உரிமையியல் சட்டம்இந்தியா, இங்கிலாந்து, வேல்சு போன்ற பொதுச் சட்டம் நிலவும் நாடுகளில் குடிமையியல் சட்டம் (civil law) அல்லது தெளிவாகத் தமிழில் உரிமையியல் சட்டம் என்பது குற்றவியல் சட்டம் அல்லாத சட்டமாகும்.[1][2] உரிமைத் தீங்கு, நம்பிக்கை முறிப்பு, உடன்பாடு முறிப்பு போன்ற குடிமையியல் தவறுகளும் எதிர்பார்க்கப்பட்ட உடன்பாடுகளும் இந்த சட்டத்தில் வரையறுக்கப்படுகின்றன.[3] உரிமையியல் சட்டமும், குற்றவியல் சட்டத்தைப் போலவே, நிலைமுறைச் சட்டம் என்றும் நடைமுறைச் சட்டம் எனவும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.[4] உரிமையியல் சட்டம் தனிநபர்களிடையே அல்லது அமைப்புக்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளையும் தீர்வின் முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டையும் குறித்தான சட்ட அங்கமாகும். காட்டாக, ஓர் தானுந்து விபத்தில் காயமடைந்தவர் ஓட்டுநரிடம் தனக்கேற்பட்ட இழப்பிற்கு அல்லது காயத்திற்கு நட்ட ஈடு கோருவது உரிமையியல் சட்டத்தின்படி அமையும்.[5] இதற்கு மாறாக குற்றவியல் சட்டம் இழைத்தக் குற்றத்திற்கு தண்டனை வழங்குவதை வலியுறுத்துகிறது. மேற்கண்ட எடுத்துக்காட்டில் போக்குவரத்து விதிகளை மீறி விபத்து நிகழ்ந்திருந்தால் காவல்துறை குற்றவியல் சட்டத்தின்படி வழக்குத் தொடர்ந்து தண்டனை வழங்குவர். மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia