால் மரியாதை செலுத்தினர்.[269] உடலை எரியூட்டுவதற்கு முன்னர் மதிப்பிற்குரிய மூத்தவரான மகாகாசியபர் வருகை புரிந்து தனது மரியாதையை செலுத்தும் வரை சங்கமானது[u] காத்திருந்தது.[270] பிறகு புத்தரின் உடலானது எரியூட்டப்பட்டது. இவரது எலும்புகள் உள்ளிட்டவை இவரின் வாழ்வுடன் தொடர்புடைய பொருட்களாக பாதுகாக்கப்பட்டன. மகதம், சாக்கியம் மற்றும் கோலியம் போன்ற பல்வேறு வட இந்திய இராச்சியங்களுக்கு மத்தியில் இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.[271] தாது கோபுரங்கள் என்று அழைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அல்லது மேடுகளில் இந்த பொருட்கள் வைக்கப்பட்டன. அந்நேரத்தில் இருந்த ஒரு பொதுவான இறுதிச் சடங்கு பழக்க வழக்கமாக இது இருந்தது. நூற்றாண்டுகள் கழித்து இவை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, மௌரியப் பேரரசு முழுவதும் பல புதிய தூபிக்களில் அசோகரால் இவை புனிதப்படுத்தப்பட்டன.[272][273] புத்த மதம் பரவிய நேரத்தில் புத்தருடன் தொடர்புடைய பொருட்கள் என்று கூறப்பட்டப் பொருட்களின் வரலாற்றை சுற்றிலும் பல்வேறு இயற்கைக்கு மீறிய புராணக் கதைகள் சுற்றியிருந்தன. இதை வைத்திருந்த ஆட்சியாளர்களின் ஆட்சியின் முறைமையை அதிகமாக்கின. பல்வேறு புத்த நூல்களின் படி புத்தரின் இறப்பிற்கு பிறகு இவரது போதனைகளை சேகரித்து, ஒப்புவித்து, மனனம் செய்வதற்காக புத்த மாநாடுகள் சீக்கிரமே நடத்தப்பட்டன. சபையின் தலைவராக சங்கத்தால் மகாகாசியபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், முதல் சபையின் வரலாற்றுத் தன்மை குறித்து மரபு வழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நவீன அறிஞர்கள் விவாதத்துக்கு உள்ளாக்குகின்றனர்.[274] போதனைகளும், பார்வைகளும்வரலாற்றுத் தன்மைதொடக்க கால போதனைகள் மீதான அறிஞர்களின் பார்வை![]() பௌத்தத்தின் மிகப் பழமையான மையப் பகுதி குறித்த தகவல்களைப் பெறும் ஒரு வழிமுறையானது சர்வாஸ்திவாத பௌத்தம், மூலசர்வாஸ்திவாதம், மகிசசகம், தர்மகுப்தகம்[275][276] மற்றும் சீன ஆகமங்கள் ஆகியவற்றின் எஞ்சிய பகுதிகள் போன்ற பிற நூல்களுடன் பாளி திருமுறையின் மிகப் பழமையான வடிவங்களை ஒப்பிடுவதாகும்.[277] இந்த ஆதாரங்களின் நம்பகத் தன்மை மற்றும் மிகப் பழமையான போதனைகளின் ஒரு மையப் பகுதியை வெளிக்கொண்டு வரும் சாத்தியம் ஆகியவை விவாதத்திற்குரிய ஒரு பொருளாக உள்ளன.[278][279][280][281] கல்வியாளர் லம்பெர்ட் இசுமிதௌசெனின் கூற்றுப்படி நிகயங்களில் உள்ள போதனைகளின் மெய்ம்மைத் தன்மை குறித்து நவீன பௌத்த அறிஞர்கள் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளனர்:[282]
ரிச்சர்ட் கோம்ப்ரிச், அகிரா இரகவா, அலெக்சாந்தர் வைன்னே மற்றும் ஏ. கே. வார்டர் போன்ற அறிஞர்கள் இந்த தொடக்க கால பௌத்த நூல்கள் புத்தருக்கு சாத்தியமான வகையில் தடயமிடப்படும் போதனைகளைக் கொண்டிருக்கலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.[281][287][161] தொடக்க கால நூல்களின் உள்ளடக்கமானது "அத்தகைய புதுமைத் தன்மை, சிந்தனைத் திறம், உயர் சிறப்பு மற்றும்-மிக முக்கியமாக-தெளிவையும் எளிமையையும் கொண்டுள்ளதால்...இது பலரால் தொகுக்கப்பட்ட ஒரு நூல் என்று காண்பது மிக கடினமானதாக உள்ளது" என ரிச்சர்ட் கோம்ப்ரிச் வாதிடுகிறார். எனவே, இவை ஒரே மேதையின் வேலைப்பாடுகள் தான் என அவர் முடிக்கிறார்.[288] பேதுரு ஆர்வேயும் கூட "இவரின் [புத்தரின்] போதனைகளிலிருந்து தான்" பாளி திருமுறையின் பெரும்பாலான உள்ளடக்கங்கள் "உறுதியாகத் தருவிக்கப்பட்டிருக்க வேண்டும்" என உடன்படுகிறார்.[289] இதே போல ஏ. கே. வார்டர் "இது [தொடக்க கால பள்ளிகளின் பகிர்ந்து கொள்ளப்பட்ட போதனைகள்] புத்தர் மற்றும் அவரது உடனடி பின்பற்றாளர்களைத் தவிர்த்து பிறரால் உருவாக்கப்பட்டது என பரிந்துரைக்க எந்த ஓர் ஆதாரமும் இல்லை" என்று எழுதியுள்ளார்.[283] அலெக்சாந்தர் வைன்னேயின் கூற்றுப்படி, "தொடக்க கால பௌத்த இலக்கியத்தின் உட்புறச் சான்றானது இதன் வரலாற்று மெய்ம்மைத் தன்மையை நிரூபிப்பதாகக்" குறிப்பிடுகிறார்.[290] தொடக்க கால பௌத்த நூல்கள் வரலாற்று ரீதியிலான புத்தரின் போதனைகளைப் பிரதிபலிக்கின்றன என்ற மிகவும் நேர்மறையான பார்வையுடன் பௌத்த ஆய்வுகள் சார்ந்த பிற அறிஞர்கள் உடன்படவில்லை. தொடக்க கால நூல்களில் உள்ள சில போதனைகள் உண்மையில் புத்தரின் போதனைகள் என்றும், ஆனால் பிற இல்லை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். புத்தர் ஆற்றியதாகக் குறிப்பிடப்படும் பல சமய சொற்பொழிவுகள் பிந்தைய ஆசிரியர்களின் வேலைப்பாடுகள் என்றும், எனவே புத்தரின் உண்மையான செய்தி குறித்து பெருமளவு சந்தேகம் உள்ளதாக ஐன்ஸ்லே எம்பிரீ குறிப்பிடுகிறார்.[291] இவற்றில் ஒன்றுக்கொன்று ஒவ்வாத தன்மைகள் உள்ளதாகவும், இத்தன்மைகளைத் தீர்ப்பதற்கு பிற வழிமுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தில்மன் வெட்டர் குறிப்பிடுகிறார்.[275][ad] மேலும் இவர், புத்தரின் போதனைகளின் தொடக்க கால மையப் பகுதிகளானவை தியானம் எனும் பழக்க வழக்கங்களே என்றும்,[294][ae] ஆனால் "விடுதலை அளிக்கும் உட்புற திறம்" எனும் கருத்துருவானது பௌத்த மரபின் முக்கிய அம்சமாக பிந்தைய காலத்தில் மட்டுமே உருவானது என்று குறிப்பிடுகிறார். நான்கு உன்னத உண்மைகள், உன்னதமான எண்வகை மார்க்கங்கள் மற்றும் சார்புத் தோற்றம் ஆகிய பௌத்தத்திற்கு இன்றியமையாததாக பொதுவாகக் கருதப்படும் போதனைகளானவை இந்த "விடுதலை அளிக்கும் உட்புற திறத்திற்கு" விளக்கமளிக்கும் உருவரைச் சட்டத்தின் பகுதியை அமைக்கும் பிந்தைய உருவாக்கங்களே என்ற கருத்தை முன் வைக்கிறார்.[296] லம்பெர்ட் இசுமிதௌசென் இதே போல் "விடுதலை அளிக்கும் உட்புறத் திறத்தின்" ஒரு பகுதியாகக் குறிப்பிடப்படும் நான்கு உன்னதமான உண்மைகளை நான்கு தியானங்களைக் கற்றறிந்ததற்குப் பிறகு அடையலாம் என்பது பிந்தைய சேர்ப்பு என்று குறிப்பிடுகிறார்.[292] யோகன்னசு புரோங்கோர்சுதுவும் கூட நான்கு உண்மைகளானவை தொடக்க கால பௌத்தத்தில் உருவாக்கப்பட்டதாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். ஆனால், தொடக்க கால பௌத்தத்தில் "விடுதலை அளிக்கும் உட்புற திறத்தின்" விளக்கமாக இது இருக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.[297] பிரித்தானிய மார்க்சிய மற்றும் பௌத்த அறிஞரான எட்வர்டு கோன்சே புத்தரின் உண்மையான போதனைகளை மீண்டும் கட்டமைக்கும் ஐரோப்பிய அறிஞர்களின் முயற்சிகளானவை "அனைத்தும் வெறும் ஊகங்களாக மட்டுமே" உள்ளன என்று வாதிடுகிறார்.[298] மைய போதனைகள்![]() ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான போதனைகளும், பழக்கவழக்கங்களும் பௌத்தத்திற்கு இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன. இதில் சம்யோஜனம் (மனப் பிணைப்புகள், சங்கிலிகள் அல்லது கட்டுப்பாட்டெல்லைகள்), அதாவது, சங்கராக்கள் ("உருவாக்கங்கள்"), மூன்று நஞ்சுகள், மற்றும் பிறவிச் சுழற்சி எனும் சம்சாராவை நீடிக்கச் செய்யும் அசவாக்கள் ("மனக் கறைகள், வந்து குவிதல், மனத் தூய்மை கேடு") உள்ளிட்ட கிலேசாக்கள் (மனக் குழப்ப நிலைகள்); அறிவுத் தொடர்பிலிருந்து உணர்வு நிலைக்கான செயல்முறையை விளக்கும், சம்சாராவுடனான இந்த அடிமைத் தனத்திற்கு வழி வகுக்கும், ஆறு அறிவு அடித்தளங்கள் மற்றும் ஐந்து ஒருங்கிணைப்புகள்; இந்தச் செயல்முறை மற்றும் அதன் தலை கீழ் மாற்றத்தை விளக்கமாகக் குறிப்பிடும் சார்புத் தோற்றம்; நான்கு உயர்ந்த உண்மைகள் மற்றும் உன்னதமான எண்வகை மார்க்கங்களில் முந்தைய மரபு வழியில் சுருக்கமாகக் குறிப்பிடப்படும், இந்த அடிமைத் தனத்திலிருந்து எவ்வாறு விடுபட முடியும் என்பதை விளக்கும் நடு வழி ஆகியவை அடங்கும். என். ரோஸ் ரீட்டின் கூற்றுப்படி, தேரவாத பாளி நூல்களும், மகாசம்கிக பள்ளியின் சலிஸ்தம்ப சூத்திரமும் இந்த அடிப்படை போதனைகளையும், பழக்க வழக்கங்களையும் பகிர்கின்றன.[299] தேரவாத மச்சிம நிகயமும், சர்வாஸ்திவாத பௌத்தத்தின் மத்தியம ஆகமமும் பெரும்பாலும் ஒரே முதன்மையான கொள்கைகளையே கொண்டுள்ளதாக பிக்கு அனாலாயோ குறிப்பிடுகிறார்.[300] இதே போல ரிச்சர்ட் சாலமன் காந்தார கையெழுத்துப் பிரதிகளில் காணப்படும் கொள்கைகளானவை "தற்காலத்தில் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தேரவாத பள்ளியில் எஞ்சியுள்ள மகாயானம்-சாராத பௌத்தத்துடன் ஒத்துப் போகின்றன. ஆனால், பண்டைக் காலங்களில் தேரவாதப் பள்ளியானது 18 தனித்தனி பள்ளிகளால் பிரநிதித்துவப்படுத்தப்பட்டது" என்று குறிப்பிடுகிறார்.[301] சம்சாராஅனைத்து உயிர்களும் சம்யோஜனத்துடன் (மனப் பிணைப்புகள், சங்கிலிகள் அல்லது கட்டுப்பாட்டெல்லைகள்) மாற்றமடையாத வகையில் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. சம்யோஜனம் அதாவது, சங்கராக்கள் ("உருவாக்கங்கள்"), மூன்று நஞ்சுகள், மற்றும் பிறவிச் சுழற்சி எனும் சம்சாராவை நீடிக்கச் செய்யும் அசவாக்கள் ("மனக் கறைகள், வந்து குவிதல், மனத் தூய்மை கேடு") உள்ளிட்ட கிலேசாக்கள் (மனக் குழப்ப நிலைகள்) இதில் அடங்கும். சம்சாரா என்பது பிறவிச் சுழற்சி ஆகும். பாளி சுத்தாக்களின் படி "இந்த சம்சாராவானது கண்டுபிடிக்கக் கூடிய தொடக்கத்தைக் கொண்டிருப்பதில்லை. அறியாமையால் தடங்கல் பெற்று மற்றும் ஆசையால் சங்கிலியிடப்பட்டு அலையும் உயிர்களைக் பகுத்தறிய இயலாதது முதல் குறிப்பு ஆகும்" என்று புத்தர் குறிப்பிடுகிறார்.[302] துதியலோகதம்மசுத்தா சுத்தாவில் (அங்குத்தர நிகயம் 8:6) எவ்வாறு "எட்டு உலகளாவிய காற்றுகளானவை" உலகைத் தொடர்ந்து சுற்ற வைக்கின்றன [...] பெறுதல் மற்றும் இழத்தல், புகழ் மற்றும் அவமானம், புகழ்ச்சி மற்றும் குறை கூறுதல், மகிழ்ச்சி மற்றும் வலி" என புத்தர் விளக்குகிறார். பிறகு ஓர் உயர்குடி மனிதனுக்கும், கற்றறியாத உலகப் பிரஜைக்கும் இடையிலான வேற்பாடு என்ன என்பதை விளக்குகிறார். ஓர் உயர்குடி மனிதன் சிந்திக்கிறான் மற்றும் இந்த சூழ்நிலைகளின் நிலையற்ற தன்மையைப் புரிந்து கொள்கிறான்.[303] இந்த பிறவிச் சுழற்சியானது துக்கத்தை இயற்பபண்பாகக் கொண்டுள்ளது.[304] துக்கமானது பொதுவாக "துன்புறுதல்" என்று குறிப்பிடப்படுகிறது. துக்கம் என்பது மிகப் பொருத்தமாக "திருப்தியற்ற தன்மை" அல்லது "மன அமைதியின்மை" என்று குறிப்பிடப்படுகிறது. சிந்திக்காமல் கொடுக்கப்படும் பதில்கள் மற்றும் வழக்கமான சுயநலம் ஆகியவற்றால் நடத்தப்படும் ஒரு வாழ்க்கையுடன் வரும் திருப்தியற்ற தன்மை மற்றும் மன அமைதியின்மை,[305][306] மற்றும் நிலையற்ற பொருட்களில் இருந்து நீடித்த மகிழ்ச்சியை எதிர்பார்க்கும் திருப்தியற்ற தன்மையானது சார்ந்திருக்க இயலாததாகும்.[307] ஒரே உன்னதமான குறிக்கோளாக இந்த சுழற்சியிலிருந்து விடுபடுவதே இருக்க வேண்டும்.[308] சம்சாரா மீது கர்மாவானது அதிகாரம் செலுத்துகிறது. தனி நபர் சாராத ஒரு இயற்கை நியதி கர்மாவாகும். எவ்வாறு சில விதைகள் சில தாவரங்கள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்கின்றன என்பதை ஒத்ததாக இது உள்ளது.[309] கர்மாவுடன் சேர்த்து ஏராளமான இயற்பியல் மற்றும் சூழ்நிலைக் காரணங்களையும் புத்தர் பட்டியலிடுவதைப் போல ஒருவரின் சூழ்நிலைகளுக்கு கர்மா மட்டுமே காரணம் கிடையாது.[310] புத்தர் போதித்த கர்மாவானது சைனர்கள் மற்றும் பிராமணர்களுடைய கர்மாவில் இருந்து வேறுபட்டிருந்தது. இதில் இவரது பார்வையின் படி கர்மா என்பது முதன்மையாக உள் நோக்கம் (முதன்மையாக இயல்பான செயல் அல்லது சடங்கு செயல்களுக்கு மாறானதாக) ஆகும்.[305] "கர்மா என்று சொல்லும் போது நான் உள் நோக்கத்தைக் குறிப்பிடுகிறேன்" என புத்தர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது.[311] கர்மா மீதான புத்தரின் பார்வையை ரிச்சர்ட் கோம்பிரிச் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்: "நேற்மறையோ அல்லது எதிர்மறையோ அனைத்து எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்கள் தங்களது நன்னெறி மதிப்பை அவற்றுக்குப் பின்னால் உள்ள அவற்றின் உள் நோக்கத்திலிருந்து தருவித்துக் கொள்கின்றன".[312] ஆறு அறிவு அடித்தளங்களும், ஐந்து ஒருங்கிணைப்புகளும்அயதனா (ஆறு அறிவு அடித்தளங்கள்) மற்றும் ஐந்து கந்தாக்கள் (ஒருங்கிணைப்புகள்) ஆகியவை எவ்வாறு ஐம்புலன்களால் ஏற்படும் தொடர்புகளானவை பிணைப்பு மற்றும் துக்கத்திற்கு வழி வகுக்கின்றன என்று விளக்குகின்றன. கண் மற்றும் பார்வை, காது மற்றும் சத்தம், மூக்கு மற்றும் மணம், நாக்கு மற்றும் ருசி, உடல் மற்றும் தொடுதல், மற்றும் மனம் மற்றும் எண்ணங்கள் ஆகியவையே இந்த ஆறு அறிவு அடித்தளங்கள் ஆகும். இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஓர் உள்ளீட்டை உருவாகின்றன. இந்த உள்ளீட்டிலிருந்து தான் "அனைத்தும்" எனப்படும் நமது உலகம் அல்லது வாழ்வின் மெய்ம்மை நிலையானது உருவாக்கப்படுகிறது. இந்த செயல் முறையானது ஐந்து கந்தாக்கள், "ஒருங்கிணைப்புகள்", "குழுக்கள்", "குவியல்கள்" வழியாக நடைபெறுகிறது. இயற்பியல் மற்றும் மன செயல் முறைகளின் ஐந்து குழுக்கள் இவை ஆகும்.[313][314] இவை வடிவம் (அல்லது பொருள்சார் உருவம், உருப்பதிப்பு) (ரூபம்), தூண்டுணர்ச்சிகள் (அல்லது உணர்ச்சிகள், வடிவத்திலிருந்து பெறப்படுபவை) (வேதனா), உணர்ந்தறியும் ஆற்றல் (சம்ஜனா), மன செயல்பாடு அல்லது உருவாக்கங்கள் (சங்கரா), உணர்வு நிலை (விஜ்னனா) ஆகியவை இந்த ஐந்து ஒருங்கிணைப்புகளாகும்.[315][316][317] சார்புத் தோற்றம் போன்ற பிற பௌத்த போதனைகள் மற்றும் பட்டியல்களின் ஒரு பகுதியாக இவை உள்ளன. எவ்வாறு ஐம்புலன்சார் உள்ளீடுகளானவை மனத்தூய்மைக் கேடுகளின் மூலம் அடிமைத்தனத்திற்கும், அதிலிருந்து சம்சாராவுக்கும் வழி வகுக்கின்றன என இவை விளக்குகின்றன. சார்புத் தோற்றம்![]() தொடக்க கால நூல்களில் துக்கத்தின் வளர்ச்சி செயல் முறையானது சார்புத் தோற்றத்தைப் போதிப்பதன் மூலம் விரித்துரைக்கப்பட்டது.[305] ஏற்கனவே உள்ள அல்லது புதிதாக உருவாகும் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட ஆக்கக் கூறுகளைச் சார்ந்துள்ளதாக இது குறிப்பிடுகிறது.[318] தொடக்க கால நூல்களில் சார்புத் தோற்றத்தின் மிக அடிப்படையான உருவாக்கமாக பின்வருவது குறிப்பிடப்பட்டுள்ளது: 'இது இவ்வாறாக இருப்பதால், இது நிகழ்கிறது' (பாளி: எவம் சடி இடம் ஹோடி).[319] காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளின் படி தான் தோற்றங்கள் ஏற்படுகின்றன. பிற முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத மெய்ம்மை இருக்கும் போது மட்டுமே குறிப்பிட்ட மெய்ம்மை வளர்ச்சியடைகிறது என்று பொருள்படக் கூடியதாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறாக இந்த மெய்ம்மைகளின் வளர்ச்சியானது மற்ற மெய்ம்மைகளைச் "சார்ந்துள்ளது".[319] துக்கத்தின் சார்புத் தோற்றம் குறித்த புத்தரின் போதனையின் அடிப்படைத் தன்மையை தத்துவவாதி மார்க் சிடேரிட்ஸ் மேலோட்டமாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
பல தொடக்க கால நூல்களில் இந்த அடிப்படைக் கோட்பாடானது கட்டுப்படுத்தப்பட்ட சார்பை உடையதாகக் கூறப்படும் மெய்ம்மைகளின் ஒரு பட்டியலுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.[320][af] வேதத்தில் குறிப்பிடப்பட்ட பேரண்டப் பிறப்பை முதல் நான்கு தொடர்புகளுக்கு அடிப்படையாகக் குறிப்பிட்டது உள்ளிட்ட[321][322][323][324][325][326] பிந்தைய விளக்கங்களின் ஒரு விளைவாக[327][328][329][ag] இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அறிஞர் போயிசுவெர்ட்டின் கூற்றுப்படி, நிதனா 3-10 ஆகியவை ஐந்து கந்தங்களுடன் தொடர்புடையவையாக உள்ளன.[330] ரிச்சர்டு கோம்பிரிச்சின் கூற்றுப்படி, 12 மடங்கு பெரிய பட்டியலானது முந்தைய இரு பட்டியல்களின் ஓர் ஒருங்கிணைப்பு ஆகும். இதில் இரண்டாவது பட்டியலானது தன்கா "தாகம்" எனத் தொடங்குகிறது. இந்த தாகமே இரண்டாவது உயர்ந்த உண்மையில் விளக்கப்பட்டுள்ளதன்படி துன்பத்திற்கான காரணமாக உள்ளது.[331] கோம்பிரிச்சின் கூற்றுப்படி, இந்த இரு பட்டியல்களும் ஒன்றிணைக்கப்பட்டன. இதன் தலைகீழ் வடிவத்தில் முரண்பாடுகள் தோன்றுவதற்கு இது காரணமாகியுள்ளது.[331][ah] அனாத்தாபுத்தர் சார்புத் தோற்றம் குறித்த தன் பகுப்பாய்வை "அழியாமை" (சஸ்ஸதவதா, சில சாரமானது என்றும் நிலைத்திருக்கிறது என்ற எண்ணம்) மற்றும் "அழிவுவாதம்" (உச்சேதவதா, மரணத்தின் போது நாம் முழுமையாக அழிந்து விடுகிறோம் என்ற எண்ணம்) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட "நடு வழியாகக்" கண்டார்.[305][319] இப்பார்வையில், மனிதர்கள் என்பவர்கள் நிலையற்ற மனம்சார்-உடல்சார் ஆக்கக் கூறுகளின் ஒரு சாதாரண தொடர்ச்சி ஆவர்.[305] இவை ஒரு சுதந்திரமான அல்லது நிலையான ஆன்மாவைக் கொண்டிராத அனாத்தா (பாளி: அனாத்தா, சமசுகிருதம்: அனாத்மா, பொருள்: ஆன்மா என்று ஒன்று இல்லை) என்று குறிப்பிடப்பட்டன.[318] இந்த உலகில் நாம் பட்டறியும் அனைத்தும் குறுகிய நேரத்திலேயே மாறக் கூடியவை மற்றும் ஒரு நபருக்கு மாறாத பகுதி என்ற ஒன்று கிடையாது ஆகிய கருத்துக்களை புத்தர் கொண்டிருந்தார்.[332] ரிச்சர்டு கோம்பிரிச்சைப் பொறுத்த வரையில், புத்தர் "அனைத்துமே ஒன்றன் பின் ஒன்றாக நிகழும் மாற்றங்கள்" (அனைத்துமே மாறக் கூடியவை) என்ற கருத்தைக் கொன்டிருந்தார்.[333] மாறாத ஆன்மா என்ற கருத்துக்கு எதிரான புத்தரின் வாதங்களானவை ஐந்து கந்தங்களின் ஒழுங்கு முறையைச் சார்ந்துள்ளது. இதை பாளி அனாத்தலக்கன சுத்தாவில் (மற்றும், காந்தாரி மற்றும் சீன மொழியில் உள்ள இதன் இணை நூல்களில்) காணலாம்.[334][335][336] உணர்வு நிலை (வின்னனா) உள்ளிட்ட அனைத்து ஐந்து ஒருங்கிணைப்புகளானவை சார்புத் தோற்றத்தின் காரணமாகவே எழுகின்றன என தொடக்க கால நூல்களில் புத்தர் போதிக்கிறார்.[337] இவை அனைத்துமே நிலையற்றதாக உள்ளதால், மனம்சார்-உடல்சார் செயல்முறைகளில் எந்தவொன்றையும் ஒரு நிலையான ஆன்மா என ஒருவர் கருத இயலாது.[338][305] உணர்வு நிலை மற்றும் எண்ணம் (செதனா) போன்ற மனம் சார்ந்த செயல்முறைகளும் கூட சார்புத் தோற்றமுடையவையாகவும், நிலையற்றவையாகவும் பார்க்கப்படுவதால் அவை ஆன்மாவாகத் (ஆத்மன்) தகுதி பெறுவதில்லை.[305] நம் பேராசை மற்றும் பல்வேறு மாற்றமடையும் மெய்ம்மைகளுடனான அடையாளப்படுத்தல், மேலும், உண்மையில் அனைத்தும் எவ்வாறு உள்ளன என்பதை அறியாமை ஆகியவற்றிலிருந்து ஆன்மா உள்ளது என்ற நம்பிக்கையானது உருவாவதாக புத்தர் கருதினார்.[339] மேலும், தவறான சுய பார்வைகளை நாம் பிடித்துக் கொண்டிருப்பதால் நாம் துன்பமடைகிறோம் என்ற கருத்தைப் புத்தர் கொண்டிருந்தார்.[340][341] இங்கிலாந்து அறிஞரான ரூபெர்ட் கெதின் விளக்குவதாவது, புத்தரைப் பொறுத்த வரையில், ஒரு மனிதன் என்பவன்
இப்பார்வையின் காரணமாக, ஒரு "ஜீவாத்மா" எனும் சைன கோட்பாடு மற்றும், ஆத்மன் (பாளி: அத்தா) மற்றும் புருச தத்துவம் ஆகிய கோட்பாடுகள் உள்ளிட்ட தன் காலத்து அனைத்து ஆன்மா குறித்த கோட்பாடுகளுக்கும் எதிரானதாக புத்தரின் போதனையானது இருந்தது. ஒரு மனிதனுக்கு அனைத்து மாற்றமடையும் அனுபவங்களிலிருந்து தனித்திருந்த,[343] மற்றும் கூடு விட்டு கூடு பாய்ந்த[344][345][305] ஒரு நிலையான, மாற்றமடையாத சாரம் இருந்ததென இந்த அனைத்து கோட்பாடுகளும் கருத்தைக் கொண்டிருந்தன. சாரத்திற்கு எதிரான புத்தரின் பார்வையானது இன்னும் மறுபிறப்பு மூலமாக தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்ற ஒரு புரிதலைக் கொண்டிருந்தது. ஆனால், அது வெறுமனே செயல்களின் பலனின் மறுபிறப்பாக (கர்மா) இருந்தது, ஆன்மா போன்ற சாரமாக இல்லை.[346] விடுதலைக்கான வழி![]() ![]() சம்யோஜனம், கிலேசாக்கள் மற்றும் அசவாக்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடவும், விமுத்தியை (விடுதலை) அடையவும் உண்டான பயிற்சிக்கான ஒரு வழியை (மார்க்கம்) புத்தர் போதித்தார்.[305][347] புத்தரால் போதிக்கப்பட்ட இவ்வழியானது தொடக்க கால நூல்களில் (மிக பிரபலமாக பாளி தம்மசக்கப்பவத்தன சுத்தா மற்றும் அதன் ஏராளமான இணை நூல்கள்) ஒரு "நடு வழி" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு புறம் உடல் இன்ப நுகர்வு, மற்றொரு புறம் உடலை உட்புறத்திலிருந்து அழியச் செய்தல் ஆகியவற்றுக்கு நடுவிலான வழி இதுவாகும்.[348] தொடக்க கால நூல்களில் காணப்படும் புத்தரின் போதனையின் மைய அமைப்பின் ஒரு பொதுவான முன் வைப்பானது நான்கு உயர்ந்த உண்மைகளைச் சார்ந்ததாகும்.[349] இவை உன்னதமான எண்வகை மார்க்கங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.[350][ai] கெதினின் கூற்றுப்படி, தொடக்க கால நூல்களில் பகுத்தறிவுடன் பயன்படுத்தப்பட்டுள்ள விழிப்படைதலுக்கான வழியின் மற்றொரு பொதுவான சுருக்கமானது "தடைகளைக் கைவிடுதல், மனந்தெளிநிலையின் நான்கு நிறுவுதல்களைப் பின்பற்றுதல் மற்றும் விழிப்படைய வைக்கும் ஆக்கக் கூறுகளை மேம்படுத்துதல்" ஆகியவையாகும்.[352] ரூபெர்ட் கெதினின் கூற்றுப்படி, நிகயங்கள் மற்றும் ஆகமங்களில், புத்தரின் வழியானது சமன்னபால சுத்தாவில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் சீராக வளரும் மற்றும் படிப்படியான "அடி அடியாக" நடைபெறும் செயல்முறையாக முதன்மையாக முன் வைக்கப்பட்டுள்ளது.[353][aj] உபனிச சுத்தா (சம்யுத்த நிகயம் 12.23) போன்ற பிற தொடக்க கால நூல்கள், சார்புத் தோற்ற செயல்முறையானது அதன் முந்தைய நிலைக்குத் திரும்பும் ஒன்றாக இவ்வழியை முன் வைக்கின்றன.[358][ak] உடல்நலத்திற்கு ஏற்ற நிலைகளைப் பெறுதல் (பாவனா) என்பது புத்தரின் வழியின் மையக் கருத்துருவாக உள்ளது. இவ்வழியின் இந்த தொடக்க கால முன் வைப்புகளால் பகிர்ந்து கொள்ளப்படும் இந்த இலக்கிற்கான பொதுவான பழக்கவழக்கங்களில், சிலா (நன்னெறிப் பயிற்சி), ஆசைகளைக் கட்டுப்படுத்துதல் (இந்த்ரியசம்வரா), சதி (மனந்தெளிநிலை) மற்றும் சம்பஜன்னா (தெளிவான விழிப்புணர்வு), மற்றும் தியானம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. உடல்நலத்திற்கு ஏற்ற நிலைகளை சீராக மேம்படுத்துதல் என்பது[354] "துயர் தோயா மனம் மற்றும் விழிப்புணர்வின் ஒரு குறைபாடற்ற நிலைக்கு (உபேக்க-சதி-பரிசுத்தி)" வழி வகுக்கிறது.[360] ஆசையைக் கட்டுப்படுத்துதல்[361] மற்றும் மனந்தெளிநிலை போன்ற இவ்வழியின் பல்வேறு அம்சங்கள் தியானத்திற்கு முன்னதாக உள்ளனவாகவும், தியானத்திற்கு ஆதரவளிப்பவையாகவும் உள்ளன. சதிபத்தன சுத்தாவில் போதிக்கப்பட்டுள்ளதைப் போன்ற சதிபத்தன செயல்திட்டம் மற்றும் ஆனாபானாசதி சுத்தாவில் போதிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஆனாபானாசதியின் பதினாறு ஆக்கக் கூறுகளில் இவை விளக்கப்பட்டுள்ளன.[al] சைனத் தாக்கங்கள்![]() ஆலார காலமர் மற்றும் உத்தக ராமபுத்திரர் என்ற பெயர்களையுடைய இரு ஆசிரியர்களுக்குக் கீழ் புத்தர் பயின்றதாக பல்வேறு நூல்களில் முன் வைக்கப்படுகின்றன. அலெக்சாந்தர் வைன்னேயின் கூற்றுப்படி, உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஒத்த கொள்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பயிற்றுவித்த யோகிகள் இவர்கள் ஆவர்.[362] யோகன்னசு புரோங்கோர்சுதுவின் கூற்றுப்படி, புத்தர் தன் விழிப்படைதலுக்கு முன்னர் பின்பற்றிய பழக்கவழக்கங்களான "மூச்சை நிறுத்தி தியானம் செய்தல் மற்றும் உட்கொள்ளும் உணவை படிப்படியாகக் குறைத்தல்" ஆகியவை சைன துறவறப் பழக்கவழக்கங்களை ஒத்தவை ஆகும்.[363] ரிச்சர்ட் கோம்பிரிச்சின் கூற்றுப்படி, சைன ஆதாரங்களில் காணப்படும் புத்தர் காலத்துக்கு முந்தைய கருத்துக்களின் மேம்பாடே புத்தரின் போதனைகளான கர்மா மற்றும் மறுபிறப்பு ஆகியவை ஆகும்.[364] இதே போல், மறுபிறப்பின் சுழற்சிகளில் நாம் பிடிக்கப்பட்டுள்ளோம் மற்றும், அகிம்சை மற்றும் ஆன்மீகப் பழக்க வழக்கங்களின் மூலமாக அவற்றிலிருந்து நாம் விடுதலையைத் தேட வேண்டும் என்ற கருத்துருவான சம்சாரா போன்றவை அநேகமாக தொடக்க கால சைனத்தில் பயிற்றுவிக்கப்பட்டதாகவும், புத்தர் காலத்துக்கு முந்தையவையாகவும் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[365] கே. ஆர். நார்மன் என்பவரின் கூற்றுப்படி, இருப்பின் மூன்று குறியீடுகள்[am] என்ற புத்தரின் போதனையும் கூட உபநிடத அல்லது பிற தாக்கங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம்.[366] வீடற்ற வாழ்வுநடு வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு குறைபாடற்ற வாழ்வின் வழியாக ஒரு வீடற்ற மற்றும் பிரம்மச்சாரிய "சிராமணர்" அல்லது யாசகரின் வாழ்க்கையை புத்தர் ஊக்குவித்தார் என்ற கருத்தை தொடக்க கால பௌத்த நூல்கள் முன் வைக்கின்றன.[367] வெறும் ஒரு திருவோடு மற்றும் மூன்று மேலங்கிகளை மட்டும் வைத்துக் கொண்டு தங்களது அனைத்து உடைமைகளையும் அவர்கள் கை விட்டு விட்டு யாசகர்களாக (அல்லது பிக்குகளாக) அவர்கள் வாழ வேண்டும் என்று போதித்தார்.[368] புத்தரின் துறவற ஒழுங்கு முறையின் ஒரு பகுதியாக, இவர்கள் அடிப்படைத் தேவைகளுக்கு (முதன்மையாக உணவு, உடை மற்றும் தங்குமிடம்) அவர்கள் பரந்ததாக உள்ள உபாசக சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதும் கூட குறிப்பிடப்படுகிறது.[369] துறவற ஒழுங்கு குறித்த புத்தரின் போதனைகளானவை வெவ்வேறு தொடக்க கால பள்ளிகளின் பல்வேறு வினயத் தொகுப்புகளில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.[368] பிக்குகள் மற்றும் பிக்குணிகள் ஆகிய இருவரையுமே உள்ளடக்கிய பௌத்தத் துறவிகளானவர்கள் தங்களது உணவை யாசகத்தின் வழியாகவே பெற வேண்டும். நண்பகலுக்குப் பிறகு உணவைச் சேகரிப்பில் வைக்கவோ அல்லது உண்ணவோ அவர்களுக்கு அனுமதி கிடையாது. தங்கம், வெள்ளி அல்லது எந்த ஒரு விலை மதிப்புமிக்க பொருட்களையும் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி கிடையாது.[370][371] சமூகம்சமூக-அரசியல் போதனைகள்மனித வாழ்க்கைக்கு அரசியலின் முக்கியத்துவம் குறித்த ஒரு மதிப்பு குறைவான கருத்தையே புத்தர் அளிப்பதாக தொடக்க கால நூல்கள் குறிப்பிடுகின்றன. அரசியல் என்பது தவிர்க்க இயலாதது. அநேகமாக தேவையானதாகவும், உதவிகரமானதாகவும் கூட இருக்கலாம். ஆனால், நேரம் மற்றும் முயற்சியை பெருமளவுக்கு வீணாக்குவதாகவும் கூட உள்ளது. மேலும், நான் எனும் ஆணவம் கட்டற்றுப் பெருகுவதற்கு அனுமதியளிக்கும் ஒரு முதன்மையான தூண்டுதலாகவும் உள்ளது. ஒரு மிகக் குறைவான அளவு (வரிகளைச் செலுத்துதல், சட்டங்களை மதித்தல், ஒரு வேளை தேர்தல்களில் வாக்களிப்பது போன்றவை) தவிர்த்து அரசியலில் ஈடுபடுவதை அறநெறி சார்ந்த கடமையாக மக்கள் கொள்ள வேண்டும் என்பதை பௌத்த அரசியல் கோட்பாடு மறுக்கிறது. அரசியலில் ஈடுபடுவது மற்றும் விழிப்படைய முயலுதல் ஆகியவற்றை வாழ்க்கையில் முரணான வழிகள் என இது செயல் ஈடுபாட்டுடன் வர்ணிக்கிறது.[372] அக்கன்ன சுத்தாவில் எவ்வாறு முடியாட்சி தோன்றியது என்ற வரலாற்றை புத்தர் போதிக்கிறார். மேத்யூ ஜே. மூர் என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி, இது "ஒரு சமூக ஒப்பந்தத்திற்கு நெருக்கமாக ஒப்பிடக் கூடியதாக" உள்ளது. சமூகத்தின் சாதி குறித்த வேதப் பார்வைகளுக்கு மாறாக, அக்கன்ன சுத்தாவானது எவ்வாறு வெவ்வேறு சமுதாய வகுப்புகள் தோன்றின என்பது குறித்த ஒரு சமூக விளக்கத்தையும் கூடக் கொடுக்கிறது.[373] சக்கவத்தி சிகானத சுத்தா மற்றும் மகாசுதச்சன சுத்தா போன்ற பிற தொடக்க கால நூல்கள் நன்னெறிச் (தர்மம்) சக்கரத்தைச் சுழலச் செய்யும் தலைவரின் (சக்கவத்தி, பொருள்: சக்கரவர்த்தி) குறித்து கவனக் குவியம் கொண்டுள்ளது. ஒரு குறைபாடற்ற தலைவர் என்பவர் தன்னுடைய நிர்வாகத்தின் மூலமாக தர்மத்தை ஊக்குவிப்பவரே ஆவார். அறநெறியுடைய தூய்மைத் தன்மையின் மூலமாகவே தன்னுடைய நிலையை அவரால் அடைய முடியும். தன்னுடைய நிலையைப் பேணுவதற்கு அவர் நீதிநெறியையும், தர்மத்தையும் ஊக்குவிக்க வேண்டும். சக்கவத்தி சிகானத சுத்தாவில் உள்ளதன்படி, சக்கவத்தியின் முக்கியமான பணிகளானவை: "காவலாள்களை நிறுவுவது, உனது சொந்த வீடு, உனது துருப்புக்கள், உன்னுடைய உயர்குடியினர், மற்றும் உனக்குத் திறை செலுத்துபவர்கள், பிராமணர்களுக்காகவும், வீட்டுடைமையாளர்களுக்காகவும், பட்டணம் மற்றும் நாட்டுப்புற மக்கள், துறவிகள் மற்றும் பிராமணர்கள், விலங்குகளுக்காகவும், பறவைகளுக்காகவும் தம்மத்தின் வழியில் பாதுகாப்பை அளிக்க வேண்டும். உன்னுடைய இராச்சியத்தில் எந்த ஒரு குற்றமும் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வறிய நிலையில் உள்ளோருக்கு உடைமைகளை அளிக்க வேண்டும்."[373] வறிய நிலையில் உள்ளோருக்குக் கொடுக்கத் தவறுவதன் காரணமாக எவ்வாறு சக்கரத்தை-சுழலச் செய்யும் முடியரசர்களின் வம்சமானது வீழ்ச்சியடைகிறது என்று குறிப்பிடுவதன் மூலம் இந்த சுத்தாவானது வறியவர்களிடம் ஈகைக் குணத்துடன் நடந்து கொள்வதை விளக்குகிறது. வறுமை அதிகரிக்கும் போது இராச்சியமானது உட்சண்டையில் மூழ்குகிறது. திருட்டு மற்றும் வன்முறைக்கு இது இட்டுச் செல்கிறது.[an] மகாபரிநிப்பாண சுத்தாவில் வச்சிக பழங்குடியினக் கூட்டமைப்பினர் மத்தியில் தான் ஊக்குவித்த ஏராளமான கொள்கைகளைப் புத்தர் மேலோட்டமாகக் குறிப்பிடுகிறார். வெளிப்புறத்தில் மட்டும் குடியரசு வடிவ அரசாங்கமாக இருந்த அரசு இந்தப் பழங்குடியினக் கூட்டமைப்பாகும். "வழக்கமாக மற்றும் அடிக்கடி மன்றங்களை நடத்துங்கள்", இணக்கமான நிலையில் வாழுங்கள், தங்களது மரபுகளைப் பேண வேண்டும் ஆகியவற்றை அவர்களுக்கு இவர் போதித்தார். புத்தர் பிறகு பௌத்த சங்கத்தினர் மத்தியிலும் இதையொத்த குடியரசு பாணி அரசாங்கத்தை ஊக்குவித்தார். இதில் அனைத்துத் துறவிகளும் சமமான உரிமைகளை வெளிப்புற சந்திப்புகளில் கலந்து கொள்ளக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்று ஒற்றைத் தலைவர் இருக்க மாட்டார். புத்தர் ஒரு தலைவரை நியமிப்பதைத் தவிர்த்ததிலிருந்து இது உருவானதாகக் கருதப்படுகிறது.[373] புத்தர் குடியரசு வடிவ அரசாங்கத்துக்கு ஆதரவளித்தார் என்பதற்கு இந்த உண்மையானது அறிகுறியாக உள்ளதாக சில அறிஞர்கள் வாதிட்டனர். அதே நேரத்தில், பிறர் இக்கருத்திலிருந்து முரண்பட்டனர்.[373] உலக மகிழ்ச்சிபிக்கு போதியால் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், பாளி சுத்தாக்களில் சித்தரிக்கப்பட்டுள்ளதன்படி இந்த உலகிற்கு அப்பாற்பட்ட ஓர் இலக்கை அடைவதை குறிப்பாக புத்தர் போதிக்கவில்லை. ஆனால், உலக மகிழ்ச்சியை (சுகம்) எவ்வாறு அடைவது என்பதையும் கூட உபாசகர்களுக்குப் போதிக்கிறார்.[374] போதியின் கூற்றுப்படி, ஓர் உபாசகனாக எவ்வாறு வாழ்வது என்பதைக் கவனக் குவியமாகக் கொண்ட சுத்தாக்களில் "மிக அகல் விரிவான" சுத்தாவானது சிகலோவத சுத்தா (திச நிகயம் 31) ஆகும். ஆறு அடிப்படையான சமூக உறவுமுறைகளை நோக்கி ஓர் உபாசகர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சுத்தா மேலோட்டமாகக் குறிப்பிடுகிறது. அந்த ஆறு உறவு முறைகளானவை, "பெற்றோரும் பிள்ளைகளும், ஆசிரியரும் மாணவர்களும், கணவனும் மனைவியும், நண்பனும் நண்பனும், முதலாளியும் வேலையாட்களும், உபாசகனும் சமய வழிகாட்டிகளும்" ஆவர்.[375] இந்த பாளி நூலானது அதன் இணை நூல்களை சீன மொழி மற்றும் சமசுகிருதத்திலும் கூடக் கொண்டுள்ளது.[376][377] மற்றொரு சுத்தாவில் (திகஜனு சுத்தா, அங்குத்தர நிகயம் 8.54) மகிழ்ச்சியின் இரு வகைகள் குறித்து புத்தர் போதிக்கிறார். முதல் வகையானது, தற்போது இருக்கும் வாழ்க்கையிலேயே புலப்படக் கூடிய மகிழ்ச்சி ஆகும். இந்த மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும் நான்கு விஷயங்களாக புத்தர் குறிப்பிடுவதாவது, "விடா முயற்சியில் வெற்றி பெறுதல், பாதுகாப்பு அளிப்பதில் வெற்றி பெறுதல், நல்ல நட்பு மற்றும் சமநிலை வாழ்க்கை" ஆகியவை ஆகும்.[378] இதே போல, பல பிற சுத்தாக்களில் எவ்வாறு குடும்ப உறவுமுறைகளை மேம்படுத்துவது என புத்தர் போதிக்கிறார். குறிப்பாக பிள்ளைகள் பெற்றோருக்குச் செலுத்தும் அன்பு மற்றும் நன்றி, திருமண நல்வாழ்க்கையின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் குறித்து குறிப்பிடுகிறார்.[379] அடுத்த பிறப்பில் மகிழ்ச்சி குறித்து குறிப்பிடும் போது, புத்தர் (திகஜனு சுத்தாவில்) ஒரு நல்ல மறுபிறப்புக்கு வழி வகுக்கும் நற்குணங்களாகக் குறிப்பிடுவதாவது, "நம்பிக்கை (புத்தர் மீதும், அவரது போதனைகளின் மீதும்), அறநெறி ஒழுக்கம், குறிப்பாக பஞ்ச சீலங்களைக் கடைபிடித்தல், ஈகைக் குணம் மற்றும் ஞானம் (தோன்றும் மறையும் பொருட்கள் குறித்த அறிவு)" ஆகியவை ஆகும்.[380] பிற சுத்தாக்களில் உள்ளதன் படி, புத்தரின் கூற்றுப்படி, உடல் நலத்திற்கு ஏற்ற அல்லது திறமுடைய (குசாலா) கர்மாவைப் பெறுதல், இது ஒரு நல்ல விளைவுக்கு வழி வகுக்கும், மற்றும் உடல் நலத்திற்குத் தகாத (அகுசாலா) கர்மாவைத் தவிர்த்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே ஒரு நல்ல மறுபிறப்பை அடைவது என புத்தர் குறிப்பிடுகிறார். புத்தரவால் போதிக்கப்பட்ட நல்ல கர்மாக்களின் ஒரு பொதுவான பட்டியலானது மச்சிம நிகயம் 41 சாலேய்யக சுத்தாவில் (மற்றும் அதன் சீன இணை நூலான ச. ஆ. 1042) மேலோட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ள பத்து செயல் வழிகளின் பட்டியல் (கம்மப்பதம்) ஆகும்.[381][382] நல்ல கர்மாவானது புண்ணா (புண்ணியம்) என்றும் கூட குறிப்பிடப்படுகிறது. புண்ணிய செயல்களின் மூன்று அடிப்படைகளாகப் புத்தர் மேலோட்டமாகக் குறிப்பிடுவதாவது, "பிறருக்குக் கொடுத்து உதவுதல், அறநெறி ஒழுக்கம், மற்றும் தியானம் (அங்குத்தர நிகயம் 8:36இல் உள்ளபடி)" ஆகியவை ஆகும்.[383] உடல் தோற்றம்![]() புத்தரின் தோற்றமானது பிற பௌத்தத் துறவிகளை ஒத்ததாக இருந்ததென தொடக்க கால ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. உலக வாழ்வைத் துறந்த போது இவர் எவ்வாறு "தன்னுடைய முடி மற்றும் தாடியை வெட்டினார்" என்பதை பல்வேறு சொற்பொழிவுகள் விளக்குகின்றன. இதே போல் திக நிகயம் 3 இல் ஒரு பிராமணர் புத்தரை முடிகள் முழுவதும் மழிக்கப்பட்ட மொட்டையான அல்லது வழுக்கை (முண்டக) மனிதர் எனக் குறிப்பிடுகிறார்.[384] திக நிகயம் 2 உம் கூட எவ்வாறு மன்னன் அஜாதசத்ரு சங்கத்தை நெருங்கிய போது அவர்களில் எவர் புத்தர் என்பதைக் கூற இயலாமல் தவித்தான் என்பதையும், புத்தரை அடையாளம் காண தன்னுடைய அமைச்சரைக் குறிப்பிட்டுக் காட்டுமாறு கூறிய கட்டாய நிலை அவனுக்கு ஏற்படுத்தப்பட்டதையும் கூட குறிப்பிடுகிறது. இதே போல, மச்சிம நிகயம் 140 இல், புத்தரைப் பின்பற்றுபவராக தன்னைத் தானே கருதும் ஒரு யாசகர் புத்தரை நேரில் சந்திக்கிறார். ஆனால், புத்தரை அவரால் அடையாளம் காண இயலவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[385] ஓர் அழகான மற்றும் மிக வெளுப்பான தோல் நிறத்தைக் கொண்டாரக புத்தர் குறிப்பிடப்படுகிறார் (திக நிகயம் வரி:115; அங்குத்தர நிகயம் வரி:181). குறைந்தது அவரது இளமைக் காலத்திலாவது அவர் இவ்வாறு இருந்திருக்க வேண்டும். எனினும், முதுமைக் காலத்தில் குனிந்த உடலுடன், தளர்ந்த மற்றும் சுருங்கிய தோல்களையுடைய கை கால்களுடன் அவர் இருந்தார் என குறிப்பிடப்படுகிறது.[386] பல பௌத்த நூல்கள் "ஒரு மகா மனிதனின் 32 அறிகுறிகள்" (சமசுகிருதம்: மகாபுருஷ லட்சணம்) என்று அறியப்பட்ட மட்டுமீறிய உடல் அறிகுறிகளைப் புத்தர் கொண்டிருந்தார் என்று குறிப்பிடுகின்றன. அனலாயோவின் கூற்றுப்படி, பௌத்த நூல்களில் இந்த அறிகுறிகள் முதலில் தோன்றுகிற போது அவை தொடக்கத்தில் சாதாரண மனிதனுக்கு புலப்படக் கூடியவையாக இல்லை. இவற்றைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்பு பயிற்சி தேவைப்பட்டது. எனினும், பிற்காலத்தில் இவை சாதாரண மக்களுக்கும் புலப்படக் கூடியவையாக குறிப்பிடப்பட்டுள்ளன. புத்தர் மீது ஒரு நம்பிக்கையைத் தூண்டுவதற்கும் அவை காரணமாக அமைந்தன.[387] இந்த உடல் அறிகுறிகளானவை திக நிகயத்தின் லக்கன சுத்தாவில் (திக நிகயம் வரி:142) குறிப்பிடப்பட்டுள்ளன.[388] மகாயானத்தில் சாக்கியமுனி புத்தர்![]() மகாயான பௌத்தத்தில் ஒரு நபராக சாக்கியமுனி புத்தர் (சீனம்: 釋迦牟尼佛, சிஜியாமௌனிபோ) பண்டைக் கால இந்தியாவில் வாழ்ந்து போதித்த வரலாற்று ரீதியிலான புத்தராக தனது மையப் பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். எனினும், மகாயான மேம்படுத்துதல்களானவை இவரது இயல்பு, செயல்பாடுகள் மற்றும் மீவியற்பியல் நிலைகளின் தனிச் சிறப்பான மறு விளக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஒரு பிரபஞ்சம்சார் மற்றும் காலமற்ற அடையாளத்தை முன் வைக்கின்றன. அதிகப்படியான மனித இயல்பை மையமாகக் கொண்ட வர்ணனைகளைப் போல் இல்லாமல் மகாயான நூல்களானவை நினைக்க இயலாத தனியியல்புகளைக் கொண்ட இந்த உலகிற்கு அப்பாற்பட்ட ஒருவராக சாக்கியமுனியை வர்ணிக்கின்றன. ஒரு பரந்த பிரபஞ்சம்சார் உருவரைச் சட்டத்திற்குள் செயல்படுபவராக இவரைக் காட்டுகின்றன.[389][390] மேலும், மகாயான சூத்திரங்களானவை சாக்கியமுனியை பொதுவாக போதிசத்துவர்கள், கடவுள்கள், பிற புத்தர்கள் மற்றும் பிற ஆட்சி எல்லைகளுக்குள் வாழும் நபர்களைக் கொண்ட பரந்த மன்றங்களில் போதிப்பவராக சித்தரிக்கின்றன. தொடக்க கால திருமுறை சுத்தாக்களின் மனித அளவிலிருந்து இந்த மன்றங்களானவை பெருமளவுக்கு மிஞ்சியவையாக உள்ளன. பல மகாயான புனித நூல்களில் முன்னேறிய போதிசத்துவர்களுக்கு என உள்ள ஆழ்ந்த மகாயான போதனைகளை போதிப்பவராக சாக்கியமுனி காட்டப்படுகிறார். ஒரு துறவு ஆசிரியராக சாக்கியமுனியைக் காட்டும் பெரும்பானமை நடைமுறை வழக்க நிகய/ஆகமங்களுக்கு மாற்றாக மகாயான நூல்கள் இவரது எல்லையற்ற ஞானம், பரந்த சக்தி மற்றும் அளவில்லாத கருணையைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. மேலும், மகாயான சூத்திரங்களின் படி கேட்பவர்களின் கொள்ளளவு ஆற்றலுக்கு ஏற்றவாறு எண்ணற்ற போதனைகளை சாக்கியமுனி போதிக்கிறார். இவ்வாறாக, நிகயங்கள்/ஆகமங்களில் போதிக்கப்படும் சிரவகயன வழியின் செவ்வியல் போதனையாகத் தோன்றுவதானது ஒரு தற்காலிக போதனை என்று கருதப்படுகிறது. உச்சபட்ச மகாயான தர்மத்திற்கு தயார்படுத்துவதாக இது உள்ளது. தாமரை சூத்திரம் இந்த கருத்துருவை மிகவும் வெளிப்படையாக மேம்படுத்துகிறது. அனைவரையும் புத்தர் நிலைக்குக் கொண்டு செல்லும் ஒரு வாகனத்திற்கு மனிதர்களை வழி நடத்தும் பல்வேறு ஆற்றல் வாய்ந்த வழி முறைகளைப் (உபாயம்) பயன்படுத்தும் ஒரு மிகச் சிறந்த ஆசிரியராக சாக்கியமுனியை இவை காட்டுகின்றன.[389] ![]() சாக்கியமுனி நமது உலகத்தின் (அடிக்கடி சாகா என்று அழைக்கப்படுவது) மைய புத்தராக இருக்கும் அதே நேரத்தில் மகாயான அண்டவியலானது பல்வேறு புத்த தளங்களை மேற்பார்வையிடும் எண்ணற்ற புத்தர்களை உள்ளடக்கியுள்ளது. புத்தர்களின் ஓர் அளவில்லாத மன்றங்களுக்கு மத்தியில் ஒருவராக பொதுவாக சாக்கியமுனி காட்டப்படுகிறார். இருந்த போதிலும், இவரது வீடுபேறடையும் செயல்பாடானது பல நூல்களில் இன்றியமையாததாக உள்ளது.[391] அவதம்சக சூத்திரமானது சாக்கியமுனியைப் பிரபஞ்சம்சார் புத்தரான வைரோசன புத்தரிலிருந்து பிரிக்க இயலாதவராகக் காட்டுகிறது. கந்தவியூக சூத்திரமானது (அவதம்சகத்தின் ஒரு பகுதி) சாக்கியமுனியின் செயல்பாடுகளை அனைத்து உலகங்கள் மற்றும் காலங்களுக்கு ஊடுருவிப் பரந்துள்ளதாகவும், உணர்வறியவல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வடிவங்களை வெளிப்படுத்திக் காட்டுவதாகவும் விளக்குகிறது. எண்ணற்ற வடிவங்களில் (போதிசத்துவர்கள், ஆசிரியர்கள், சாதாரண மனிதர்களாகவும் கூட) ஒரே நேரத்தில் தோன்றும் ஒரு புத்தராக இவர் சில நேரங்களில் பார்க்கப்படுகிறார். ஓர் ஒற்றை வரலாற்று ரீதியிலான இருப்பு என்ற எந்த ஒரு நிலையான கருத்தையும் தாண்டியவராக உள்ளார்.[392] ஆன்மீக வழியில் புத்தரின் போராட்டங்களைக் குறிப்பிடும் தொடக்க காலப் பார்வைகளுக்கு மாறாக, அவதம்சக சூத்திரம் மற்றும் தாமரை சூத்திரம் போன்ற மகாயான புனித நூல்களானவை எண்ணற்ற ஊழிகளுக்கு முன்னரே ஏற்கனவே முழுவதுமாக விழிப்படைந்தவராக சாக்கியமுனியைக் காட்டுகின்றன. இவ்வாறாக போதி மரத்தின் கீழ் இவர் விழிப்படைந்ததானது என்பதும் கூட ஒரு போதிக்கும் வழிமுறை (உபாயம்) என்று குறிப்பிடுகின்றன. ஒன்றும் அறியாத நிலையிலிருந்து விழிப்படைந்த உண்மையான தனி நபரின் திருப்புமுனையாக இல்லாமல் பிறருக்காக நடத்தப்பட்ட ஒரு விளக்கமே இதுவாகும். இந்தியாவில் சாக்கிய இனத்தில் ஓர் இளவரசனாகப் பிறந்ததாக நம்க்குத் தோன்றும் இந்த சாக்கியமுனி ஒரு தத்துவார்த்த வெளிப்பாடான ஒரு நிர்மனகயராகப் புரிந்து கொள்ளப்படுகிறார். வெளிப்படையாகத் தெரியும் இவரது மனிதப் பிறப்பு, வாழ்க்கை, விழிப்படைந்தது மற்றும் இறப்பு ஆகியவை உணர்வறியவல்ல மனிதர்களுக்குப் போதிக்கவும், வழிகாட்டவும் என்று வடிவமைக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்த நிகழ்வுகளின் அறிகுறிகள் ஆகும். ஓர் இறக்கும் மனிதனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் இவை கிடையாது.[393] மகாபரிநிர்வாண சூத்திரமானது புத்தர் உண்மையில் பரிநிர்வாணத்திற்குள் நுழைந்தார் என்பதை மறுப்பதன் மூலம் இந்தக் கொள்கையை வலியுறுத்துகிறது. இவரது வெளிப்படையாகத் தெரியும் இருப்பானது வெறுமனே மற்றொரு போதிக்கும் வழி முறையாகும். உண்மையில் இவர் நிலையான செயல்பாடு உடையவராகத் தொடர்கிறார். இவரது தர்ம-உடலானது (தர்மகயம்) மனிதர்களுக்குத் தொடர்ந்து பயனளிக்கிறது.[394] இவர் யாருக்குப் போதிக்கிறாரா அவர்களுக்கான ஆன்மீகக் கொள்ளவுகளுக்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களை இவர் எடுத்தாலும் கூட உண்மையான சாக்கியமுனி என்பவர் நிலையானவர், கட்டுப்படுத்தப்படாதவர், எக்காலத்திலும் உள்ளவர் என்று இந்நூல்கள் மொத்தமாக நிலை நிறுத்துகின்றன. மகாயானத்தில் சாக்கியமுனியைப் புரிந்து கொள்வதற்கான ஒரு மையக் கொள்கை உருவரைச் சட்ட எண்ணமானது திரிகயம் ("மூன்று உடல்") கொள்கையாகும். புத்தர்கள் மூன்று வடிவங்களையுடைய உடல்களைக் கொண்டுள்ளனர் என்ற கருத்தை இது கொண்டுள்ளது. (1) நிர்மனகயம் ("தோன்றும் உடல்") இந்த உலகில் காணப்படும் உடல் இதுவாகும். (2) சம்போககயம் ("அனுபவிக்கும் உடல்") பிரகாசமான இயற்கைக்கு அப்பாற்பட்ட வடிவம் இதுவாகும். (3) தர்மகயம், இறுதி உண்மையின் வடிவமற்ற உடல் இதுவாகும்.[395] இந்த உருவரைச் சட்டத்தின் வழியாக வரலாற்று ரீதியிலான சாக்கியமுனி என்பவர் வெறுமனே ஒரு வரலாற்று ரீதியிலான ஆசிரியர் கிடையாது. இவரது எண்ணற்ற தோன்றல்களில் ஒன்றாக பூமியில் இவர் தோன்றிய ஓர் அண்டவியல் மனிதர் இவர் ஆவார். இவரது உண்மையான அடையாளமானது சம்போக மற்றும் தர்மகய உடல்கள் ஆகும். இவை விண்வெளி மற்றும் காலத்தின் எல்லைகளைத் தாண்டி விரிவடைந்துள்ளன. ஓர் ஒற்றை இடம் அல்லது வாழ்நாளுக்கு என இது கட்டுப்பட்டது கிடையாது. இவரது உடல்களானவை முழு அண்டங்களையும் தாண்டி ஊடுருவிச் செல்கின்றன. எண்ணற்ற உலகங்களில் தோன்றுகின்றன. இந்தப் பார்வையில் இந்த பிரபஞ்சமே சாக்கியமுனியின் தூய்மையான நிலமாகும். இவரது ஆன்மீக இருப்பு மற்றும் போதனைகளின் மூலமாக இப்பிரபஞ்சமானது படிப்படியாக தூய்மைப்படுத்தப்பட்டு மாற்றப்படுகிறது. புத்தர்கள் இந்த உலகத்தில் இருந்து மறையவில்லை, தங்களது பெரும் கருணையின் காரணமாக இந்த உலகத்தை அவர்கள் கைவிடுவதுமில்லை என்ற மகாயான அண்டவியலுடன் இது ஒத்துப்போகிறது.[396] குடும்பம்கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் – மாயா தேவிக்கும் பிறந்த கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். புத்தர் பிறந்த ஏழு நாளில் மாயாதேவி இறந்ததால், சிற்றன்னை மகாபிரஜாபதி கௌதமி புத்தரை வளர்த்தார்.[397] சித்தார்த்தர் யசோதரையை மணந்து ராகுலன் என்ற மகனை பெற்றெடுத்தார். புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமியின் மகன் நந்தன், மகள் நந்தா ஆவார். மற்ற பிற நெருங்கிய உறவினர்கள் ஆனந்தர், தேவதத்தன் ஆவார். புத்தரின் கூற்றுக்கள்புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார். மேலும் புத்தர், ஆத்மாவைப் புறந்தள்ளி, அநாத்மா என்ற உடல் மற்றும் உலகத்திற்கு அதிகம் பொருள் தருகிறார். மேலும் வேதங்களையும், கடவுள் இருப்பையும் மறுக்காமல், அது குறித்து பேசாது விட்டார். புத்தரின் கொள்கைகள்கௌதம புத்தர், வாரணாசியின் அருகிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா"வில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் காசி, கோசலம், மகதம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்கும், அரசப் பெருமக்களுக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை எடுத்துரைத்து வெற்றிகண்டார். கபிலவஸ்துவில் தன் மகன் ராகுலன் மற்றும் சிற்றனை மகாபிரஜாபதி கௌதமி ஆகியோரை சங்கத்தில் இணைத்துக் கொண்டார். மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன், அஜாதசத்ரு ஆகியோர்களைப் பௌத்த சமயத்தைத் தழுவும்படி பணித்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தைப் பின்பற்றிட வழிகோலினார். இந்த இடங்களிலெல்லாம் புத்தர் அவருடைய நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", பஞ்ச சீலங்களையும் மற்றும் "எண்வகை மார்க்கங்களையும்" பின்பற்றி வாழும்படி கூறினார். பௌத்த இல்லறத்தார்களான உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய அறங்களை கூறினார்ர். பிறகு தனது 80-வது வயதில்,குசி நகரத்தில் கி.மு. 483-ல் பரிநிர்வாணம் அடைந்தார். குசி நகரத்தைச் சேர்ந்தவர்கள் இவருடைய உடலுக்கு இறுதிக் கடன் ஆற்றினர். எரியூட்டப்பட்டு எஞ்சிய இவரது சாம்பலும் எலும்பும் எண்வகைப் பகுதிகளாக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு,பின் அவற்றின் மீது சைத்தியங்கள் எழுப்பப்பட்டன. துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் பின்பற்றி ஒழுக வேண்டிய நெறிமுறைகளை வகுத்துத் தந்ததோடு அவர்களுக்கென பிக்குகளின் சங்கத்தையும் உருவாக்கினார். அரசர்களும் நில பிரபுக்களும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தங்குவதற்கு விகாரைகள் மற்றும் குடைவரைகள் அமைத்துக்கொடுத்து நிலபுலங்களைத் தானம் தந்தனர். பௌதத சமய உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச சீலங்கள் கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவியது. கி.பி.முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது. இதற்கு அசோகர், கனிஷ்கர் முதலானோர் பேருதவிப் புரிந்தனர். புத்தரின் சீடர்கள்புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சாரிபுத்திரர், மௌத்கல்யாயனர், மகாகாசியபர், சுபூதி, பூரணர், காத்தியாயனர், அனுருத்தர், உபாலி, ராகுலன், ஆனந்தர் மற்றும் மகதநாட்டின் அரசர் பிம்பிசாரரும், கோசலத்தின் அரசர் பிரசேனஜித் என்கிற பசேனதியும் இவருடைய சீடர்களாக இருந்து பௌத்த சமயம் பரவ அடிகோலினர். பெண் சீடர்களில் மகாபிரஜாபதி கௌதமி தலைமையானவர். புத்தரும் பிற மதங்களும்சமணமும் பௌத்தமும் சமகாலத்தவை.பல்வேறு மதங்கள் புத்தர் காலத்தில் இருந்துவந்தாலும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:சைனம்(சமணம்), ஆசீவகம், வைதீகம் (பிராமணம்) ஆகியவை. மேலும்,இவரது கால கட்டத்தில் இந்திய மெய்யியல் தத்துவங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரம்மம், ஆத்மா, அநாத்மா போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்து முற்றிலும் வேறுபட்ட கருத்துகளை முதன் முதலில் எடுத்துரைத்தவர் புத்தர் ஆவார். புத்தரின் மற்ற பெயர்கள்ததாகதர்சமசுகிருத மொழியில் கௌதம புத்தரை ததாகதர் என்று அழைப்பர். ததாகதர் எனும் சமஸ்கிருதச் சொல் தத ஆகத என்ற சொற்களின் சந்தியினால் தோன்றும் சொல். "அவ்வாறு சென்றவர்" என்று பொருள் படும். இது கௌதம புத்தரை குறிக்கும் காரணப்பெயர். புத்தர் பிறவிச்சுழற்சியை கடந்து சென்றவர் என்ற காரணத்தைக்கொண்டு இப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. மற்ற மதங்களில் புத்தர்பாகவதத்தில் புத்தரை விஷ்ணுவின் 9வது அவதாரமாக போற்றுகிறது.[398] ஆனால் தமிழகத்தில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் வழியே வந்த சைவ சித்தாந்தமும், ஶ்ரீ வைஷ்ணவமும் சாக்கியமுனி புத்தரை பரம விரோதியாக பாவிப்பது, பதிகங்களில் தெளிவாக பாடப்பட்டுள்ளது. பாகவத புத்தர் அந்தணர் குலத்தில் கீகட நகரத்தில் உதித்தவர் எனக்குறிப்பிடுவதால், சாக்கிய புத்தரை மற்றொருவராகக் கருதும் வழக்கமுள்ளது. சமணர் கழுவேற்றத்திற்கு முன், தன்னுடன் வாதிட்ட பௌத்தர் பெயர்களும் ஞானசம்பந்தரால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சங்கரரது அத்துவித ஸ்மார்த்தர்களும், அவரது வழியில் புத்தரை ஐற்பதில்லை. பக்தி காலத்திற்கு முன்பான சங்க இலக்கியங்களில், பத்து அவதாரங்களில் புத்தர் இல்லை. பலராமர்தான் அதற்குமாறாக உள்ளார் இந்திய புத்தர் கோயில்கள்இந்தியாவில் புத்தருக்கு பல கோயில்கள் இருப்பினும், புத்தர் ஞானம் அடைந்த, பிகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில், பன்னாட்டு பௌத்தர்களுக்கு தலைமைக் கோயிலாக திகழ்கிறது. மேலும் காண்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
மேலும் படிக்க
புத்தர்
தொடக்க கால பௌத்தம்
பொது
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கௌதம புத்தர் |
Portal di Ensiklopedia Dunia