உருசியப் பொருளாதாரம்
உருசியா பொருளாதாரத்தின் தாக்கமிக்க துறைகள் அரசுரிமையாக்கப்பட்டுள்ள உயர் வருமான கலப்புப் பொருளாதாரம் ஆகும். 1990களில் மேற்கொள்ளப்பட்ட சந்தை சீர்திருத்தங்களால் உருசிய தொழிற்றுறையும் வேளாண்மையும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது; ஆற்றல், பாதுகாப்புத் தொடர்புள்ள துறைகள் விலக்கப்பட்டுள்ளன. பெரிய பொருளாதார நாடுகளில் ஓர் மாறான போக்காக உருசியா தனது வளர்ச்சிக்கு ஆற்றல் துறை வருமானங்களை சார்ந்துள்ளது. நாட்டில் கூடுதலான எண்ணெய், இயற்கை எரிவளி, அரிய உலோகம் போன்ற இயற்கை வளங்கள் இருப்பதால் இவை உருசியாவின் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. As of 2012[update] எண்ணெயும் வளியும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% ஆகவும் கூட்டரசு நிதிநிலை வருமானத்தில் 52% ஆகவும் மொத்த ஏற்றுமதியில் 70% க்கும் கூடுதலாகவும் உள்ளது.[22][23] உருசியாவின் ஆயுதத் தொழில் பெரிய அளவிலும் அதிநுட்பமிக்கதாகவும் உள்ளது; ஐந்தாம்-தலைமுறை தாக்கி வானூர்தி போன்ற உயர்நுட்ப பாதுகாப்பு சாதனங்களை வடிவமைக்கவும் தயாரிக்கவும் திறனுடையதாக உள்ளது. உருசிய ஆயுதங்களின் ஏற்றுமதியின் மதிப்பு 2013இல் மொத்தமாக $15.7 பில்லியனாக— ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில்—இருந்தது. உருசியாவிலிருந்து ஏற்றுமதியாகும் படைத்துறை சாதனங்களாக தாக்கு வானூர்திகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.[24][25] 2014இல் உருசியப் பொருளாதாரம் உலகில் பிபிபி அடிப்படையில் ஆறாவது மிகப்பெரியப் பொருளாதாரமாகவும் சந்தை நாணயமாற்று வீதப்படி பத்தாவது மிகப்பெரியப் பொருளாதாரமாகவும் விளங்குகின்றது. இருப்பினும், ரூபிளின் மதிப்புக் குறைவின் காரணமாக அனைத்துலக நாணய நிதியம் 2015இல் பத்தொன்பதாவது நிலைக்கு இறங்கும் என மதிப்பிட்டுள்ளது. 2000க்கும் 2012க்கும் இடையே உருசியாவின் ஆற்றல் ஏற்றுமதிகள் மூலம் வாழ்க்கைத்தரம் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது; செலவழிக்கக்கூடிய வருமானம் 160%ஆக உயர்ந்துள்ளது.[26] டாலர்-மதிப்பில் இது 2000 முதல் ஏழு மடங்கு உயர்ந்துள்ளது.[27] இருப்பினும், இந்த உயர்ச்சி சமூகத்தில் சமமாகப் பரவவில்லை. உருசியாவின் 110 மிகச்செல்வமிக்க நபர்கள் 35% உருசிய வீடுகளின் நிதி சொத்துக்களுக்கு உரிமையுள்ளவர்களாக இருப்பதாக கிரெடிட் சுவிசு மதிப்பிட்டுள்ளது.[28][29] ஆளுகை சரியில்லாத காரணத்தால் உருசியா மிகப்பெரும் தொகையை விதிமீறிய பணப் போக்குவரத்தில் கொண்டுள்ள இரண்டாவது நாடாக உள்ளது. 2002க்கும் 2011க்கும் இடையே $880 பில்லியனை உருசியா இவ்வாறு இழந்துள்ளது.[30] 2008இலிருந்து ஃபோர்ப்ஸ் மாஸ்கோவை "உலகின் பில்லியன் பணமுள்ளவர் தலைநகரம்" என அடிக்கடி அறிவித்துள்ளது.[31][32] உருசியப் பொருளாதாரம் 2014 துவக்கத்தில் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் எனக் கருதப்பட்டது; தொடர்ந்த எண்ணெய் விலைகளின் சரிவாலும் உக்ரைனில் உருசியாவின் படையெடுப்பாலும் அதைத் தொடர்ந்த மூலதன வெளியேற்றத்தாலும் இக்கருத்து நிலவியது.[33][34] இருப்பினும், 2014 உ.மொ.உற்பத்தி வளர்ச்சி நேர்மறையாக 0.6%ஆக இருந்தது.[35] உருசியாவின் பொருளாதாரம் 2015இல் 2.7 விழுக்காடாக சுருங்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது; ஆனால் வளர்ச்சி வீதம் 0.7 விழுக்காட்டிற்கு 2016இல் திரும்பும் எனவும் அறிவித்துள்ளது.[36] பொருளியல் வரலாறுசோவியத் பொருளாதாரம்1970களில் சோவியத் ஒன்றியம் தேக்க காலத்தை எட்டியது. நவீன பொருளியலின் சிக்கலானத் தேவைகளும் நெகிழ்வற்ற நிர்வாகமும் நடுவண் திட்டமிடுவோர்களை குழப்பியது. மாஸ்கோவிலிருந்த திட்டமிடுவோர் எதிர்கொள்ள வேண்டிய தீர்வுகள் அவர்களுக்கு மீறியதாக இருந்தன. அதிகாரிகள் சார்ந்த நிர்வாகத்தின் செயல்முறைகள் ஊழியர் அன்வயப்படுத்தல், புத்தாக்கம், நுகர்வோர், வழங்குவோர் தொடர்பான தளையற்ற தொடர்பாடலையும் நிறுவனங்களுக்குத் தேவையான நெகிழ்வான எதிர்வினைகளையும் உடனுக்குடன் எடுக்க விடாது தடுத்தது. 1975 முதல் 1985 வரை ஊழலும் இலக்குகளை எட்டியதாக தரவுகளை சாதகமாக மாற்றுதலும் அதிகார இனத்தின் பொது பழக்கமாயிற்று. 1986 முதல் மிக்கைல் கொர்பச்சோவ் பொருளியல் பிரச்சினைகளுக்கானத் தீர்வாக சந்தை சார்ந்த சோசலிசப் பொருளாதாரத்திற்கு மாறினார். அவருடைய கொள்கைகள் உருசியப் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் ஊட்டுவதில் தோல்வியடைந்தது. மாறாக, பெரஸ்ட்ரோயிகா அரசியல் மற்றும் பொருளாதார பிளவுபடலுக்கு வழிவகுத்தது. இது 1991இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பில் முடிந்தது. சந்தைப் பொருளாதாரத்திற்கு பெயர்வு (1991–98)![]() சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு பின்னர் உருசியா பெரும் மாற்றத்தை கண்டுள்ளது; நடுவண் அரசால் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திலிருந்து உலகத்துடன் ஒன்றிணைந்த சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறியுள்ளது. ஊழலும் தாறுமாறான தனியார்மயமாக்கல் செயல்முறைகளும் பெரும் அரசுடமையாக்கப்பட்ட நிறுவனங்களை அரசுடன் தொடர்புடைய "சிலவர் ஆட்சி"க்கு இட்டுச் சென்றதால் பங்குப் பரவல் மிகச் சிலரிடையே மட்டுமே இருந்தது. மீட்சியும் வளர்ச்சியும் (1999–2008)![]() உருசியா ஆகத்து 1998இல் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து மிக விரைவாக மீண்டது. இந்த மீட்சிக்கான முதன்மைக் காரணமாக ரூபிளின் மாற்றுவீதக் குறைப்பு இருந்தது; இதனால் உள்ளூர் பொருட்கள் தேசிய அளவில் போட்டியிடக் கூடியவையாகவும் பன்னாட்டளவில் விலை குறைந்ததாகவும் இருந்தன. 2000க்கும் 2002க்கும் இடையே வளர்ச்சியை தூண்டக்கூடிய பொருளாதார சீர்திருத்தங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டன; முழுமையான வரி சீர்திருத்தம் அனைவருக்கும் வருமான வரியை 13% ஆக ஆக்கியது; கட்டுப்பாடுகளை தளர்த்தும் பரந்த முயற்சிகள் சிறு,குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.[37] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia