உபுண்டு மென்பொருள் நடுவம்
உபுண்டு மென்பொருள் நடுவம் (Ubuntu software center) என்பது உபுண்டு வகை இயக்குதளங்களில் நிறுவி, பயன்படுத்தும் மென்பொருள் பொதிகளை, தன்னகத்தேக் கோர்த்து வைக்கும் சேமிப்பகம் ஆகும். இணையத்தின் வழியே இதிலிருந்து தேவையான மென்பொருட்களை நாம் பதிவிறக்கி நிறுவிக்கொள்ள இயலும். பொதுவாக லினக்சு வகைக்கணினிகளுக்கென, ஒவ்வொரு இயக்குதளங்களும், ஒவ்வொரு வெளியீட்டின் போதும், தனித்துவ அடிப்படையானத் தேவைகளோடு மென்பொருட்களை வெளியிடுகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து கணினியில் நிறுவிய பிறகு, நமக்குத் தேவையான மென்பொருட்களை[2] அதன் பொதிய மேலகத்தில் இருந்து நிறுவிக் கொள்ளலாம். அதனதன் பொதிய மேலக மென்பொருட்களை நிறுவிக் கொள்வதால், கணினியில் இயக்கக் கோளாறுகள் பெரும்பாலும் வருவதில்லை. இதில் தேவைப்படும் மென்பொருட்களை, படத்தில் காட்டியபடி படவிவரங்களில்(GUI) தேர்ந்தெடுத்து, அங்குள்ள நிறுவு என்ற பொத்தானை அழுத்தினால், அது தானாகவே நிறுவப்பட்டு விடும். எனினும், முனையத்தில் வழியே நிறுவுவது சிறப்பான ஒன்றாகவும், புதிய பதிப்பும் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
முனையத்தின் வழியே நிறுவ, முதலில் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia