உருத்தேனியம்(III) அயோடைடை தயாரிப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன.[1][3]
உருத்தேனியம் டெட்ராக்சைடுடன் நீர்த்த ஐதரோ அயோடிக்கு அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் உருத்தேனியம்(III) அயோடைடு உருவாகிறது:[4]
RuO4 + excess HI → RuI3
பெண்டா அமீன் உருத்தேனியத்தை வெப்பப் பகுப்பு செய்தாலும் உருத்தேனியம்(III) அயோடைடு கிடைக்கிறது:[3]
Ru(NH3)5I3 → RuI3 + 5 NH3
நீரேற்ற உருத்தேனியம்(III) குளோரைடுடன் பொட்டாசியம் அயோடைடின் நீரிய கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் உப்பிடப்பெயர்வு வினை நிகழ்ந்து உருத்தேனியம்(III) அயோடைடு உருவாகிறது:[1]
RuCl3·xH2O + 3 KI → RuI3 + 3 KCl + xH2O
350 பாகை செல்சியசு வெப்பநிலை போன்ற சில நிபந்தனைகளில் பகுதிக் கூறுகளாக உள்ள தனிமங்கள் இணைந்தும் உருத்தேனியம்(III) அயோடைடு உருவாகிறது:[1]
2 Ru + 3 I2 → 2 RuI3
கட்டமைப்பு
உருத்தேனியத்தில் எண்முக ஒருங்கிணைப்பு வடிவத்துடன் உருத்தேனியம்(III) அயோடைடு நீட்டிக்கப்பட்ட கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. உருத்தேனியம்(III) அயோடைடின் குணாதிசயத்தில் உள்ள ஐயம் காரணமாக இது ஆக்சோ ஆலைடு அல்லது ஐதராக்சி ஆலைடாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது,