உருத்தேனியம் நாற்குளோரைடு
உருத்தேனியம் நாற்குளோரைடு (Ruthenium tetrachloride) RuCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருத்தேனியமும் ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இந்த உலோக உப்பு உருவாகிறது.[1][2][3] பழுப்பு நிறத்தில் படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது. குளிர்ந்த நீரில் கரைந்து நீரேற்றை உருவாக்குக்கிறது.[4]
தயாரிப்புஉருத்தேனியம் ஏழாக்சைடின் மீது ஐதரசன் குளோரைடு வினைபுரிந்தால் உருத்தேனியம் நாற்குளோரைடு உருவாகும்:
இயற்பியல் பண்புகள்உருத்தேனியம் நாற்குளோரைடு பழுப்பு நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது. RuCl4·5H2O என்ற நீரேற்றாகவும் உருத்தேனியம் நாற்குளோரைடு உருவாகிறது. குளிர்ந்த நீரிலும் எத்தனாலிலும் இச்சேர்மம் கரையும். வேதியியல் பண்புகள்மந்தவாயுச் சூழலில் உருத்தேனியம் நாற்குளோரைடை சூடுபடுத்தினால் சிதைவடையும்:
சூடான நீருடன் வினைபுரிந்தாலும் இச்சேர்மம் சிதைவுக்கு உட்படும்:
காற்றில் உருத்தேனியம் நாற்குளோரைடை சூடுபடுத்தினால் ஆக்சிசனால் இது ஆக்சிசனேற்றமடைகிறது:
பயன்கள்வேதி வினைகளில் இச்சேர்மம் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia